டாக்டர் ராமானந்த் சாகரின் தொலைக்காட்சித் தொடர்
டாக்டர் ராமானந்த் சாகர் அவர்கள் தமது விரிவான ஆராய்ச்சியின் பின்னர் உருவாக்கிய அற்புத தொலைக்காட்சித் தொடர்தான் அண்மைக்காலத்தில் விஜய் டிவி ஒளிபரப்பிய ஷீரடி சாயி பாபா என்ற தொடர் ஆகும். உலகமெங்கும் பக்தர்களின் பெரும் வரவேற்பைப் பெற்ற அந்த தொடர் இப்போது டி வி டி/விசிடி குறுந்தட்டு வடிவில் கிடைக்கின்றது. ஹிந்தி மொழியில் கிடைக்கும் இந்த தொடர் பற்றிய தகவல் காண www.shoppingonlineindia.com என்ற இணையத் தளம் சென்று பார்க்கலாம்.
நான்கு வருடங்கள் ஆராய்ச்சி செய்து, நூற்றுக்கணக்கான கலைஞர்களின் ஒத்துழைப்பில் பரோடா நகரின் சாகர் பிலிம் சிட்டியில் ஷீரடி போன்ற செட் அமைத்து இந்த காவியத் தொடரினை உருவாக்கி உள்ளார் டாக்டர் ராமானந்த் சாகர். புகழ்பெற்ற 'ராமாயணம்', 'கிருஷ்ணா' போன்ற தூர்தர்ஷன் தொலைக்காட்சித் தொடர்களை உருவாக்கியவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த டிசெம்பர் 12, 2005 அன்று மும்பையில் உள்ள தனது வீட்டில் எண்பத்து ஏழு வயதில் காலமானார். ஒவ்வொருவரின் வீட்டிலும் இருக்க வேண்டிய அற்புத குறுந்தட்டுக்கள் இவை. இந்த தொடர் தமிழில் விற்பனைக்குக் கிடைத்தால் அருமை. உங்களுக்குத் தகவல் தெரிந்தால் கருத்துப் பகுதியில் பதிவு செய்யுங்கள்.

சாயி ஓம்.