Total Pageviews

Saturday, October 20, 2012

Narayanan Krishnan

நாராயணன் கிருஷ்ணன் - Helping the Helpless

Narayanan Krishnanஅமெரிக்காவின் CNN (சி என் என் ) நிறுவனத்தின் மூலம் 2010 ஆம் ஆண்டிற்கான உலகின் பத்து சிறந்த ஹீரோக்களில் ஒருவராக தேர்ந்தெடுக்கப்பட்ட பெருமையைப் பெற்ற தமிழர் திரு.நாராயணன் கிருஷ்ணன் அவர்கள்.

தமிழ்நாட்டில் மதுரையைச் சேர்ந்த இவர் தமது அக்ஷயா அறக்கட்டளை மூலம் வீதிகளில் உள்ள ஆதரவற்றோர், மனநலம் குன்றியவர்கள், வீடற்றோர், கைவிடப்பட்டவர்கள் மற்றும் வயதான நோய்வாய்ப்பட்ட மக்களுக்கு நாள்தோறும் உணவளித்து அருந்தொண்டு ஆற்றிவருகிறார். இவர்தம் உரையைக் கேட்போமா?


இவருடைய அக்ஷயா அறக்கட்டளை மூலம் நீங்களும் தொண்டு செய்ய விருப்பமா? கூடுதலான விவரங்களுக்கு நீங்கள் காண வேண்டிய தளம் : www.akshayatrust.org

பசியில் துடிப்பவருக்கு உணவு கொடு - தாகத்தில் தவிப்பவருக்கு தண்ணீர் கொடு - ஆடையின்றி அல்லல் படுவோருக்கு ஆடை கொடு                                                                                                                                    - ஷீரடி சாயி பாபா 




TED Talks in Tamil

ஜோசெட் ஷீரன்: "பட்டினியை வெல்வோம்"

ஐக்கிய நாடுகள் சபையின் துணை அமைப்பான உலக உணவுத் திட்ட நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பாளராகிய ஜோசெட் ஷீரன், இங்கு பசி - பட்டினி பிரச்னை குறித்தும், உலகில் ஏன் போதுமான அளவு உணவு விளைச்சல் இருந்தாலும் பட்டினிச் சாவுகள் தொடரும் அவல நிலை இன்னும் இருக்கிறது என்பது குறித்தும், உணவுக்காக இன்னும் போர்கள் நடைபெறுவது குறித்தும் உரையாற்றுகிறார். அவரது கனவு, உணவுப் பிரச்சனையைத் தனி மனித அளவிலும் தனி தேசங்களுக்குள்ளும் தீர்க்க முயலாமல், உலகமே இணைந்து செயல்பட்டுத் தீர்க்க வேண்டும் என்பதாகும்.
Source: www.ted.com
Translated into Tamil by Murali Dharan
Reviewed by vidya raju


The History of Baba Statue - 7


சாயி மூர்த்தியின் வரலாறு - 7

இந்தியாவின் மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள ஷீரடி மாநகரில் முதன்முதலில் அமைக்கப்பட்ட சாயி பாபாவின் மூர்த்தி பற்றிய வரலாற்று நிகழ்வுகளை தொடர்ந்து இத் தொடரில் பார்த்து வருகிறோம். நாடு, மத, இன,மொழி, பால் வேறுபாடின்றி அனைத்து மக்களும், உலகம் முழுவதுமுள்ள சாயி பக்தர்களும் வழிபட்டு பயனடைந்து வரும் இந்த மூர்த்தி ஐந்தடி ஐந்து அங்குல உயரம் உடையது. 1952 - இல் தொடங்கிய பணிகள் 1954 - இல் நிறைவுற்று இம்மூர்த்தி பிரதிஷ்டை செய்யப்பட்டது.

1954 - ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ஏழாம் தேதி அன்று விஜயதசமி நன்னாளில் இந்த பளிங்குக்கல்லில் செதுக்கப்பட்ட மூர்த்தி பிரதிஷ்டை செய்யப்பட்டது. பெரும் புண்ணியஸ்தலமான ஷீரடியின் சமாதி மந்திர்- மேற்கு பகுதியிலுள்ள மேடையில், பாபாவின் சமாதிக்குப் பின்புறம் சமய ஆசார விதிகளின்படி பிரதிஷ்டை செய்யப்பட்டது. இதனை செய்து வைத்தவர் திரு. சுவாமி ஸ்ரீ சாயி சரணானந்தர் ஆவார். இவர் சாயி பாபா மஹா சமாதி அடையும் முன் நேரில் சந்தித்த பேறு பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சாயி மூர்த்தியைத் தயாரிக்கும் பணிகளில் சிற்பி பாலாஜி தலிம் அவர்கள் ஈடுபட்டிருந்த போது  ஒரு நாள் பாபா தரிசனம் அளித்து "வேலையை முடி, எதிர்காலத்தில் இனி எந்த மூர்த்தியையும் நீ செய்ய மாட்டாய்" என்று கூறினார். அன்று முதல் சிற்பி தலிம் அவர்கள் வேறு எந்த மூர்த்தியையும் உருவாக்கவில்லை. நமது மரியாதைக்கும், நிரந்தர அன்பிற்கும் உரிய, பக்தர்கள் நெஞ்சில் நீங்கா இடம் பெற்ற சிற்ப மகரிஷி பாலாஜி தலிம் அவர்கள் தமது 82 வயதில் டிசம்பர் 25, 1970 அன்று தனது இறுதி மூச்சினை விட்டார்.


திரு. பாலாஜி தலிம் அவர்களின் பேரன் சிற்பி ராஜிவ் தலிம் அவர்கள் இன்று

திரு. ராஜிவ் தலிம் அவர்களின் சிறப்பு பேட்டி ஒளிக்காட்சியினை இதோ இங்கு கண்டு மகிழுங்கள்:

ஓம் சாயி சிவ சிவ சாயி ஓம் சாயி சிவ சிவ சாயி ஓம் சாயி சிவ சிவ சாயி ஓம் சாயி சிவ சிவ சாயி

(வரலாற்றுப் பயணம் தொடரும்..)