Total Pageviews

Friday, June 19, 2026

சர்ப்ப சாயிநாதரின் அருள்மொழிகள்!

சீரடி சர்ப்ப சாயிநாதரின் அருள்மொழிகள் 

* உன் மனதினால் என் அருளைப் பெறலாமே வொழிய உன் பணத்தினால் விலைக்கு வாங்க முடியாது. அதை பணத்திற்கு நீ மற்றோர்க்கு விற்கவும் உன்னால் முடியாது.

* உனது தாய் தந்தையர் உனது கல்விக்காக எவ்வளவு வேண்டுமானாலும் பணம் செலவு செய்யலாம். அவர்கள் உனக்காக பரீக்ஷையும் எழுத முடியுமா? அதைப் போன்றுதான் நீ நன்றாயிருக்க உன் முயற்சியும் வேண்டும், என் அருளும் வேண்டும். உனது கண்களுக்கு பார்க்கும் சக்தியிருந்தும்  சூரியன் அல்லது தீபத்தின் ஒளியின் சகாயமின்றி எதையேனும் பார்க்க முடியுமா? அதைப்போலவே எதிலும் உன் முயற்சியும் வேண்டும், இறைவன் அருளும் வேண்டும்.

* எந்தக் காரணத்தை முன்னிட்டேனும் எள்ளளவேனும் அகந்தை கொள்ளாதே. அகந்தை அழிவுக்குக் காரணம்.

* கேணியில் இறைக்க இறைக்க தெளிவான நீர் ஊற்றெடுப்பது போல் தர்மத்திற்காகச் செலவிடும் ஒவ்வொரு பைசாவும் உனக்கு ஒவ்வொரு பவுனாகத் திரும்பும். 

* சமாதி என்பதற்குச் சாவு என்று பொருளல்ல. நான் சமாதியடைந்த பிறகும் என்றும் உனக்கு எனது அருள் கிட்டும். வேற்றுடல் தரித்து வெளிவந்துலவி உனக்கு வேண்டிய உதவியெல்லாம் செய்தே தீருவேன்.

* நானே கணபதி, நானே முருகன், நானே சிவன், நானே ராமன், நானே கிருஷ்ணன், நானே ஹனுமான், நானே இலக்குமி, நானே இராஜ ராஜேஸ்வரி. இது மட்டுமா? எல்லாம் யானே.

                                                                 --- சீரடி சர்ப்ப சாயிநாதரின் அருள் மொழித் திரட்டு எனும் அரிய நூலில் இருந்து.

இந்நூலைத் தொகுத்தவர் : ஸ்வாமி வேதானந்தா.                                    பிரசுரித்தவர் : தி.அ. சஷ்டி கணேசம் பிள்ளை, கணபதி மந்திரம், ஆண்டார் வீதி, தெப்பக்குளம், திருச்சிராப்பள்ளி 

                                                                         ************

(புண்ணிய பூமியான பாரத தேசத்திலே, கடந்த பல யுகங்களில், மஹா விஷ்ணு-சிவன்-ப்ரம்மா என மூன்று தலைகளுடன் ஒரே உடலாக எவ்வித வேறுபாடுகளும் இன்றி ஏக இறை வடிவாக - அனைத்து குரு, முனிவர், சித்தர், ரிஷி, யோகிகள், ஞானிகள் - எல்லோருக்கும் ஆதி குருவாகிய ஸ்ரீ தத்தாத்ரேயரின் அவதாரங்களில் ஒன்றாக வாழையடி வாழையாகத் தோன்றியவர் ஷீரடி சாயி பாபா என்பது குறிப்பிடத்தக்கது. எனவேதான்  சாயி மார்க்கத்தில் எந்த வித பேதமும் இல்லை)

 "ஸப்கா மாலிக் ஏக்"   

Thursday, February 19, 2026

சாயி மின்- பத்திரிக்கைகள்

சாயி மின்- பத்திரிக்கைகள் 

பாபாவின் பக்த கோடிகள் படித்து தெரிந்து கொள்ள வேண்டிய சாயிபாபா பற்றிய செய்திகளும் தகவல்களும் அற்புதங்களும் கடல் போல் பல மொழிகளில் பரந்து விரிந்து உள்ளன. அவற்றில் சில : 

1. நாக சாயி தர்ஷன் மின்-இதழ்கள் :  www. srinagasai  dot com/publications ஸ்ரீநாகசாயி வலைத்தளத்தில் publications பகுதியில் உள்ளன. சாயிபக்தர்கள் கோயம்புத்தூரிலிருந்து வெளியிடுகின்றனர். 

2. ஆரா ஆஃப் ஷீர்டி சாயி மின்-பத்திரிக்கைகள்:  auraofshirdisai  dot org என்கிற வலைத்தளத்தில் book version மெனுவை கிளிக் செய்தால் அத்தனை பத்திரிக்கைகளின் PDF வடிவ இதழ்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். சாயிபக்தர்கள் பெங்களுருவில் இருந்து வெளியிடுகின்றனர். 

3. www. saiamrithadhara  dot com/Books/magazines/index.html - கூடுதல் தகவல்களுக்கு  இந்த சாயி அம்ரித தாரா வலைத்தளம் சென்று பார்க்கலாம்.

4.  1923 முதல் ஷீரடியிலிருந்து வெளிவரும் புகழ்பெற்ற சாயி லீலா மின்-பத்திரிக்கை pdf வடிவில் பதிவிறக்கம் செய்து படிக்க இந்த வலைத்தளத்தைப் பார்வையிடுங்கள் : sai dot org dot in/en/saileela 

மேற்கண்ட தகவல்களை கூகிளில் டைப் செய்து தேடும் போது எளிதாக கொடுத்து விடும். 


Tuesday, February 3, 2026

ஆயிரம் கோடி வயதான! - By Malaysia Vasudevan


YouTube Video by:  Divo Tv Private Limited
இந்த அரிதான பாடலைப் பாடியவர்: தென்னாட்டு தாஸ்கணு மலைசியா வாசுதேவன் 
இசை: கே.எஸ். தீக்ஷித் 
கவிஞர்: பிறைசூடன் 
என் சாய் இசைத் தொகுப்பு 

Saturday, January 17, 2026

மிக அரிதான ஷீரடி பந்தம்! Rare song-By Malaysia Vasudevan

 இந்த பாடலை வழங்கியவர் தென்னாட்டு தாஸ்கணு மலைசியா வாசுதேவன் அவர்கள். 
YouTube Video by: Super Cassettes Industries Limited, ஷீரடி சாயி கானம் இசைத்தொகுப்பு.

Wednesday, December 31, 2025

சாயி ராம் ராம் என்று ... -By Malaysia Vasudevan


வழங்கியவர்: தென்னாட்டு தாஸ்கணு மலைசியா வாசுதேவன்