சென்னை மயிலாப்பூர் சாயி பாபா திருக்கோயில்
அன்பர்களே, தமிழ் நாட்டில் நீங்கள் பாபாவைப் பற்றிய புரிதல் ஏற்பட, தெய்வீக அருளைப் பெற வேண்டி தரிசிக்க வேண்டிய சக்தி வாய்ந்த புனித ஸ்தலம் சென்னையில் உள்ள மயிலாப்பூர் சாயி பாபா திருக்கோயில். இது பற்றி ஏற்கனவே ஒரு கட்டுரையில் பார்த்துள்ளோம். பக்தர்கள் தமது வாழ்நாளில் ஒருமுறையேனும் செல்ல வேண்டிய இடம்.
கோயிலைச் சுற்றி பழச்சாறு நிலையங்கள், பெரிய, சிறிய உணவுக்கடைகள், தேநீர் கடைகள், படக் கடை, பூஜைப் பொருட்கள் கடை என சகல வசதிகளோடு இந்த இடம் உள்ளது. அருகிலேயே மயிலாப்பூர் ரயில் நிலையம். கோயில் உள்ளேயே ஒரு அருமையான பாபா பொம்மை, புத்தகங்கள் மற்றும் படக்கடை உள்ளது.
சாயி ராம் சாயி ராம் சாயி ராம்.