சாயி பாதுகை
அன்பார்ந்த சாயி பக்தர்களே, நீங்கள் இந்தியா முழுவதும் உள்ள பெரும்பாலான சாயி மந்திர் (கோவில்)களுக்குச் செல்லும்பொழுது அங்கு சாயி பாதுகைகள் வைக்கப்பட்டிருப்பதையும், கோவிலுக்கு வரும் பக்தர்கள் அதன் மேல் தலை வைத்து வணங்குவதையும் காணலாம். இந்த வழக்கத்தைப் பற்றி இந்த கட்டுரையில் சிந்திப்போம்.
பாதுகை பூஜை வரலாறு
வால்மீகி ராமாயணத்தில் ராமரை பதினான்கு வருடங்கள் வனவாசம் அனுப்பியபின் பரதர் ரகுவம்ச ராஜ்யத்தின் மன்னராக பதவி ஏற்கும் சூழ்நிலையில், முனிவர் வசிஷ்டரின் அறிவுரைப்படி பரதர், ராமரது பாதுகைகளை (மரத்தில் செய்யப்பட்ட காலணிகள்) தன் தலைமேல் ஏந்தி வந்து அரசவை அரியாசனத்தில் வைத்து வணங்கி வந்தார். ராமர் காட்டில் இருக்கும் நிலையில், ராமரது ஆளுகை போல, ஓர் நிகரான உருவகமாக பாவித்து அந்த பாதுகைகள் பரதரால் நிறுவப்பட்டு மக்களின் மரியாதைக்கும், பேரன்பிற்கும், மதிப்பிற்கும் உரியதாயின (கூடுதல் தகவல்களை ராமாயண நூலில் காண்க). அன்றைய நாளிலிருந்து பாதுகை பூஜை அல்லது மரியாதை வழக்கம் ஏற்பட்டது.
பக்தி யோக வழிமுறையில் சரண பாதுகைகளின் முக்கியத்துவம்
பாதுகைகளில், பாதத்தில் தலை வைத்து வணங்குவது என்பது பரிபூரண சரணாகதியைக் குறிக்கிறது. இது அகங்காரம் அல்லது 'தான்' என்னும் முனைப்பு ஒருவருக்கு நீங்கிய நிலையைக் காட்டும் அறிகுறி. ஹிந்துக் கலாச்சாரத்தில் மஹா விஷ்ணுவின் வாமன அவதாரம், விஷ்ணுவின் பாதக் குறியீட்டினை தலையில் கொண்டுள்ள ஆதிசேஷன், தத்தாத்ரேயர் அவதாரம் என பல நிலைகளில் பாதுகை வழிபாடு முக்கியத்துவம் பெற்றுள்ளது (குறிப்பாக வட இந்தியாவில்). சேர மண்டலத்தில் தோன்றிய நம் ஆதி சங்கரர் தமது குரு பாதுகா ஸ்தோத்திரத்தில் பின்வருமாறு கூறுகிறார்:
'கவித்வ வராஷி நிஷாகராப்யாம் தௌர்பாக்ய தாவாம் புதமாலிகாப்யாம்
தூரி க்ருதானம்ர விபத்திதாப்யாம் நமோ நமஹ ஸ்ரீகுரு பாதுகாப்யாம்'
பொருள்: அறிவுக்கடலாகவும், ஒளி மிகுந்த முழு நிலவாகவும், தீ போன்று சுட்டெரிக்கும் துரதிர்ஷ்டங்களை அணைத்துவிடும் குளிர்ச்சியான நீரைப்போலவும், தம்மிடம் சரணடைந்தோரின் வருத்தங்களைப் போக்கும் தன்மையோடு விளங்கும் குருவின் புனித பாதுகைகளைப் போற்றுகிறேன்.
ஸ்ரீ வைஷ்ணவத்தின் முனிவரான ஸ்ரீ வேதாந்த தேசிகர் 1008 பாமாலையாக ஸ்ரீ ரெங்கநாத பாதுகா சஹஸ்ரம் இயற்றியுள்ளார். இந்தியாவின் கயா நகரில் விஷ்ணு பாதத்திற்கென தனி கோவில் உள்ளது. புத்த கயாவின் போதி மரத்தடியில் புத்தரின் பாதச்சுவடுகள் வழிபடப் படுகின்றன. தீபாவளிப் பண்டிகையன்று மஹாலக்ஷ்மியின் பாதங்கள் மற்றும் கோகுலாஷ்டமியன்று குழந்தை கண்ணனின் பாதச்சுவடுகள் போன்ற அடையாளக் குறிப்புகளை மாவுக் கோலத்தால் வரைவது பாரம்பரிய வழக்கம். வீட்டின் வாசற்படியிலிருந்து பூஜையறைவரை தரையில் வரைவர். தெய்வ சக்தி வீட்டினுள்ளே வரும் உணர்வை நமக்கு ஏற்படுத்தும் உருவகங்களாக இவை விளங்குகின்றன.
அன்றாட உபயோகத்திற்கான பாதுகை - தேக்கு மரம், சந்தன மரம், கருங்காலி மரம், அல்லது இயற்கையாக இறந்துபோன யானையின் தந்தம் போன்றவற்றில் செய்யப்படும். வழிபாட்டிற்காக பயன்படுத்தப் படும் பாதுகைகள் வெள்ளி, வெண்கலம், அல்லது பித்தளையில் செய்யப் படுகின்றன.
சாயிசத்சரித்திரத்தில் பாதுகைகள்
சாயிசத்சரித்திரம் அத்தியாயம்-5, பக்கம் 43 இல் பாதுகைகள் தொடர்பான விஷயங்கள் கீழ்க்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளன:
" சக வருடம் 1834இல் (1912) பம்பாயைச் சேர்ந்த டாக்டர் ராமராவ் கோத்தாரி, ஒருமுறை ஷீரடிக்கு பாபாவின் தரிசனத்துக்காக வந்தார். அவரது கம்பவுண்டரும், அவரது நண்பர் பாயி கிருஷ்ணாஜி அலிபாகரும் அவருடன் வந்தார்கள். கம்பவுண்டரும், பாயியும், சகுண் மேரு நாயக் உடனும் கோவிந்த் கமலாகர் தீட்சித் உடனும் நெருங்கிய நண்பர்களானார்கள்.
சில விஷயங்களைப் பற்றி இவர்கள் பேசிக்கொண்டிருக்கையில்.....
{தொடரும்)
சாயிசத்சரித்திரம் அத்தியாயம்-5, பக்கம் 43 இல் பாதுகைகள் தொடர்பான விஷயங்கள் கீழ்க்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளன:
" சக வருடம் 1834இல் (1912) பம்பாயைச் சேர்ந்த டாக்டர் ராமராவ் கோத்தாரி, ஒருமுறை ஷீரடிக்கு பாபாவின் தரிசனத்துக்காக வந்தார். அவரது கம்பவுண்டரும், அவரது நண்பர் பாயி கிருஷ்ணாஜி அலிபாகரும் அவருடன் வந்தார்கள். கம்பவுண்டரும், பாயியும், சகுண் மேரு நாயக் உடனும் கோவிந்த் கமலாகர் தீட்சித் உடனும் நெருங்கிய நண்பர்களானார்கள்.
சில விஷயங்களைப் பற்றி இவர்கள் பேசிக்கொண்டிருக்கையில்.....
{தொடரும்)
பாபாவுடன் ஷீரடியில் பக்தர்கள் நிற்கும் அரிய புகைப்படம் (Source: Sai devotees Umeshji and Rohit behal) |