Total Pageviews

Monday, March 21, 2011

Maha mantra for Chanting

   ஓம் சாயி ஸ்ரீ சாயி ஜெய ஜெய சாயி

ஸ்ரீ ஷீரடி சாய் பாபாவின் அருள் வேண்டி ஜெபிக்கப்படும் மகா மந்திரம்தான் - 
" ஓம் சாயி ஸ்ரீ சாயி ஜெய ஜெய சாயி" 

இது எந்த மத, இன, மொழியைச் சேர்ந்தவர்களுக்கும்  ஏற்புடைய மந்திரம்.

ஓம் =  இது இந்தப் பிரபஞ்சத்தின் மூல ஓசை. விஞ்ஞான ரீதியில் அமெரிக்காவில் நிரூபிக்கப்பட்டது. இயற்கையோடு நாம் இணைய உதவும் இனிய நாதம். தியானம் அல்லது தவ நிலைக்கு கொண்டு செல்லும் புனித சொற்கள்.

ஸ்ரீ   =  திரு எனும் அடைமொழி. பொருட்செல்வமும், அருட்செல்வமும் உள்ள சிறப்பு வாய்ந்த தெய்வீக சக்தி 

ஜெய ஜெய = வெற்றி வெற்றி வெற்றி  உண்டாகட்டும் 

சாயி  =   மனித உருவில் வாழ்ந்த மாமனிதர், புனிதர், உலகக்குடிமகனார் (World Citizen), சான்றோர் (Role Model), உதாரண புருஷர் (Exemplar), பன்மொழி வித்தகர், உளவியல் வல்லுநர், மருத்துவர், சக்திமான், மக்கள் தொண்டர், மக்கள் பாதுகாவலர், மாமனிதர் போல் மக்களுக்கு உதவிய அதிமனிதர், அதிமனிதர் போல் அதிசயங்கள் புரிந்து, அற்புதங்கள் நிகழ்த்திக் கொண்டு இருக்கும் தெய்வீக அவதாரம், இறைவன், சாதாரணமாக கண்ணுக்கு தெரியாத கடவுள், நம்பிக்கை-பொறுமை-விடாமுயற்சி இவை உடைய நல்ல எண்ணம் கொண்ட பக்தர்களுக்கு இன்றும், என்றும் காட்சி அளிக்கும் பகவான், சித்தர், மகான், பக்கீர், ஆண்டவர், தத்தாத்ரேயர், தெய்வம்.

எவ்வளவு விதம் விதமாய் பெயரிட்டு அழைத்தாலும் அனைத்துலக மக்களுக்கும் தெய்வம் ஒன்றே. 

ஓம் சாயி ஸ்ரீ சாயி ஜெய ஜெய சாயி 












No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.