Wednesday, June 29, 2022

ஶ்ரீ சாய் சரணம் பக்தி பாடல்கள் - By Emusic Abirami


பாடியவர்: சைந்தவி 
கவிஞர்: தேவராஜன் 
இசை: A.C. தினகரன் 
அபிராமி ஆடியோ வெளியீடு 
இசைத்தொகுப்புக்களை வாங்கவோ, பதிவிறக்கவோ பார்வையிட வேண்டிய தளம்  www. abiramionline. com 

Wednesday, June 1, 2022

பாபாவின் 53 அதிர்ஷ்டசாலி பக்தர்கள்! - By Shirdi Today


ஷீரடி சாயிபாபாவுடன் பேசி, பழகி, அல்லது ஆசி பெற்று வாழ்ந்த முக்கியமான 53 அதிர்ஷ்டசாலி பக்தர்கள்! இவர்களைப் பார்ப்பதும் புண்ணியம்தான். நாம் சத்சரித்திரம் படிக்கும் போது நினைவில் வரும் பக்தர்களின் புகைப்படங்கள்..


பாபா மஹாசமாதி அடைந்தபின் கட்டப்பட்ட பழமையான முதல் கோயில் - By Sai Ke Dwar


அன்பர்களே, பாபா மஹாசமாதி அடைந்த பிறகு, கட்டப்பட்ட பழமையான, முதல் ஷீரடி சாயி பாபா கோயில் இந்தியாவின் மஹாராஷ்டிரா மாநிலம், சிந்துதுர்க் மாவட்டம், கூடல் தாலுகா, கவில்காவோன் கிராமத்தில் அமைந்து உள்ளது. 

அங்கு வாழ்ந்த சிறந்த தத்தாத்திரேய பக்தர் ஒருவர், தத்தருக்கு ஆலயம் அமைக்க விரும்பியிருந்தார்.ஆனால் சாயியின் திருவிளையாடலால் சாயி ஆலயம் உருவாகியது. இது மும்பையிலிருந்து 519கிலோமீட்டர்  தொலைவிலும், கோவாவில் இருந்து 113கிலோமீட்டர் தூரத்திலும் மும்பை-கோவா ஹை வேயில் அமைந்து உள்ளது.

இக்கோயில் கொங்கணக் கட்டிட கலை அம்சத்தில் கட்டப்பட்டுள்ளது. இதுவரை சாயி பக்தர்கள் பற்பல மூர்த்திகளைப் பார்த்து இருப்பீர்கள். ஆனால் கவில்காவோன் சிலை வித்தியாசமானது. அன்பும் கருணையும் கொண்டு நம் முன்னால் பாபா உட்கார்ந்து இருப்பதாகத் தோன்றும்.

இக்கோயிலைக் கட்டிய ஸ்ரீ தத்ததாஸ் என்கிற ராமச்சந்திர ராவோஜி மத்யே அவர்களின் பேரன், ஆசிரியர் ஸ்ரீ ராஜன் மத்யே ஆவார். 1922 இல் இந்த கோயில் கட்டப்பட்டது. 

சாயிராம்.