Total Pageviews

Thursday, March 2, 2017

Book Review - 2

நூல் மதிப்புரை 

                  சாயி அன்பர்களே, ஷீரடியில் சாயி பாபா வசித்திருந்த காலத்தில் அவரை நேரில் தரிசித்து ஆசி பெற்ற பக்தர், சாயி தொண்டர், பாடகர் திரு. தாஸ்கணு மஹராஜ் அவர்கள். தமது தாய் மொழியான மராத்தியில் அவர் இயற்றிய புகழ் பெற்ற நூலே "ஸ்ரீ சாயிநாத ஸ்தவனமஞ்ஜரீ" ஆகும். பாபாவின் அன்புத் தொண்டர்களில் ஒருவராகிய இவர் இயற்றிய பாடல்கள் இன்றளவும் ஷீரடியில் பாடப்பட்டு வருகின்றன. 1918 -இல் எழுதப்பட்ட இந்நூல் கிட்டத்தட்ட நூறு ஆண்டுகள் பழைமையானது மட்டுமல்ல , ஆயிரங்கணக்கான சாயி பக்தர்களால் தொடர்ந்து படிக்கப்பட்டு வரும் நூலும் ஆகும். மிகப் பிரபலமான இந்நூல் தமிழில் இல்லாத குறையை திரு. சித்தப்பா நாராயண கிருஷ்ணமூர்த்தி அவர்கள் தம் சிறந்த கருத்துரை மூலம் நீக்கி உள்ளார். இந்த நூல் அழகிய வண்ணப்படத்துடன் அனைவரும் வாங்கும் விலையில் வெளியிடப்பட்டு உள்ளது.


புகழ் பெற்ற நூல் ஸ்ரீ சாயிநாத ஸ்தவன மஞ்ஜரீ  


இந்நூலின் சிறப்பு அம்சங்கள் : 

                ஸ்ரீ தாஸ்கணு மஹராஜ் அவர்களின் அரிய புகைப்படம், துதிப்பாடல்கள் தமிழில் தெளிவான எழுத்துக்களிலும்- தமிழிலேயே அவற்றின் கருத்துரையுடன் இருப்பது, சாயிநாத அஷ்டோத்திர ஷத நாமாவளி, பக்தர்களுடன் பாபா நடந்துவரும் பழைமையான ஓவியம், மங்கள ஆரத்தி, மற்றும் பாபாவின் ஏகாதச ஸூத்ரம் எனப்படும் பதினோரு உறுதிமொழிகள் ஆகியவை.

இந்நூலை வெளியிட்டோர்: 

                 கிரி டிரேடிங் ஏஜென்சி பிரைவேட் லிமிடெட், சென்னை. மும்பை,டெல்லி, பெங்களூரு, செகந்திராபாத், மற்றும் தமிழ்நாட்டின் பல இடங்களில் இந்த நிறுவனத்திற்கு விற்பனைக்கூடங்கள் உள்ளன. மேலும் விவரங்களுக்கு கிரி டாட் இன் -வலைத்தளத்தைப் பார்வையிடுங்கள். அக்டோபர் 2015 பதிப்பின் விலை இந்திய ரூபாய் இருபது. சாயி வழிபாட்டில் ஈடுபாடு உடைய உற்றார், உறவினர், நண்பர்களுக்குப் பரிசாக அளித்தும் மகிழலாமே!

*சாயிராம் சாயிராம் சாயிராம்* 

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.