சாயி மூர்த்தியின் வரலாறு - 5
சிற்ப மகரிஷி தலிம் அவர்கள் மும்பையில் தொழில் செய்து கொண்டிருந்தபோது அவர்தம் சிற்பக் கலைத் திறமை கண்டு வியந்த அரசாங்கம் மும்பை மாநகரை அழகுபடுத்த அழைத்தது. மும்பை மாநகரின் ப்ளோரா பவுன்டைன் பகுதி முதல் ஹைகோர்ட் பகுதி வரை இவர் உருவாக்கிய சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன. இத்தகைய திறன் படைத்த தலிம் அவர்கள் உருவாக்கிய உலகப் புகழ் பெற்ற சாயி மூர்த்தி இன்றும் ஷீரடியில் லட்சோபலட்சம் பக்தர்களை ஈர்த்து வருகிறது. சாதி,சமய,ஏழை-
|
திரு. தலிம் அவர்கள் தம் உதவியாளருடன்
(Courtesy: Sai devotees Rohit Behal, Raghav Subramanian)
|
பணக்காரர், இன,மொழி,பால் வேறுபாடுகள் இன்றி எல்லோராலும் வழிபடப்பட்டு வருகிறது. அனைத்து மக்களுக்கும் பொதுவாக சமாதி மந்திரின் கதவு திறந்து வைக்கப்பட்டு பக்தர்கள் அதிகாலை முதலே வரிசையில் தினமும் நின்று தரிசனம் செய்துகொண்டே இருக்கின்றனர். உலகிலேயே அதிகம் புகைப்படம் எடுக்கப்பட்ட மூர்த்தியாக இது உள்ளது. ஐந்தடி ஐந்து அங்குல உயரத்தில் 1952 - இல் ஆரம்பிக்கப்பட்ட இம்மூர்த்தி உருவாக்கம் 1954 - இல் முடிவடைந்து பிரதிஷ்டை செய்யப்பட்டது.
1954- ஆம் வருடம் அக்டோபர் மாதம் 7-ஆம் தேதி விஜயதசமி நாளில் நிறுவப்பட்டது இம்மூர்த்தி. பாபா மகா சமாதி அடைந்து 36 வருடங்கள் கழித்தே இம்மூர்த்தி அமைக்கப்பட்டுள்ளது.
பணி முடிவடையும் வேளையில்
1954 - ஆம் வருடம் அன்று திரு. தலிம் அவர்கள் தமது மூர்த்தியை செதுக்கி உருவாக்கும் பணியை முடிக்கும் நேரம் நெருங்கியது. சாயிபாபாவின் மார்பள் சிற்பம் கிட்டத்தட்ட தயாராகிவிட்ட நிலையில் தலிமுக்கு ஒரு சவாலான தருணம் வந்தது.
அப்போது சாயி மூர்த்தியின் இடது முழங்கால் பகுதியில் காற்று வெற்றிடம் உருவாகி இருப்பதைக் கவனித்தார். இது எவ்வளவு கடும் விளைவை ஏற்படுத்தும் என்பது திரு. பாலாஜி தலிமுக்கு பதட்டத்தை உண்டாக்கியது. ஏன் என்றால் அரும்பாடுபட்டு உருவாக்கும் சிற்பத்தில் ஏதோ ஓர் பகுதியில் வெற்றிடம் ஏற்பட்டால் அது முழு சிற்பத்தையே பாதிக்கக் கூடும். மூர்த்தியில் குறை இருப்பின் அது வழிபட ஏற்றதாக இருக்காது. எனவே மேற்கொண்டு செதுக்குவதை தலிம் நிறுத்தி வைத்தார்.
இனிமேல் செதுக்கினால் முழு சிற்பமும் உடைந்துபோக நேரிடுமே என அஞ்சி வருந்தினார், இவ்வளவு ஆண்டு நேரமும், கடும் உழைப்பும் வீணாய்ப் போவதா என்று பதறினார். பாபாவிடம் அவர் " பாபா எனக்குக் கருணை காட்டுங்கள்.. உங்கள் மூர்த்தி தயாராகிவிட்டது. எனக்குக் கருணை காட்டுங்கள்.." என வேண்டினார். உடனே அதிசயத்தக்க விதத்தில் "பாலாஜி,
தொடர்ந்து செய் " என்று ஒரு குரல் கேட்டது. தனது உதவியாளர்களை கூப்பிட்ட திரு. தலிம் அவர்களையே செதுக்குமாறு கூறினார். இதற்கு அந்த தொழிலாளர்கள் சிற்பம் உடைந்து விடுமே என பயந்து மறுத்து விட்டனர்.
(வரலாற்றுப் பயணம் தொடரும்)