Total Pageviews

Thursday, June 27, 2013

Babas' Procession

பாபாவின் ஊர்வலம்

பவனி வரும் பாபாவின் அரிய படம்


 .......................................................................................................................................................................................................................





 (Courtesy: Vikas Nandlal &tutorialspoint.com)
பாபாவின் சாவடி ஊர்வல நிகழ்ச்சி ஸ்ரீ சாயி சத்சரித்திர புனித நூலில் அழகாக விவரிக்கப்பட்டுள்ளது. பாபா ஒரு நாள் துவாரகாமாயி மசூதியிலும் - மறுநாள் மசூதிக்கு அருகில் ஓரிரண்டு அறைகள் உள்ள கட்டிடமான சாவடியிலும் தூங்கினார். அவ்வாறு சாவடிக்குப் போகும்முறை வந்ததும் மக்கள் அவரைச் சூழ்ந்து கொள்வர். "இன்னிசைக் கருவிகளை வைத்துக் கொண்டு பஜனை நடத்தினர். அடியவர்களின் கைகளால் தாங்கப்பட்டவாறே பாபா நடந்துவரும் வழியில் துணி மடிப்புகள் விரிக்கப்பட்டிருந்தன. 
தாத்யாபாடீல், அவரது இடது கையையும், மஹல்சாபதி வலது கையையும், பாபு சாஹேப் ஜோக் அவர் தலை மீது குடையையும் பிடித்திருந்தனர்.
பக்தர்கள் இருமருங்கிலும் அன்புடனும், பக்தியுடனும் தொடர்கிறார்கள். அவ்விடத்து வளி மண்டலம் முழுவதும் மகிழ்ச்சி ஊடுருவிப்பரந்து ஊர்வலம் சாவடியை அடைகிறது. அக்காட்சியும் அந்நாட்களும் சென்றுவிட்டன. ஒருவரும் அவைகளை இப்போதோ, எதிர்காலத்திலோ பார்க்கமுடியாது. எனினும் அக்காட்சியின் தோற்றத்தை நினைவுகூர்ந்தும், மனக்கண்முன் கொணர்ந்தும் நமது உள்ளங்களுக்கு அமைதியையும், திருப்தியையும் வழங்கலாம்."
இவ்விதமாக பாபாவின் சாவடி ஊர்வல நிகழ்ச்சி சாயி சத்சரித்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பல்லக்கு உற்சவத்தில் பக்தர்கள் - இந்நாட்களில் (Shirdibaba.org)
இறை அவதாரமாகத் தோன்றிய சாயி பாபாவை, இப்பிரபஞ்சத்தின் சக்கரவர்த்தியாக சகல மரியாதைகளுடன் மக்கள் பல்லக்கு அலங்காரம் செய்து அன்புடன் அழைத்துச் செல்ல முற்பட்டபோதும் பாபா ஒருபோதும் அவர் வாழ்நாளில் பல்லக்கில் ஏறி அமரவில்லை. எளிமையாக நடந்தே சென்றார்.

இன்றைய தலைமுறையினரும், எதிர்கால சந்ததியினரும் இது போன்ற நிகழ்ச்சிகளின் மூலம் என்றோ நடந்த பாபா வாழ்க்கைச் சம்பவங்களோடு தங்களை இணைத்துக் கொள்ள முடிகிறது. பாபாவின் தவ வாழ்க்கையைப் பற்றி, அவர்தம் அற்புத செயல்கள் பற்றி, மக்கள் தொண்டு பற்றி, தியாகமும் எளிமையும் மிகுந்த வாழ்வைப்பற்றி நினைத்துப் பார்க்க முடிகிறது. அன்று ஷீரடியில் நடந்த அதே போன்ற நிகழ்ச்சியில் தாமும் கலந்து கொண்டு பக்தி உணர்வினைப் பெற்றுக் கொள்ள உதவுகிறது. மனித உடலில் நடமாடிய தெய்வத்துடன் ஷீரடியில் சேர்ந்து நடந்து செல்லும் பாக்கியம் இல்லாமற் போனாலும், இன்று இத்தகைய உற்சவங்களில் மக்களுடன் ஒன்றாக பங்குபெறும் பக்தர்கள் இப்போதும் சூட்சும வடிவில் பாபா உள்ளதையும், இன்றும் அற்புதங்களைத் தொடர்ந்து நிகழ்த்தி வருவதையும் அவரவர் நம்பிக்கைக்கும், பொறுமைக்கும், விடா முயற்சிக்கும், நல்ல உயர்ந்த எண்ணங்களுக்கும்-செயல்களுக்கும் ஏற்ப உணர்ந்து மகிழலாம்.

இந்தியாவின் ஆந்திரப் பிரதேசம், ஹைதராபாத் IDPL சாயிபாபா கோவில் பல்லக்கு உற்சவ நிகழ்ச்சியின் ஒளிக்காட்சி:

 
இது ஒரு saibabaidplhyd வெளியீடு

ஓம் சாயி ஸ்ரீ சாயி ஜெய ஜெய சாயி ஓம் சாயி ஸ்ரீ சாயி ஜெய ஜெய சாயி ஓம் சாயி ஸ்ரீ சாயி ஜெய ஜெய சாயி

Thursday, June 20, 2013

Saibaba Google Android Apps!

சாயி பக்தர்களுக்கான கூகிள் ஆன்ட்ராய்ட் ஆப்ஸ் !

ஆன்ட்ராய்ட் செல்பேசிகள் உடையவர்கள் கீழ்க்கண்ட முகவரிக்குச் சென்று இலவசமாக கூகிள் அப்ளிகேஷன்ஸ்- களை பதிவிறக்கம் (Download) செய்து பயன்படுத்தலாம்.
https://play.google.com/store/apps
கூகிள் ப்ளே - வலைத்தளத்தில் கிடைக்கும் அற்புத அப்ளிகேஷன்களின் பெயர்களும், வெளியிட்டவர்களின் பெயர்களும், திரை நிழற்(screen snapshots)படங்களும்
  1. Shirdi Sai Baba - Videos/News - Apps வெளியிட்டோர் : Makeshift Labs. இதைப் பயன்படுத்தி பாபா பற்றிய ஒளிக்காட்சிகளும், செய்திகளும் காணலாம்.
திரை நிழற்படம்
      2. Sai Baba Blessings!- வெளியிட்டோர் :HIGHONSMS. இதில் சாயி ஆசி மற்றும் அறிவுரைக் குறிப்புகள் திரையில் காட்டப்படும்.
திரை நிழற்படம்

    3. Sai Sayings- வெளியிட்டோர் :XLRATECH SOFTWARE SOLUTIONS. இதில் பாபாவின் பதினொன்று உறுதிமொழிகள் உள்ளன.
திரை நிழற்படம்

    4. Pray Sai Baba- வெளியிட்டோர் : RELIZEN apps. இதைப் பயன்படுத்தி பாடல்களை மாற்றி மாற்றிக் கேட்கலாம். தேன், பால், மற்றும் நீர் அபிஷேகம் செய்யலாம். மூன்று வித மாலைகள் போடலாம். மணி அடித்துக் கொண்டே தீப ஆரத்தி எடுக்கலாம். மலர்களைத் தூவி, வெண்கல மணி ஓசை எழுப்பி, வெற்றிச் சங்கு ஊதலாம். விழா நாட்களில் சாயிக்கு சிறப்பு எமரால்டு நெக்லஸ் அணிவித்து அழகு பார்க்கலாம்!
திரை நிழற்படம்

 5. Saibaba Mantra- வெளியிட்டோர் :MUKUND PRASAD. இதில் சாயிபாபா 3D அனிமேஷன் படங்களும், சாயி மந்திரங்களும் உள்ளன. மந்திரங்களை சொல்லிக் கொண்டே, கேட்கலாம்.
திரை நிழற்படம்
  6. Saibaba- வெளியிட்டோர் : Appu Series. இதில் சாயி பற்றிய கதைப் புத்தகம் உள்ளது.
திரை நிழற்படம்
 7. Sai Baba Mantra-  வெளியிட்டோர் :ZENIA TECHNOLOGIES. இதில் குறிப்பிட்ட சில நொடிகளுக்கு ஒரு முறை திரையில் தோன்றும் படத்தினை மாற்றி அமைக்கலாம். சாயி மந்திரத்தை 11, 21, 51, மற்றும் 108 தடவைகள் திரும்பத் திரும்பக் கூறுமாறு அமைக்கலாம்.
திரை நிழற்படம்

8. Sai Chalisa with Audio- வெளியிட்டோர் :TRANSFER JUNCTION APPS. இதில் நாற்பது வரிகள் அடங்கிய சாலீசா மந்திரத்தைக் கேட்கலாம்.போட்டோ சுவர்ப்படமும் (wallpaper) அமைக்கலாம்.
திரை நிழற்படம்
 9. Sai Bhakti- வெளியிட்டோர் :Hungama Digital Media Entertainment Pvt. Ltd. இதில் சாயிபாபா ஆரத்தியும், பஜன்களும் உள்ளன.
திரை நிழற்படம்
 10. Shirdi Saibaba Temple- வெளியிட்டோர் :BackyardSoft. இது உங்கள் போனிலேயே கோவில் உள்ளதுபோல. இதில் பஜன் பாடலைக் காலை அலாரம் போல் செட் செய்யலாம். நமது சொந்த ஒலியை நாமே சேர்க்கக் குறிப்புகள் உள்ளன. 
திரை நிழற்படம்


Sunday, June 16, 2013

Baba in Germany

ஜெர்மனியில் சாயி பாபா
ஜெர்மனி சாயி பாபா

உலகெங்கும் உள்ள ஷீரடி சாயி கோவில்களைப் பற்றி தொடர்ந்து நாம் பார்த்து வருகிறோம். ஜெர்மனி நாட்டிலும் நமது பாபாவுக்கு கோவில் இருக்கிறது. அந்த கோவில் முகவரி:

Shirdi Saibaba Temple, Anton-Burger-Weg 44 60599,
Frankfurt/Main,Frankfurt/Mail-60599,Germany.
Email: shirdisaibaba.frankfurt@yahoo.de


 பிராங்க்பர்ட் மாநகரத்தில் ஷீரடி பாபாவுக்கு ஓர் அழகிய ஆலயத்தினை பக்த கோடிகள் உருவாக்கி உள்ளனர். இவ்வுலக மனித குலத்திற்கே தன்னை தியாகம் செய்த ஏசுநாதரைப் போல, மக்களை நன்றாக வாழ வைக்க வந்த அவதாரமாம் ஷீரடி சாயி நாதர் - இயேசுசாயியாக காட்சியளிப்பது இத்தலத்தின் சிறப்பாகும். ஒவ்வொரு வியாழக்கிழமைகளிலும், சனிக்கிழமைகளிலும் இந்த ஆலயத்தில் பக்தர்கள் கூடி பஜன்கள் பாடியும், ஹனுமான் சாலீச மந்திரம் ஓதியும் இன்புறுவர். 

ஒவ்வொரு நாளும் காகட் ஆரத்தி, மஹா அபிஷேகம், மத்யான ஆரத்தி, தூப் ஆரத்தி, மற்றும் ஷேஜ் ஆரத்தி என (காலை-மதியம்-மாலை-இரவு) ஐந்து தடவைகள் பூஜைகள் செய்யப்படுகின்றன.
 
 


சாயியைப் பணிக.. சாந்தி எங்கும் நிலவும்..

VIPs visit to Shirdi - 11

கடந்த ஜூன் 1- ஆம் தேதி அன்று ஷீரடியில் இந்திய ஜனாதிபதி மேதகு பிரணாப் முகர்ஜி அவர்கள் சாயி தரிசனம் செய்தார்.
நடிகை ஸ்ரீதேவி தனது கணவர் போனி கபூருடன் 


கிரிக்கெட் வீரர் ரவி சாஸ்த்ரி தரிசனம் செய்கிறார் 
நடிகை மற்றும் அரசியல் பிரமுகர் ஹேமமாலினி தரிசனம் செய்யும் காட்சி
ஹிந்தி நடிகர் கோவிந்தா வணங்கும் காட்சி
(Courtesy: Saileela times magazine)

Thursday, June 6, 2013

Lyrics - 6


                                                                                    

                                                                            ஜெய் சாயி


பாபா பாட்டு புஸ்தகம் 


இசைத்தொகுப்பின் பெயர்:  சாயி நாமம் பாடு 
இசை வெளியீட்டு வருடம் :  1993                                                 
பாடியவர் :   மலைசியா வாசுதேவன் 
கவிஞர்:  உளுந்தூர்பேட்டை ஷண்முகம்  
இசை அமைப்பாளர்: மலைசியா வாசுதேவன்
பாடலின் தலைப்பு: ஆனந்த சங்கீதம் ....
இணையத்தில் வெளியிட்டோர் : www.raaga.com ராகா.காம் 

ஆனந்த சங்கீதம் தேனாகும் சாய்நாமம் 
ஆனந்த சங்கீதம் தேனாகும் சாய்நாமம் 
எங்கள் தேவனின் புகழ் பாடுவோம் 
அந்தத் தூயவன் பேர் கூறுவோம் 
சாயி சாயி சாயி சாயி -- சாயி சாயி சாயி சாயி
ஆனந்த சங்கீதம் தேனாகும் சாய்நாமம் 

ஞானி நினைவாலே மேனி தள்ளாட நாம ஸ்மரணமே நாவில் நின்றாட 
ஞானி நினைவாலே மேனி தள்ளாட நாம ஸ்மரணமே நாவில் நின்றாட 
உள்ளம் சிலிர்க்குது உன்னை எண்ணி சாயிபாபா.... சாயிபாபா.... சாயிபாபா.... சாயிபாபா..... 
எனக் கால்களும் நர்த்தன பாவம் கொண்டாட 
கண்கள் மகரந்தக் குளமாகுதே - கண்கள் மகரந்தக் குளமாகுதே 
சாயி சாயி சாயி சாயி -- சாயி சாயி சாயி சாயி
                                                                   
ஆனந்த சங்கீதம் தேனாகும் சாய்நாமம் 
எங்கள் தேவனின் புகழ் பாடுவோம் 
அந்தத் தூயவன் பேர் கூறுவோம் 
ஆனந்த சங்கீதம் தேனாகும் சாய்நாமம் 

ஆயிரம் சூரியன் தோன்றிடும் ஆனால் அஞ்ஞான இருள் நீக்கக் குருவன்றோ வேண்டும் 
ஆயிரம் சூரியன் தோன்றிடும் ஆனால் அஞ்ஞான இருள் நீக்கக் குருவன்றோ வேண்டும் 
வாழ்க சீரடி செல்வமே நீ சாயிபாபா.... சாயிபாபா.... சாயிபாபா.... சாயிபாபா.... 
சாயி சற்குருவின் பாதார விந்தம் சரணம் என்பவர்க்கு சொந்தபந்தம் 
சரணம் என்பவர்க்கு சொந்தபந்தம் 
சாயி சாயி சாயி சாயி -- சாயி சாயி சாயி சாயி

ஆனந்த சங்கீதம் தேனாகும் சாய்நாமம் 
எங்கள் தேவனின் புகழ் பாடுவோம் 
அந்தத் தூயவன் பேர் கூறுவோம் 
சாயி சாயி சாயி சாயி -- சாயி சாயி சாயி சாயி
சாயி சாயி சாயி சாயி -- சாயி சாயி சாயி சாயி
சாயி சாயி சாயி சாயி -- சாயி சாயி சாயி சாயி -- சாயி சாயி சாயி சாயி சாயி சாயி 

(குறிப்பு: இப்பாடலைக் கேட்டுக் கொண்டே பாடுவதற்கு, ராகா.காம் வலைத்தளத்தின் தமிழ் பக்திப் பாடல்கள் பகுதிக்குச் சென்று மேலே குறிப்பிடப்பட்டுள்ள இசைத் தொகுப்பினைக் கேட்கலாம்)

Saturday, June 1, 2013

Sai Mantras

ஷீரடி சாயிபாபா மந்திரங்கள் 

ஸ்ரீ ஷீரடி சாயி சுப்ரபாதம், சாலீசா மற்றும் சங்கீர்த்தனம்  
பாடியவர்கள்: N.S.பிரகாஷ், கோபிகா பூர்ணிமா 
கவிஞர்: இந்திரகாந்தி 
இசை: J.P.சாயி 
Uploaded in Youtube by : indiachants

ஷீரடி சாயிபாபா சுப்ரபாதம் 
பாடியவர்கள்: டாக்டர் R. தியாகராஜன் மற்றும் குழுவினர்
Uploaded in Youtube by : MusicAndChants  

 
சாயி அஷ்டோத்திர நாமாவளி 
வழங்குவோர்: Sai-Ka-Aangan Forum
Uploaded in Youtube by : Rajiv Uppal

ஓம் நமோ சாயி நாராயணாய  ஓம் நமோ சாயி நாராயணாய ஓம் நமோ சாயி நாராயணாய

Sai Paaduka - 2

Upsanai Maharaj
ஸ்ரீ உபாஸனி மஹராஜ் சுவாமிகள் 

சாயி பாதுகை -2

'கம்பவுண்டர், பாயி கிருஷ்ணாஜி அலிபாகர், சகுண் மேரு நாயக், மற்றும் கோவிந்த் கமலாகர் தீக்ஷித் ஆகியோர் பேசிக்கொண்டிருக்கையில், ஷீரடிக்கு சாயிபாபா முதல் விஜயம் செய்தது- புனித வேப்ப மரத்தடியில் அமர்ந்திருந்தது- இவ்வுண்மைகளின் ஞாபகார்த்தம் ஒன்று இருக்கவேண்டும் என்று நினைத்தார்கள். பாபாவின் பாதுகைகளைப் ப்ரதிஷ்டை செய்வதற்கு எண்ணி, அவற்றைச் சாதாரண கல்லில் செய்வதற்கு இருந்தனர். அப்போது பாயியின் நண்பரான கம்பவுண்டர் தனது எஜமானரான டாக்டர் ராமராவ் கோதாரியிடம் இதைத் தெரிவித்தால், அருமையான பாதுகைகளை அவர் வடிவமைப்பார் என்று யோசனை கூறினார். அனைவரும் இந்த யோசனையை விரும்பினர்.

டாக்டர் கோதாரியிடமும் இதைப்பற்றித் தெரிவித்தனர். அவரும் ஷீரடிக்கு வந்து பாதுகைகளின் திட்டத்தை வரைந்தார். கண்டோபா கோவிலில் உள்ள உபாஸனி மஹராஜிடம் அவர் சென்று தனது திட்டத்தை காண்பித்தார். உபாஸனி அதில் பல முன்னேற்றத் திருத்தங்கள் செய்து தாமரைப் புஷ்பங்கள் , சங்கு, சக்கரம், மனிதன் முதலியவற்றை வரைந்து, வேப்பமரத்தின் உயர்வைப் பற்றியும், பாபாவின் யோகசக்தியைப் பற்றியும் உள்ள பின்வரும் ஸ்லோகத்தை அதில் பொறிக்கலாம் என்றும் யோசனை கூறினார். அந்த ஸ்லோகம் பின்வருமாறு:--

"ஸதா நிம்பவ்ருக்ஷஸ்ய மூலாதிவாஸாத் 
ஸூதாஸ்த்ராவிணம் திக்தமப்ய ப்ரியம்தம் 
தரும் கல்பவ்ருக்ஷாதிகம் ஸாதயந்தம் 
நமாமீஷ்வரம் சத்குரும் சாயிநாதம் "

பொருள்:    நான் சாயிநாத் பிரபுவை வணங்குகிறேன். வேப்பமரம் கசப்பாகவும், இனிமையற்றதாகவும் இருப்பினும் அவரது நிரந்தர இருக்கையினால் அமிர்தத்தைக் கசிகிறது, கல்ப விருக்ஷத்தைவிடச் சிறந்தது (அம்மரத்தின் கசிவு, அமிர்தம் என்று அதன் குணப்படுத்தும் தன்மையால் அழைக்கப்படுகிறது)

(Uploaded in Youtube by: Baba Krishna Mohan Rebbapragada)

உபாஸனியின் யோசனைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டு நிறைவேற்றப்பட்டன. பாதுகைகள் பம்பாயில் செய்யப்பட்டு  ஷீரடிக்கு கம்பவுண்டர் மூலம் அனுப்பப்பட்டன'
இந்தியாவின் ஆந்திரப் பிரதேச சாயிதாபாத் சிவசாயி பாபா  மந்திரில் உள்ள  பாதுகைகள் 
(Thanks to: Sivasai baba Mandir, Saidabad, Hyderabad)
அமெரிக்காவின் வாஷிங்டனில் உள்ள ஹிந்து ஆலயம் மற்றும் கலாசார மையத்தில் உள்ள பாதுகைகள் 
(Thanks to: htccwa, Washington, USA)

இன்றைய ஷீரடி துவாரகாமாயிமசூதி உள்ளே பாபாவின் திருஉருவப்படத்தின் முன்னாலும், பாபா வழக்கமாக அமரும் இடமான பூஜை தூண் கீழேயும், மசூதியின் எதிரே உள்ள கல்லில் உள்ள பாபா படத்தின் கீழேயும், பாபா வழக்கமாக நிற்கும் சமையற் கூடத்திலும், பாபா வழக்கமாக சாய்ந்து நிற்கும் சமையற் கூடத்தின் சுவர்ப் பகுதியிலும் பாதுகைகள் அமைக்கப்பட்டுள்ளன. 

ஓம் சாயி சிவ சிவ சாயி ஓம் சாயி சிவ சிவ சாயி ஓம் சாயி சிவ சிவ சாயி ஓம் சாயி சிவ சிவ சாயி