Total Pageviews

Wednesday, January 30, 2013

Songs/Bhajans

பாடல் : சர்வ சக்தியின் பெயர்தான்...
இணையத்தில் பதிவேற்றியவர்: Sara Vanan
பாடியவர் : தஞ்சை வளப்பக்குடி வீரசங்கர் 


பாடல் (குஜராத்தி): ஷீரடி வாலே சாயி பாபா..
பாடியவர்: மாஸ்டர் ராணா (Master Rana)
Youtube Uploaded by: spicedigital



பாடல்: எங்க பாவங்கள் ....
பாடியவர்: டாக்டர் கே.ஜே.யேசுதாஸ் 
இணையத்தில் பதிவேற்றியவர்: priyasuriya1910





Online Pooja Mandir!

இணையத்தில் சாயி ஆரத்தி மற்றும் பூஜா மந்திர் !


சாயி பக்தி வாசக அன்பர்களே, நமது சாயி சன்மார்க்கத் தொண்டினை உலக அளவில் விரிவாகச் செய்து வரும் பக்தர்களாகிய, ஸ்ரீ புட்டபர்த்தி சத்ய சாயி பாபாவின் தொண்டர்கள் ஒரு அருமையான வலைதளத்தினை நடத்தி வருகின்றனர். 
கீழ்க்கண்ட அந்தத் தள முகவரிக்குச் சென்று பாருங்கள். இணையத்தில் ஒரு அற்புதக் கோவிலை உருவாக்கி உள்ளனர். இணையத்திலேயே மிக விரிவாக, முறையான ஷீரடி சாயி பூஜையினை நீங்கள் செய்து மகிழலாம். கீழே உள்ள வரிகளைச் சொடுக்கவும்.

You can do the Shirdi-sai-baba-aarthi-pooja-Online


Virtual Pooja!

கணிப்பொறியில் சாயி பூஜை !

இந்த கம்ப்யூட்டர் யுகத்தில் இனிமேல் இந்தத் தொழில்நுட்பம் இல்லாத அமைப்பே இல்லை என்று சொல்லக்கூடிய அளவு கணிப்பொறியின் தாக்கம் வெகுவாக வளர்ந்து வருகிறது. இச்சூழ்நிலையில் வெளிநாடுகளில் வசிப்போர், இளைஞர்கள், அலுவலகங்களில் பணிபுரிவோர், சிறுவர் சிறுமியர், மூத்த குடிமக்கள் என அனைவரும் எளிதில் கணிப்பொறி மூலம் சாயி பூஜை செய்ய முடியும்! அதற்கான வசதியை ஈப்ரார்த்தனா டாட் காம் என்கிற இணையத்தளம் செய்து தந்துள்ளது. 

கீழ்க்கண்ட முகவரியை சொடுக்கி நீங்கள் இணையத்தில் சாயி பூஜை செய்து மகிழலாம் அல்லது ஈப்ரார்த்தனா டாட் காம் தளத்தில் உள்ள டவுன்லோட் பகுதிக்குச் சென்று உங்கள் கணினியில் இலவசமாக பதிவிறக்கம் செய்து தினந்தோறும் பூஜை செய்யலாம் :

மேலும் இந்த வலைத் தளம் மூலம் சென்னையில் உள்ள சில சாயி கோவில்களில் அர்ச்சனை செய்தபின், உங்கள் முகவரிக்குப் பிரசாதமும் அனுப்பிவைக்க பணம் கட்டினால் அந்த ஏற்பாட்டினை செய்து தருவார்கள் என அறிய முடிகிறது.

ஓம் சாயிபக்தி தாதாய நம:

Saipedia !

சாய்பீடியா !

சாயிபக்தி வலைப்பூ அன்பர்களே, நமக்கெல்லாம் என்சைக்ளோபீடியா (encyclopedia) என்கிற நூலைப் பற்றித் தெரியும். பலவகையான விஷயங்களைப் பற்றி, துறைகளைப் பற்றி சுருக்கமான குறிப்புகளைக் கொண்டுள்ள ஒரு தகவல் திரட்டுதான் என்சைக்ளோபீடியா என்பதாகும். சாயி பக்தர் ஒருவரின் பெரு முயற்சியில் ஷீரடி சாயி பாபா பற்றி தனி என்சைக்ளோபீடியா உருவாக்கப் பட்டுள்ளது. பாபா பற்றிய பல்சுவைத் தகவல்களுடன் சிறப்பாக இது உருவாக்கப் பட்டுள்ளது.

இந்த சாய்பீடியா (இவ்வார்த்தையின் மேல் சொடுக்கி அந்தத் தளத்திற்குச் செல்லலாம்) மது வீட்டு நூலகத்தில் வைத்துக்கொள்ளும் விதத்தில், புத்தக வடிவில் வெளியிட, பதிப்பகத் துறையில் இருக்கும் சாயி பக்த நண்பர்கள் முயற்சி எடுத்தால் நன்றாக இருக்கும். ஆனால் அந்த நூல் ஒரு என்சைக்ளோபீடியா பிரிட்டானிக்கா போல் முழுமையாக, விரிவானதாக, அவ்வப்போது புதிய பதிப்புகளுடனும் இருத்தல் மிக முக்கியம். சாயி பக்தி இவ்வுலகம் முழுவதும் விரிவடைந்துகொண்டு இருக்கும் வேளையில் இத்தகைய மிகப்பெரிய திரட்டினை உருவாக்கி, தொடர்ந்து புதிய தகவல்கள் சேர்த்துக் கொண்டே வெளியிடுவது என்பது ஒரு சவாலான பணியாகத்தான் இருக்கும்.

சாயி சாயி சாயி. 

Mantras

குணப்படுத்தும் மந்திரம் 

"ஓம் ஸ்ரீ சாயி நாதாய நமஹா ".  ஒரு மணி நேரம் ஓடக்கூடிய இந்த மந்திரத்தை, இணையத்தில் பதிவேற்றியவர் : Nipun Aggarwal.



காப்பாற்றும் மந்திரம் 

ஸ்ரீ சாயி பாபாவே எங்களைக் காப்பாற்று எனப் பொருள்படும் இந்த ஸ்ரீ சாயி ரக்ஷ மந்திரத்தை 
இணையத்தில் வெளியிட்டவர்கள்: ValeEntertainmentltd.
பாடியவர்: அனூப் ஜலோத்தா அவர்கள். 
இந்த ஸ்ரீ சாயி மந்த்ரா ஆல்பத்தினை வெளியிட்ட நிறுவன முகவரி: கர்மாமியுசிக்.இன்
இசை அமைப்பாளர்: உமேஷ் ரானே.
 உருவாக்கம்: கிஷோர் சஞ்சல்  

சாயி ஓம்.





Tuesday, January 1, 2013

Books about Sai

ஷீரடி சாயி பாபாவைப் பற்றிய நூல்கள் 

 அன்பர்களே, ஷீரடி சாயி பாபாவைப் பற்றிய ஆங்கிலப் புத்தகங்கள் பலவற்றின் பிரதிகளை இலவசமாக பார்வையிட, படித்து மகிழ்ந்திட நீங்கள் செல்ல வேண்டிய இணையத் தளம் : http://books.google.ca 
கூகிள் நிறுவனத்தின் இந்த புத்தகங்களுக்கான தளம் அற்புதமான பல நூல்களை முழுவதுமாகவோ, குறிப்பிட்ட பகுதிகளாகவோ மக்களின் பார்வைக்காக தன்னகத்தே கொண்டுள்ளது. இத்தளத்தில் உள்ள தேடும் பகுதியில் shirdi sai baba என்று டைப் செய்தால் பாபாவைப் பற்றிய இணையத்தில் கிடைக்கும் அனைத்து நூல்களையும் காட்டும். அவற்றின் மீது சொடுக்கி அந்த நூல் பகுதிகளை படித்து மகிழலாம். பாபாவைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ளலாம்.

சாயி ஓம்.

Audio/Video

இணையத்தில் பதிவேற்றியவர்: priyasuriya1910
பாடியவர்: டாக்டர் கே. ஜே. யேசுதாஸ் 


ஓம் சாயி ஸ்ரீ சாயி ஜெய ஜெய சாயி