This is a blog in Tamil for the devotees of Shirdi Sai baba of India,an avatar of God divine almighty with the purpose of spreading the message "Service to humanity is Service to God"-Makkal thondae Mahesan thondu.
உயர் திரு. தாத்யா பாடீல் அவர்களின் பேரன் திரு. சர்ஜிராவ் கோட்டே பாடீல் அவர்கள்.
ஷீரடியின் திருமதி பைஜா பாய் அம்மையார் இவரின் கொள்ளு பாட்டி ஆவார். பெரும் புண்ணியம் செய்த பாக்யசாலிகளான இவரது குடும்பத்தினரைப் பற்றியும், இவர்கள் பாபா வாழும் காலத்திலேயே அவருக்குச் செய்த தொண்டு பற்றியும் அறிந்து கொள்ள ஸ்ரீ ஷீரடி சாயி சத்சரித்திரம் படியுங்கள். இவர்களைப் பார்ப்பதே சாயி பக்தர்களாகிய நாம் செய்த புண்ணியம் ஆகும்.
நல்லாரைக் காண்பதுவும் நன்றே, நலம் மிக்க
நல்லார் சொல் கேட்பதுவும் நன்றே - நல்லார்
குணங்கள் உரைப்பதுவும் நன்றே, அவரோடு
இணங்கி இருப்பதுவும் நன்று. - ஸ்ரீ ஔவையார், மூதுரை.
ஆல்பம் : எல்லாமே பாபா பாடியவர் : ராமு இசை : சிவபுராணம் D V ரமணி பாடல் : செங்கதிர்வாணன் வீடியோ : கதிரவன் கிருஷ்ணன் விஜய் மியூஸிக்கல்ஸ் பாடல்வரிகள் : நெஞ்சிலே நின்று விட்டாய் நினைவிலே நிறைந்தாய் சாயி
தஞ்சமே உன் பாதம் என்று கூடினோமே உன் வாசல் அன்பிலே நின்றதாலே வணங்கிடுவோம் உன்னை நாளும்
என்றுமே உன்னைத் தானே கதியென்று வணங்கி வாழ்வோம் எங்களின் தெய்வம் ஸ்ரீ சாயி எல்லாம் நீயே ஸ்ரீ சாயி பொங்கிடும் கருணை ஸ்ரீ சாயி புண்ணிய மூர்த்தி ஸ்ரீ சாயி கண்ணில் கனிவைக் காட்டுகிறாய் கவலைகள் யாவும் மாற்றுகிறாய் மண்ணில் நிம்மதி கூட்டுகிறாய் மனதில் தீபம் ஏற்றுகிறாய்
சிவனும் திருமாலும் உன் வடிவம் கோரிக்கைத் தவறாது நிறைவேறும் ஆதரவளிக்கும் ஸ்ரீ சாயி அபயம் நீயே ஸ்ரீ சாயிஉன் கோவில் வந்தால் குறையில்லை ஊழ்வினையென்பது இனியில்லை வந்தோரின் வாழ்வில் தடையில்லை வழங்கிடும் அருளுக்கு அளவில்லை பாபா உன் புகழ் பாடுகிறோம் பக்தியில் நாங்கள் கூடுகிறோம் நலமோடு நாங்கள் வாழுகின்றோம் நாளும் உன்பதம் போற்றுகிறோம் கண்ணில் கனிவைக் காட்டுகிறாய் கவலைகள் யாவும் மாற்றுகிறாய் மண்ணில் நிம்மதி கூட்டுகிறாய் மனதில் தீபம் ஏற்றுகிறாய் பாபா பாபா உன் பெருமை பாட பாடத் தரும் இனிமை குறைகளை நீக்கும் ஸ்ரீ சாயி கொடுப்பாய் அருளே ஸ்ரீ சாயி
கண்ணில் கனிவைக் காட்டுகிறாய் கவலைகள் யாவும் மாற்றுகிறாய் மண்ணில் நிம்மதி கூட்டுகிறாய் மனதில் தீபம் ஏற்றுகிறாய் அன்போடு எம்மை காப்பாயே ஆயிரம் நன்மைகள் சேர்ப்பாயே ஆலயம் வந்தோம் ஸ்ரீ சாயி அமைதியின் உருவே ஸ்ரீ சாயிஉன் கோவில் வந்தால் குறையில்லை ஊழ்வினையென்பது இனியில்லை வந்தோரின் வாழ்வில் தடையில்லை வழங்கிடும் அருளுக்கு அளவில்லை நாடிய செல்வம் தருவாயே எப்போதும் துணையாய் வருவாயே தேடிய தெய்வம் ஸ்ரீ சாயி திருவடி பணிந்தோம் ஸ்ரீ சாயி கண்ணில் கனிவைக் காட்டுகிறாய் கவலைகள் யாவும் மாற்றுகிறாய் மண்ணில் நிம்மதி கூட்டுகிறாய் மனதில் தீபம் ஏற்றுகிறாய் காலம் நேரம் உன் வசமே காரியம் யாவிலும் இனி ஜெயமே பாவங்கள் போக்கிட ஸ்ரீ சாயி பதமலர் தருவாய் ஸ்ரீ சாயிகண்ணில் கனிவைக் காட்டுகிறாய் கவலைகள் யாவும் மாற்றுகிறாய் மண்ணில் நிம்மதி கூட்டுகிறாய் மனதில் தீபம் ஏற்றுகிறாய் நீ எங்களின் நெஞ்சினிலே இருந்திட வாழ்வில் தோல்வியில்லை தாரக மந்திரம் ஸ்ரீ சாயி தனிப்பெரும் தெய்வம் ஸ்ரீ சாயி உன்கோவில் வந்தால் குறையில்லை ஊழ்வினையென்பது இனியில்லை வந்தோரின் வாழ்வில் தடையில்லை வழங்கிடும் அருளுக்கு அளவில்லை சூரிய ஒளிதரும் உன்முகமே சோதனை விலக்கிடும் உன்பதமே சஞ்சலம் நீக்கிடும் ஸ்ரீ சாயி சரணம் சரணம் ஸ்ரீ சாயி கண்ணில் கனிவைக் காட்டுகிறாய் கவலைகள் யாவும் மாற்றுகிறாய் மண்ணில் நிம்மதி கூட்டுகிறாய் மனதில் தீபம் ஏற்றுகிறாய் பற்பல அதிசயம் நிகழ்த்துகிறாய் பலரும் வியக்க வைக்கிnறாய் கற்பனைக்கெட்டா ஸ்ரீ சாயி கைதொழுதோமே ஸ்ரீ சாயி நீயே உலகம் என்றிருப்போம் நெஞ்சினில் உன்னை சுமந்திருப்போம் தவமுனி போலே ஸ்ரீ சாயி தரணியில் நடந்தாய் ஸ்ரீ சாயி உன்கோவில் வந்தால் குறையில்லை ஊழ்வினையென்பது இனியில்லை வந்தோரின் வாழ்வில் தடையில்லை வழங்கிடும் அருளுக்கு அளவில்லை நீதான் எங்களின் குருவானாய் நீங்காத கருணை மழைதந்தாய் வாழ்விக்க வந்த ஸ்ரீ சாயி வணங்கிடுவோம் உன்னை ஸ்ரீ சாயி கண்ணில் கனிவைக் காட்டுகிறாய் கவலைகள் யாவும் மாற்றுகிறாய் மண்ணில் நிம்மதி கூட்டுகிறாய் மனதில் தீபம் ஏற்றுகிறாய் ஆவது எல்லாம் உனதருளே ஆனந்த வாழ்வும் உனதருளே வியாழக்கிழமை ஸ்ரீ சாயி தரிசிக்க வருவோம் ஸ்ரீ சாயிகண்ணில் கனிவைக் காட்டுகிறாய் கவலைகள் யாவும் மாற்றுகிறாய் மண்ணில் நிம்மதி கூட்டுகிறாய் மனதில் தீபம் ஏற்றுகிறாய் ஏழை செல்வந்தர் யாவருமே உன்னிடம் வந்தால் சரிசமமே பேதமையில்லா ஸ்ரீ சாயி பேரருள் புரிவாய் ஸ்ரீ சாயிஉன்கோவில் வந்தால் குறையில்லை ஊழ்வினையென்பது இனியில்லை வந்தோரின் வாழ்வில் தடையில்லை வழங்கிடும் அருளுக்கு அளவில்லை நிஷ்டையில் அமர்ந்து நீ இருப்பாய் நிகழப்போவதை அறிந்திருப்பாய் பார்த்திட வேண்டும் ஸ்ரீ சாயி பகவான் நீயே ஸ்ரீ சாயிகண்ணில் கனிவைக் காட்டுகிறாய் கவலைகள் யாவும் மாற்றுகிறாய் மண்ணில் நிம்மதி கூட்டுகிறாய் மனதில் தீபம் ஏற்றுகிறாய் புவனம் முழுதும் போற்றிடுமே புண்ணியவாழ்வை வேண்டிடுமே கருணாமூர்த்தி ஸ்ரீ சாயி கலியுக நாதா ஸ்ரீ சாயி கண்ணில் கனிவைக் காட்டுகிறாய் கவலைகள் யாவும் மாற்றுகிறாய் மண்ணில் நிம்மதி கூட்டுகிறாய் மனதில் தீபம் ஏற்றுகிறாய் தஞ்சம் என்று வந்தோமே தாமரைப்பாதம் பணிந்தோமே
திக்குகள் எட்டும் ஸ்ரீ சாயி தினம் உனை வணங்கும் ஸ்ரீ சாயி
சோதனை நீக்கிடும் ஸ்ரீ சாயி சொல்லிட இனிக்கும் ஸ்ரீ சாயிகண்ணில் கனிவைக் காட்டுகிறாய் கவலைகள் யாவும் மாற்றுகிறாய் மண்ணில் நிம்மதி கூட்டுகிறாய் மனதில் தீபம் ஏற்றுகிறாய் தீராப்பிணிகள் யாவினையும் ஊதியினாலே தீர்த்துவைத்தாய் மாறாமனம் கொண்ட ஸ்ரீ சாயி மலரடி பணிந்தோம் ஸ்ரீ சாயி கண்ணில் கனிவைக் காட்டுகிறாய் கவலைகள் யாவும் மாற்றுகிறாய் மண்ணில் நிம்மதி கூட்டுகிறாய் மனதில் தீபம் ஏற்றுகிறாய் ஓரிடம் நில்லா பேரொளியே உள்ளத்தில் வைத்தோம் உனதடியே ஆதாரம் நீயே ஸ்ரீ சாயி அகிலம் போற்றும் ஸ்ரீ சாயி உன்கோவில் வந்தால் குறையில்லை ஊழ்வினையென்பது இனியில்லை வந்தோரின் வாழ்வில் தடையில்லை வழங்கிடும் அருளுக்கு அளவில்லை பாதை மாறியே நடப்பவரை பரிவுடன் நேர்வழித் திருப்புகிறாய் தாயும் தந்தையும் ஸ்ரீ சாயி நீயே ஆனாய் ஸ்ரீ சாயிகண்ணில் கனிவைக் காட்டுகிறாய் கவலைகள் யாவும் மாற்றுகிறாய் மண்ணில் நிம்மதி கூட்டுகிறாய் மனதில் தீபம் ஏற்றுகிறாய்
கீதம் நூறு பாடிடுவோம் கீர்த்தனை ஆயிரம் இசைத்திடுவோம்
மலர்களில் எத்தனை என்றாலும் மாலை ஒன்று அது நீயே
கண்ணில் கனிவைக் காட்டுகிறாய் கவலைகள் யாவும் மாற்றுகிறாய் மண்ணில் நிம்மதி கூட்டுகிறாய் மனதில் தீபம் ஏற்றுகிறாய் உதவி என்று வந்தவர்க்கு உள்ளம் உருகிட நின்றவர்க்கு இதயம் குளிர்ந்திட ஸ்ரீசாயி இனிதாய் அருள்வாய் ஸ்ரீ சாயி உன்கோவில் வந்தால் குறையில்லை ஊழ்வினையென்பது இனியில்லை வந்தோரின் வாழ்வில் தடையில்லை வழங்கிடும் அருளுக்கு அளவில்லை பாவம் தோஷம் தீருமிடம் பாபா நீயும் இருக்குமிடம் நிறைந்த செல்வம் ஸ்ரீ சாயி நித்தம் தருவாய் ஸ்ரீ சாயி கண்ணில் கனிவைக் காட்டுகிறாய் கவலைகள் யாவும் மாற்றுகிறாய் மண்ணில் நிம்மதி கூட்டுகிறாய் மனதில் தீபம் ஏற்றுகிறாய்
அருவியைப் போலே அருள்கின்றாய் ஆன்மிகச் சுடராய் ஒளிர்கின்றாய் நெஞ்சோடு வாழும் ஸ்ரீ சாயி நினைவுகள் நீயே ஸ்ரீ சாயி
கண்ணில் கனிவைக் காட்டுகிறாய் கவலைகள் யாவும் மாற்றுகிறாய் மண்ணில் நிம்மதி கூட்டுகிறாய் மனதில் தீபம் ஏற்றுகிறாய்
உத்தமர் நெஞ்சினில் ஸ்ரீ சாயி உறைவாய் என்றும் ஸ்ரீ சாயி உன்கோவில் வந்தால் குறையில்லை ஊழ்வினையென்பது இனியில்லை வந்தோரின் வாழ்வில் தடையில்லை வழங்கிடும் அருளுக்கு அளவில்லை
கவலை இல்லா வாழ்வளிக்கும் கருணை வடிவே பகவானே நினைக்கும் யாவையும் ஸ்ரீ சாயி நிகழ்த்திட வேண்டும் ஸ்ரீ சாயிகண்ணில் கனிவைக் காட்டுகிறாய் கவலைகள் யாவும் மாற்றுகிறாய் மண்ணில் நிம்மதி கூட்டுகிறாய் மனதில் தீபம் ஏற்றுகிறாய்
துன்பம் துயரம் வந்தபோதிலே துணையாய் நிற்கும் சாயி நாதனே
அஞ்சாது வாழ்ந்திட ஸ்ரீ சாயி அருளும் பாபா ஸ்ரீ சாயி
கண்ணில் கனிவைக் காட்டுகிறாய் கவலைகள் யாவும் மாற்றுகிறாய் மண்ணில் நிம்மதி கூட்டுகிறாய் மனதில் தீபம் ஏற்றுகிறாய்
இதயம் முழுதும் உன் வசமே எதுவும் எமக்கு சம்மதமே
பதமலர் தந்து ஸ்ரீ சாயி பக்தரைக் காப்பாய் ஸ்ரீ சாயி
நீயே துணைவன் ஸ்ரீ சாயி சத்தியம் இதுவே ஸ்ரீ சாயிகண்ணில் கனிவைக் காட்டுகிறாய் கவலைகள் யாவும் மாற்றுகிறாய் மண்ணில் நிம்மதி கூட்டுகிறாய் மனதில் தீபம் ஏற்றுகிறாய் குருவடித் திருவடி சரணமய்யா குவலயம் செழித்திட அருளுமய்யா எல்லையில்லாத ஸ்ரீ சாயி ஏழுலகாளும் ஸ்ரீ சாயிகண்ணில் கனிவைக் காட்டுகிறாய் கவலைகள் யாவும் மாற்றுகிறாய் மண்ணில் நிம்மதி கூட்டுகிறாய் மனதில் தீபம் ஏற்றுகிறாய்
உனக்கென்று நெஞ்சினில் இடம் தருவோம் ஒவ்வொரு நாளும் நினைத்திடுவோம்
சித்தம் நிறைந்தாய் ஸ்ரீ சாயி சீரடி பாபா ஸ்ரீ சாயி உன்கோவில் வந்தால் குறையில்லை ஊழ்வினையென்பது இனியில்லை வந்தோரின் வாழ்வில் தடையில்லை வழங்கிடும் அருளுக்கு அளவில்லை
போதும் உந்தன் புதிர் மெளனம் நீ புன்னகைப் பூக்கும் நந்தவனம் வாடும் எங்களை ஸ்ரீ சாயி வாழ்விக்க வேண்டும் ஸ்ரீ சாயிகண்ணில் கனிவைக் காட்டுகிறாய் கவலைகள் யாவும் மாற்றுகிறாய் மண்ணில் நிம்மதி கூட்டுகிறாய் மனதில் தீபம் ஏற்றுகிறாய்
சாயிநாதனே பாரய்யா சஞ்சல நோயை தீரய்யா
தஞ்சம் உந்தன் திருவடியே தருணம் இதுதான் அருள்வாயே
கண்ணில் கனிவைக் காட்டுகிறாய் கவலைகள் யாவும் மாற்றுகிறாய் மண்ணில் நிம்மதி கூட்டுகிறாய் மனதில் தீபம் ஏற்றுகிறாய் மூன்று நதியும் உன்னிடமே நொடியில் ஆகிடும் சங்கமமே வேண்டும் வரம் தரும் ஸ்ரீ சாயி விதியினை மாற்றும் ஸ்ரீ சாயி உன்கோவில் வந்தால் குறையில்லை ஊழ்வினையென்பது இனியில்லை வந்தோரின் வாழ்வில் தடையில்லை வழங்கிடும் அருளுக்கு அளவில்லை அன்புக் கடலே ஸ்ரீ சாயி ஆனந்த மயமே ஸ்ரீ சாயி உனைபணிந்தோமே ஸ்ரீ சாயி உள்ளம் நிறைந்தாய் ஸ்ரீ சாயி கண்ணில் கனிவைக் காட்டுகிறாய் கவலைகள் யாவும் மாற்றுகிறாய் மண்ணில் நிம்மதி கூட்டுகிறாய் மனதில் தீபம் ஏற்றுகிறாய் கண்ணில் கனிவைக் காட்டுகிறாய் கவலைகள் யாவும் மாற்றுகிறாய் மண்ணில் நிம்மதி கூட்டுகிறாய் மனதில் தீபம் ஏற்றுகிறாய்
சோளிங்கர் பாபா திருக்கோவிலில் 21/6/19ஒன்பதாம் ஆண்டு முடிந்து பத்தாம் ஆண்டு அடி எடுத்து வைக்கும் இத்திருக்கோவிலில் கும்பாபிஷேகமும் யாகங்களும் சிறப்பு அபிஷேகங்களும் நடைபெற்றது இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு பாபாவின் அருளைப் பெற்றனர் அவர்களுக்கு அன்னதானமும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. Sholinghur is a selection grade town panchayat under Walajapet taluk in Vellore district of Tamil Nadu, India. The town is famous in Tamil Nadu and other neighboring states for the Lakshmi Narasimha Swamy temple.
இசைத் தொகுப்பு : பகவான் பாபா பாடியவர்: உன்னிமேனன் கவிஞர்: செங்கதிர்வாணன் இசை: பிரதீப் ஒளிக்காட்சி: கதிரவன் கிருஷ்ணன் விஜய் ம்யூசிக்கல்ஸ் தயாரிப்பு
பாடல் வரிகள் :வரவேண்டும் நீயே சாயி பாபா
வரம் வேண்டினோமே சாயி பாபாதரவேண்டும் நீயே சாயி பாபா
கரம் குவித்தோமே சாயி பாபாஹரே ராம ராமா சாயி ராமா
ஹரே ராம ராமா சாயி ராமா
ஹரே கிருஷ்ண கிருஷ்ணா சாயி கிருஷ்ணா
ஹரே கிருஷ்ண கிருஷ்ணா சாயி கிருஷ்ணாகுறையேதுமில்லா சாயி நாதா
குழலூதும் கண்ணா சாயி நாதாபரந்தாமன் நீயே சாயி நாதா
பணிந்தோமே உன்னை சாயி நாதா ஹரே ராம ராமா சாயி ராமா
ஹரே ராம ராமா சாயி ராமா
ஹரே கிருஷ்ண கிருஷ்ணா சாயி கிருஷ்ணா
ஹரே கிருஷ்ண கிருஷ்ணா சாயி கிருஷ்ணா
அறியாமை போக்கும் சாயி பாபா
அடியாரை காக்கும் சாயி பாபா
புரியாத புதிரே சாயி பாபா
புலனாகும் அறிவே சாயி பாபா ஹரே ராம ராமா சாயி ராமா
ஹரே ராம ராமா சாயி ராமா
ஹரே கிருஷ்ண கிருஷ்ணா சாயி கிருஷ்ணா
ஹரே கிருஷ்ண கிருஷ்ணா சாயி கிருஷ்ணா எளியோனாய் வந்த சாயி நாதா
இருள் போக்கும் சுடரே சாயி நாதா
தெளிவான நதியே சாயி நாதா
தினம் போற்றினோமே சாயி நாதா ஹரே ராம ராமா சாயி ராமா
ஹரே ராம ராமா சாயி ராமா
ஹரே கிருஷ்ண கிருஷ்ணா சாயி கிருஷ்ணா
ஹரே கிருஷ்ண கிருஷ்ணா சாயி கிருஷ்ணா பிணியாவும் தீர்க்கும் சாயி பாபா
பிழையாவும் நீக்கும் சாயி பாபா
கனிவோடு பார்க்கும் சாயி பாபா
கருணாகரனே சாயி பாபா ஹரே ராம ராமா சாயி ராமா
ஹரே ராம ராமா சாயி ராமா
ஹரே கிருஷ்ண கிருஷ்ணா சாயி கிருஷ்ணா
ஹரே கிருஷ்ண கிருஷ்ணா சாயி கிருஷ்ணா பரப்பிரம்மம் நீயே சாயி நாதா
பரம் பொருளானாய் சாயி நாதா
அருளாளன் நீயே சாயி நாதா
அடையாத கதவே சாயி நாதா ஹரே ராம ராமா சாயி ராமா
ஹரே ராம ராமா சாயி ராமா
ஹரே கிருஷ்ண கிருஷ்ணா சாயி கிருஷ்ணா
ஹரே கிருஷ்ண கிருஷ்ணா சாயி கிருஷ்ணா மழைமேகம் நீயே சாயி பாபா
மலர்த்தோட்டம் நீயே சாயி பாபா
அழைத்தோமே உன்னை சாயி பாபா
அணையாத விளக்கே சாயி பாபா ஹரே ராம ராமா சாயி ராமா
ஹரே ராம ராமா சாயி ராமா
ஹரே கிருஷ்ண கிருஷ்ணா சாயி கிருஷ்ணா
ஹரே கிருஷ்ண கிருஷ்ணா சாயி கிருஷ்ணா நிழலாகத் தொடரும் சாயி நாதா
நிலையான நிதியே சாயி நாதா
வழங்காயோ அருளே சாயி நாதா
வணங்காதோர் உண்டோ சாயி நாதா ஹரே ராம ராமா சாயி ராமா (சாயி பாபா .... சாயி நாதா...)
ஹரே ராம ராமா சாயி ராமா
ஹரே கிருஷ்ண கிருஷ்ணா சாயி கிருஷ்ணா
ஹரே கிருஷ்ண கிருஷ்ணா சாயி கிருஷ்ணா .........
சமீப காலங்களாக இந்தியா மற்றும் உலகம் முழுவதும் சாயி கோயில்கள் புதிது புதிதாக தோன்றி வருகின்றன. அதைப்போல யூட்யூப் தளத்திலும் பல்வேறு சாயி பக்தர்களின் சேனல்கள் உருவாகி வருகின்றதைக் காண முடிகிறது.
அவர்கள் பதிவிடும் பல சிறப்பான பதிவுகள் எல்லாவற்றையும் இந்த வலைப்பூவில் உடனுக்குடன் தெரிவிப்பது சிரமம் என்பதால், கீழே உள்ள பட்டியலில் கொடுக்கப்பட்டுள்ள சேனல் பெயர்களை அப்படியே 'காப்பி' செய்து யூட்யூப் வலைத்தளம் சென்று தேடல் பொறியில் 'பேஸ்ட்' செய்து, பின் அந்தந்த சேனல்களை 'சப்ஸ்க்ரைப்' செய்து கொண்டால் அருமையான அவர்களின் ஒளிக்காட்சிகளை தொடர்ந்து கண்டு மகிழ முடியும்.
டாக்டர் ரபீந்தர்நாத் கக்கார்யாவின் "Shirdi - within and beyond" என்ற நூல் பற்றிய ஒளிக்காட்சி மேலே உள்ளது. இந்த நூல் ஷீரடி மற்றும் பாபாவின் வரலாற்று பொக்கிஷ பெட்டகம் போல மிக அரிய புகைப்படங்கள் அடங்கியது. ஆராய்ந்து வெளியிடப்பட்டுள்ள நூல். விலை ரூ.750 இந்திய ரூபாய்கள். இன்னும் இது போன்ற மிகச் சிறந்த நூல்களை வெளியிடும் ஸ்டெர்லிங் பதிப்பகத்தாரின் வலைத்தளம் பார்வையிட : sterlingpublishers டாட் இன்.
தாஸ்கணு மஹராஜ், ஸ்ரீ B.V. நரசிம்ம ஸ்வாமிகள், K.K. தீக்ஷித், டாக்டர் C.B. சத்பதி, ரங்கஸ்வாமி பார்த்தசாரதி, மரியான் வாரன், டாக்டர் துரை அருள்நேயம், ராகேஷ் ஜுனேஜா, S. சேஷாத்ரி, வின்னி சித்லூரி போன்ற பல சாயி பக்தி எழுத்தாளர்களின் நூல்களை இந்த பதிப்பகம் வெளியிட்டுள்ளது.
இந்தியாவிலேயே முதல் ஆன்மீக தீம் பார்க் - ஷீர்டியில் !! Sun-N-Sand ஹோட்டல் அருகில், நிகோஜ் போஸ்ட், ரஹதா தாலுகா, அஹ்மத்நகர், ஷீர்டி, மஹாராஷ்ட்ரா, இந்தியா
1967 - ஆம் ஆண்டு முதல் வெளியிடப்படும் சித்திர கதை இதழ்களான 'அமர் சித்ர கதா' இந்தியாவில் மிகவும் புகழ் பெற்றது. இந்தியாவின் பெருமைமிகு ஆன்மீகப் பாரம்பரியத்தை சிறுவர் சிறுமியர் முதல் இளைஞர் முதியோர் வரை எளிமையாகப் புரிந்து கொள்ளும்படி மிக அருமையான ஓவியங்களுடன் வெளிவந்த படக் கதைகள் (Comics) மற்றும் 'அம்புலிமாமா, 'பூந்தளிர்', 'கோகுலம்' போன்ற சிறுவர் பத்திரிக்கைகள் வந்த பொற்காலமாக இருந்தது. தற்போது தொலைக்காட்சி - இணைய ஊடகங்களின் வருகையால் அப் பத்திரிக்கை வாசிக்கும் பழக்கம் குறைந்திருந்தாலும் எதிர்கால சமுதாயத்திற்கும் படிக்க வேண்டிய அற்புதமான நூல்கள் அவை.
அந்த படக்கதை உலகில் முன்னோடியான அமர் சித்ர கதா நிறுவனத்தில் இன்றும் 400-க்கும் மேற்பட்ட தலைப்புகளில் புத்தகங்கள் கிடைக்கின்றன. உலகம் முழுவதும் 100 மில்லியன் பிரதிகளுக்கு மேல் விற்பனையாகி உள்ளன. இந்தியா முழுவதும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடைகளில் அவை கிடைக்கின்றன. மும்பை மாநகரின் கிழக்கு அந்தேரி பகுதியில் இருந்து வெளியாகி வரும் இந்த நிறுவன வெளியீடுகளில் ஷீரடி சாயிபாபா பற்றிய அருமையான பலவண்ண ஆங்கில சித்திரப் படக்கதை புத்தகமே "டேல்ஸ் ஆஃப் சாயிபாபா" என்ற நூல் ஆகும். அழகிய படங்கள் உள்ள இந்நூலினை திருமதி ஷோபா கங்குலி உருவாக்கி உள்ளார். இந்நூல் ஆங்கிலத்தில் இருந்தாலும் பல மொழிகளிலும் மொழிபெயர்த்தால் எல்லா மொழி பக்தர்களும் பயன் அடைவர். இருப்பினும் ஆங்கில மொழியை அன்றாட வாழ்வில் உபயோகிக்கும், உலகம் முழுவதும் இருக்கும் சாயி பக்தர்களின் குழந்தைகளுக்குப் பெரிதும் பயன்படும். ஒவ்வொரு சாயி பக்தரின் வீட்டிலும் இருக்க வேண்டிய நூல். பல பக்கங்கள் உடைய ஒரு பெரிய நூலைவிட, சிறிய வண்ணப் படக்கதை நூல் தரும் வாசிப்பு அனுபவம் மிகவும் சிறப்பானது. அனைத்து சாயி பக்தர்களும் அன்புப் பரிசாக வழங்க வேண்டிய நூல். அமேசான் வலைத்தளத்தில் இந்திய ருபாய்.37-க்கும் கிண்டில் பதிப்பு ரூ.35-க்கும் கிடைக்கிறது. வாங்கிப் படித்து மகிழுங்கள். மேலும் விபரங்களுக்கு ack-media டாட் காம், மற்றும் amarchitrakatha டாட் காம் வலைத்தளங்களைப் பார்வையிடுங்கள். சாயிராம் சாயிராம் சாயிராம்