தங்கப் பாத்திரங்கள் காணிக்கை!
கடந்த ஜனவரி 14 , 2012 அன்று ஷீரடியில் மும்பையைச் சேர்ந்த பக்தர் ஒருவர் பாபாவுக்கு ரூபாய் 63 .34 லட்சம் மதிப்புள்ள தங்க பாத்திரங்களைக் காணிக்கையாகச் சமர்ப்பித்தார். ஒன்றரை கிலோ தங்கத் தட்டில், ஒரு கிலோ எடையுள்ள எட்டு தங்கக் குவளைகளை வைத்து ஷீரடிக்கு எடுத்து வந்த அப் பக்தர் சாயி மந்திரில் வழிபட்டார். அந்த தங்கப் பாத்திரங்கள் தினமும் காலை - மாலை பிரசாதம் வழங்கும் நிகழ்வில் பயன்படுத்தப்படப் போகின்றன.
இவற்றைப் போன்ற பொக்கிஷங்களைப் பார்த்து வியக்கத் தோன்றினாலும், பாபாவின் சக்திக்கு முன் இந்த பல மில்லியன் டாலர் மதிப்புள்ள பொருட்கள் எந்த வித மதிப்பும் இல்லாதவை. சாயி பாபா மக்களுக்காக ஆற்றி வரும் பணிகளும், தக்க சமயத்தில் காப்பாற்றி உதவும் உதவிகளையும் இது போன்ற காணிக்கைகளால் சரிக்குச் சரியாக சமன் செய்து விட முடியாது.
எந்த நல்ல காரியத்திற்கும் பொருள் தேவைப்படும் இந்த வேகமான உலகில், ஏதோ பக்தரால் முடியும் அளவு காணிக்கைகள் தந்து சாயிபாபாவின் சன்மார்க்க தொண்டுகள் தொடர்வதற்கு உதவியாக அவை இருப்பதாகத்தான் புரிந்து கொள்ள வேண்டுமே தவிர பாபாவால் பலன் அடைந்த எவனும் என்றுமே தீர்க்க முடியாத நன்றி கடன் பட்டவன் என்பதையும் உணர்ந்து கொள்வது அவசியம்.
ஓம் சாயி சிவ சிவ சாயி ஓம் சாயி சிவ சிவ சாயி ஓம் சாயி சிவ சிவ சாயி ஓம் சாயி சிவ சிவ சாயி