Total Pageviews

Friday, December 25, 2015

Repaying one's Guru

குரு தக்ஷிணை 


பாபா காகாவிடமிருந்து ரூ.15 தக்ஷிணையாகக் கேட்டுப் பெற்றார். அவர் காகாவிடம் பின்வருமாறு கூறினார். 
"எவரிடமிருந்தாவது ஒரு ரூபாய் தக்ஷிணையாகப் பெற்றுக் கொண்டேன் என்றால் அவர்களுக்குப் பத்து மடங்காகத் திருப்பித்தர வேண்டியிருக்கிறது. நான் ஒருபோதும் எதையும் விலை இல்லாமல் இலவசமாகப் பெறுவது கிடையாது. சீர்தூக்கிப் பாராது நான் யாரிடமிருந்தும் தக்ஷிணை பெறுவதில்லை"

"யாரை பக்கிரி (என் குரு) சுட்டிக் காண்பிக்கிறாரோ அவரிடமிருந்து மட்டுமே நான் கேட்கிறேன். யாரேனும் பக்கிரிக்கு முன்பே கடன்பட்டிருந்தால் அவரிடமிருந்து பணம் வசூலிக்கப்படுகிறது. எதிர்காலத்தில் கணிசமான அறுவடை செய்வதற்கே அவர்கள் இப்போது கொடுப்பதன் மூலம் விதைக்கிறார்கள்"

"நீ அதை ஏற்கனவே கொடுத்திருந்தாலொழிய தற்போது அதைப் பெறமுடியாது. எனவே, பெறுவதற்கு மிகச்சிறந்த வழி கொடுத்தலேயாம். தக்ஷிணை கொடுத்தல் வைராக்கியத்தை (பற்றின்மை) வளர்க்கிறது. அதன் மூலம் பக்தி, ஞானம் இவற்றை விருத்தி செய்கிறது. ஒன்றைக் கொடுத்துப் பத்தாகத் திரும்பப் பெறுங்கள்"

                                                                        - ஸ்ரீ சாயி சத்சரித்திரம் (அத்தியாயம் 35)

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.