Total Pageviews

Tuesday, October 1, 2019

நெஞ்சிலே நின்றுவிட்டாய் - Song By Vijay Musical

ஆல்பம் : எல்லாமே பாபா
பாடியவர் : ராமு
இசை : சிவபுராணம் D V ரமணி
பாடல் : செங்கதிர்வாணன்
வீடியோ : கதிரவன் கிருஷ்ணன்
விஜய் மியூஸிக்கல்ஸ்
பாடல்வரிகள் :
நெஞ்சிலே நின்று விட்டாய் நினைவிலே நிறைந்தாய் சாயி
தஞ்சமே உன் பாதம் என்று கூடினோமே உன் வாசல்

அன்பிலே நின்றதாலே வணங்கிடுவோம் உன்னை நாளும்
என்றுமே உன்னைத் தானே கதியென்று வணங்கி வாழ்வோம்

எங்களின் தெய்வம் ஸ்ரீ சாயி எல்லாம் நீயே ஸ்ரீ சாயி
பொங்கிடும் கருணை ஸ்ரீ சாயி புண்ணிய மூர்த்தி ஸ்ரீ சாயி
கண்ணில் கனிவைக் காட்டுகிறாய் கவலைகள் யாவும் மாற்றுகிறாய்
மண்ணில் நிம்மதி கூட்டுகிறாய் மனதில் தீபம் ஏற்றுகிறாய்

சிவனும் திருமாலும் உன் வடிவம் கோரிக்கைத் தவறாது நிறைவேறும்
ஆதரவளிக்கும் ஸ்ரீ சாயி அபயம் நீயே ஸ்ரீ சாயி
உன் கோவில் வந்தால் குறையில்லை ஊழ்வினையென்பது இனியில்லை
வந்தோரின் வாழ்வில் தடையில்லை வழங்கிடும் அருளுக்கு அளவில்லை

பாபா உன் புகழ் பாடுகிறோம் பக்தியில் நாங்கள் கூடுகிறோம்
நலமோடு நாங்கள் வாழுகின்றோம் நாளும் உன்பதம் போற்றுகிறோம்

கண்ணில் கனிவைக் காட்டுகிறாய் கவலைகள் யாவும் மாற்றுகிறாய்
மண்ணில் நிம்மதி கூட்டுகிறாய் மனதில் தீபம் ஏற்றுகிறாய்

பாபா பாபா உன் பெருமை பாட பாடத் தரும் இனிமை
குறைகளை நீக்கும் ஸ்ரீ சாயி கொடுப்பாய் அருளே ஸ்ரீ சாயி

கண்ணில் கனிவைக் காட்டுகிறாய் கவலைகள் யாவும் மாற்றுகிறாய்
மண்ணில் நிம்மதி கூட்டுகிறாய் மனதில் தீபம் ஏற்றுகிறாய்

அன்போடு எம்மை காப்பாயே ஆயிரம் நன்மைகள் சேர்ப்பாயே
ஆலயம் வந்தோம் ஸ்ரீ சாயி அமைதியின் உருவே ஸ்ரீ சாயி
உன் கோவில் வந்தால் குறையில்லை ஊழ்வினையென்பது இனியில்லை

வந்தோரின் வாழ்வில் தடையில்லை வழங்கிடும் அருளுக்கு அளவில்லை

நாடிய செல்வம் தருவாயே எப்போதும் துணையாய் வருவாயே
தேடிய தெய்வம் ஸ்ரீ சாயி திருவடி பணிந்தோம் ஸ்ரீ சாயி

கண்ணில் கனிவைக் காட்டுகிறாய் கவலைகள் யாவும் மாற்றுகிறாய்
மண்ணில் நிம்மதி கூட்டுகிறாய் மனதில் தீபம் ஏற்றுகிறாய்

காலம் நேரம் உன் வசமே காரியம் யாவிலும் இனி ஜெயமே
பாவங்கள் போக்கிட ஸ்ரீ சாயி பதமலர் தருவாய் ஸ்ரீ சாயி
கண்ணில் கனிவைக் காட்டுகிறாய் கவலைகள் யாவும் மாற்றுகிறாய்

மண்ணில் நிம்மதி கூட்டுகிறாய் மனதில் தீபம் ஏற்றுகிறாய்

நீ எங்களின் நெஞ்சினிலே இருந்திட வாழ்வில் தோல்வியில்லை
தாரக மந்திரம் ஸ்ரீ சாயி தனிப்பெரும் தெய்வம் ஸ்ரீ சாயி

உன்கோவில் வந்தால் குறையில்லை ஊழ்வினையென்பது இனியில்லை
வந்தோரின் வாழ்வில் தடையில்லை வழங்கிடும் அருளுக்கு அளவில்லை

சூரிய ஒளிதரும் உன்முகமே சோதனை விலக்கிடும் உன்பதமே
சஞ்சலம் நீக்கிடும் ஸ்ரீ சாயி சரணம் சரணம் ஸ்ரீ சாயி
கண்ணில் கனிவைக் காட்டுகிறாய் கவலைகள் யாவும் மாற்றுகிறாய்

மண்ணில் நிம்மதி கூட்டுகிறாய் மனதில் தீபம் ஏற்றுகிறாய்

பற்பல அதிசயம் நிகழ்த்துகிறாய் பலரும் வியக்க வைக்கிnறாய்
கற்பனைக்கெட்டா ஸ்ரீ சாயி கைதொழுதோமே ஸ்ரீ சாயி

நீயே உலகம் என்றிருப்போம் நெஞ்சினில் உன்னை சுமந்திருப்போம்
தவமுனி போலே ஸ்ரீ சாயி தரணியில் நடந்தாய் ஸ்ரீ சாயி

உன்கோவில் வந்தால் குறையில்லை ஊழ்வினையென்பது இனியில்லை

வந்தோரின் வாழ்வில் தடையில்லை வழங்கிடும் அருளுக்கு அளவில்லை

நீதான் எங்களின் குருவானாய் நீங்காத கருணை மழைதந்தாய்
வாழ்விக்க வந்த ஸ்ரீ சாயி வணங்கிடுவோம் உன்னை ஸ்ரீ சாயி

கண்ணில் கனிவைக் காட்டுகிறாய் கவலைகள் யாவும் மாற்றுகிறாய்
மண்ணில் நிம்மதி கூட்டுகிறாய் மனதில் தீபம் ஏற்றுகிறாய்

ஆவது எல்லாம் உனதருளே ஆனந்த வாழ்வும் உனதருளே
வியாழக்கிழமை ஸ்ரீ சாயி தரிசிக்க வருவோம் ஸ்ரீ சாயி
கண்ணில் கனிவைக் காட்டுகிறாய் கவலைகள் யாவும் மாற்றுகிறாய்

மண்ணில் நிம்மதி கூட்டுகிறாய் மனதில் தீபம் ஏற்றுகிறாய்

ஏழை செல்வந்தர் யாவருமே உன்னிடம் வந்தால் சரிசமமே
பேதமையில்லா ஸ்ரீ சாயி பேரருள் புரிவாய் ஸ்ரீ சாயி
உன்கோவில் வந்தால் குறையில்லை ஊழ்வினையென்பது இனியில்லை

வந்தோரின் வாழ்வில் தடையில்லை வழங்கிடும் அருளுக்கு அளவில்லை

நிஷ்டையில் அமர்ந்து நீ இருப்பாய் நிகழப்போவதை அறிந்திருப்பாய்
பார்த்திட வேண்டும் ஸ்ரீ சாயி பகவான் நீயே ஸ்ரீ சாயி
கண்ணில் கனிவைக் காட்டுகிறாய் கவலைகள் யாவும் மாற்றுகிறாய்

மண்ணில் நிம்மதி கூட்டுகிறாய் மனதில் தீபம் ஏற்றுகிறாய்

புவனம் முழுதும் போற்றிடுமே புண்ணியவாழ்வை வேண்டிடுமே
கருணாமூர்த்தி ஸ்ரீ சாயி கலியுக நாதா ஸ்ரீ சாயி

கண்ணில் கனிவைக் காட்டுகிறாய் கவலைகள் யாவும் மாற்றுகிறாய்
மண்ணில் நிம்மதி கூட்டுகிறாய் மனதில் தீபம் ஏற்றுகிறாய்

தஞ்சம் என்று வந்தோமே தாமரைப்பாதம் பணிந்தோமே
திக்குகள் எட்டும் ஸ்ரீ சாயி தினம் உனை வணங்கும் ஸ்ரீ சாயி
உன்கோவில் வந்தால் குறையில்லை ஊழ்வினையென்பது இனியில்லை
வந்தோரின் வாழ்வில் தடையில்லை வழங்கிடும் அருளுக்கு அளவில்லை

விரதம் இருப்போம் பகவானே வெற்றிகள் வழங்கும் பகவானே
சோதனை நீக்கிடும் ஸ்ரீ சாயி சொல்லிட இனிக்கும் ஸ்ரீ சாயிகண்ணில் கனிவைக் காட்டுகிறாய் கவலைகள் யாவும் மாற்றுகிறாய்
மண்ணில் நிம்மதி கூட்டுகிறாய் மனதில் தீபம் ஏற்றுகிறாய்

தீராப்பிணிகள் யாவினையும் ஊதியினாலே தீர்த்துவைத்தாய்
மாறாமனம் கொண்ட ஸ்ரீ சாயி மலரடி பணிந்தோம் ஸ்ரீ சாயி

கண்ணில் கனிவைக் காட்டுகிறாய் கவலைகள் யாவும் மாற்றுகிறாய்
மண்ணில் நிம்மதி கூட்டுகிறாய் மனதில் தீபம் ஏற்றுகிறாய்

ஓரிடம் நில்லா பேரொளியே உள்ளத்தில் வைத்தோம் உனதடியே
ஆதாரம் நீயே ஸ்ரீ சாயி அகிலம் போற்றும் ஸ்ரீ சாயி

உன்கோவில் வந்தால் குறையில்லை ஊழ்வினையென்பது இனியில்லை
வந்தோரின் வாழ்வில் தடையில்லை வழங்கிடும் அருளுக்கு அளவில்லை

பாதை மாறியே நடப்பவரை பரிவுடன் நேர்வழித் திருப்புகிறாய்
தாயும் தந்தையும் ஸ்ரீ சாயி நீயே ஆனாய் ஸ்ரீ சாயி
கண்ணில் கனிவைக் காட்டுகிறாய் கவலைகள் யாவும் மாற்றுகிறாய்

மண்ணில் நிம்மதி கூட்டுகிறாய் மனதில் தீபம் ஏற்றுகிறாய்

கீதம் நூறு பாடிடுவோம் கீர்த்தனை ஆயிரம் இசைத்திடுவோம்
மலர்களில் எத்தனை என்றாலும் மாலை ஒன்று அது நீயே
கண்ணில் கனிவைக் காட்டுகிறாய் கவலைகள் யாவும் மாற்றுகிறாய்
மண்ணில் நிம்மதி கூட்டுகிறாய் மனதில் தீபம் ஏற்றுகிறாய்

உதவி என்று வந்தவர்க்கு உள்ளம் உருகிட நின்றவர்க்கு
இதயம் குளிர்ந்திட ஸ்ரீசாயி இனிதாய் அருள்வாய் ஸ்ரீ சாயி

உன்கோவில் வந்தால் குறையில்லை ஊழ்வினையென்பது இனியில்லை

வந்தோரின் வாழ்வில் தடையில்லை வழங்கிடும் அருளுக்கு அளவில்லை

பாவம் தோஷம் தீருமிடம் பாபா நீயும் இருக்குமிடம்
நிறைந்த செல்வம் ஸ்ரீ சாயி நித்தம் தருவாய் ஸ்ரீ சாயி

கண்ணில் கனிவைக் காட்டுகிறாய் கவலைகள் யாவும் மாற்றுகிறாய்
மண்ணில் நிம்மதி கூட்டுகிறாய் மனதில் தீபம் ஏற்றுகிறாய்

அருவியைப் போலே அருள்கின்றாய் ஆன்மிகச் சுடராய் ஒளிர்கின்றாய்
நெஞ்சோடு வாழும் ஸ்ரீ சாயி நினைவுகள் நீயே ஸ்ரீ சாயி
கண்ணில் கனிவைக் காட்டுகிறாய் கவலைகள் யாவும் மாற்றுகிறாய்
மண்ணில் நிம்மதி கூட்டுகிறாய் மனதில் தீபம் ஏற்றுகிறாய்

முற்றும் துறந்த மாமுனியே முன்வினை போக்கிடும் இறைவடிவே
உத்தமர் நெஞ்சினில் ஸ்ரீ சாயி உறைவாய் என்றும் ஸ்ரீ சாயி
உன்கோவில் வந்தால் குறையில்லை ஊழ்வினையென்பது இனியில்லை
வந்தோரின் வாழ்வில் தடையில்லை வழங்கிடும் அருளுக்கு அளவில்லை

கவலை இல்லா வாழ்வளிக்கும் கருணை வடிவே பகவானே
நினைக்கும் யாவையும் ஸ்ரீ சாயி நிகழ்த்திட வேண்டும் ஸ்ரீ சாயி
கண்ணில் கனிவைக் காட்டுகிறாய் கவலைகள் யாவும் மாற்றுகிறாய்

மண்ணில் நிம்மதி கூட்டுகிறாய் மனதில் தீபம் ஏற்றுகிறாய்

துன்பம் துயரம் வந்தபோதிலே துணையாய் நிற்கும் சாயி நாதனே
அஞ்சாது வாழ்ந்திட ஸ்ரீ சாயி அருளும் பாபா ஸ்ரீ சாயி

கண்ணில் கனிவைக் காட்டுகிறாய் கவலைகள் யாவும் மாற்றுகிறாய்
மண்ணில் நிம்மதி கூட்டுகிறாய் மனதில் தீபம் ஏற்றுகிறாய்

இதயம் முழுதும் உன் வசமே எதுவும் எமக்கு சம்மதமே
பதமலர் தந்து ஸ்ரீ சாயி பக்தரைக் காப்பாய் ஸ்ரீ சாயி

உன்கோவில் வந்தால் குறையில்லை ஊழ்வினையென்பது இனியில்லை
வந்தோரின் வாழ்வில் தடையில்லை வழங்கிடும் அருளுக்கு அளவில்லை

நாளும் நடக்கும் உலகினிலே நல்லதை நாடும் வாழ்வினிலே
நீயே துணைவன் ஸ்ரீ சாயி சத்தியம் இதுவே ஸ்ரீ சாயிகண்ணில் கனிவைக் காட்டுகிறாய் கவலைகள் யாவும் மாற்றுகிறாய்
மண்ணில் நிம்மதி கூட்டுகிறாய் மனதில் தீபம் ஏற்றுகிறாய்

குருவடித் திருவடி சரணமய்யா குவலயம் செழித்திட அருளுமய்யா
எல்லையில்லாத ஸ்ரீ சாயி ஏழுலகாளும் ஸ்ரீ சாயி
கண்ணில் கனிவைக் காட்டுகிறாய் கவலைகள் யாவும் மாற்றுகிறாய்

மண்ணில் நிம்மதி கூட்டுகிறாய் மனதில் தீபம் ஏற்றுகிறாய்

உனக்கென்று நெஞ்சினில் இடம் தருவோம் ஒவ்வொரு நாளும் நினைத்திடுவோம்
சித்தம் நிறைந்தாய் ஸ்ரீ சாயி சீரடி பாபா ஸ்ரீ சாயி
உன்கோவில் வந்தால் குறையில்லை ஊழ்வினையென்பது இனியில்லை
வந்தோரின் வாழ்வில் தடையில்லை வழங்கிடும் அருளுக்கு அளவில்லை

போதும் உந்தன் புதிர் மெளனம் நீ புன்னகைப் பூக்கும் நந்தவனம்
வாடும் எங்களை ஸ்ரீ சாயி வாழ்விக்க வேண்டும் ஸ்ரீ சாயி
கண்ணில் கனிவைக் காட்டுகிறாய் கவலைகள் யாவும் மாற்றுகிறாய்

மண்ணில் நிம்மதி கூட்டுகிறாய் மனதில் தீபம் ஏற்றுகிறாய்

சாயிநாதனே பாரய்யா சஞ்சல நோயை தீரய்யா
தஞ்சம் உந்தன் திருவடியே தருணம் இதுதான் அருள்வாயே

கண்ணில் கனிவைக் காட்டுகிறாய் கவலைகள் யாவும் மாற்றுகிறாய்
மண்ணில் நிம்மதி கூட்டுகிறாய் மனதில் தீபம் ஏற்றுகிறாய்

மூன்று நதியும் உன்னிடமே நொடியில் ஆகிடும் சங்கமமே
வேண்டும் வரம் தரும் ஸ்ரீ சாயி விதியினை மாற்றும் ஸ்ரீ சாயி
உன்கோவில் வந்தால் குறையில்லை ஊழ்வினையென்பது இனியில்லை
வந்தோரின் வாழ்வில் தடையில்லை வழங்கிடும் அருளுக்கு அளவில்லை

அன்புக் கடலே ஸ்ரீ சாயி ஆனந்த மயமே ஸ்ரீ சாயி
உனைபணிந்தோமே ஸ்ரீ சாயி உள்ளம் நிறைந்தாய் ஸ்ரீ சாயி

கண்ணில் கனிவைக் காட்டுகிறாய் கவலைகள் யாவும் மாற்றுகிறாய்
மண்ணில் நிம்மதி கூட்டுகிறாய் மனதில் தீபம் ஏற்றுகிறாய்

கண்ணில் கனிவைக் காட்டுகிறாய் கவலைகள் யாவும் மாற்றுகிறாய்
மண்ணில் நிம்மதி கூட்டுகிறாய் மனதில் தீபம் ஏற்றுகிறாய்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.