Thursday, October 17, 2019

ஸ்ரீ சாயி அருளிய சர்வ கஷ்ட நிவர்த்தி மந்திரம் !! - By Gopuram Tv

விளக்கவுரை: திரு. வீரமணிராஜு அவர்கள்

சர்வ கஷ்ட நிவர்த்தி மந்திரம்

ப்ரதமம் சாயிநாதாய த்விதீயம் த்வாரகமாயினே 
த்ரிடீயம் தீர்த்தராஜஞ்ச சதுர்த்தம் பக்தவத்சலே 
பஞ்சமம் பரமாத்மாய சஷ்டிஞ்ச ஷீரடிவாசினே 
சப்தமம் சத்குருநாதாய அஷ்டமம் அநாதநாதனே 
நவமம் நிராடம்பராய தசமம் தத்தாவதாரினே 
ஏதானி தசநாமானே த்ரிசந்த்யம் யஹ் படேந்நித்யம் 
சர்வ கஷ்ட பயான்முக்தே 
ஸ்ரீ சாயிபாபா நமோஸ்துதே, 
ஸ்ரீ சாயிபாபா நமோஸ்துதே, 
ஸ்ரீ சாயிபாபா நமோஸ்துதே.

அருள் தரும் பாபாவின் அற்புத ஆலயங்கள் தொடர்- பகுதி 4 - By Gopuram Tv

கோபுரம் டிவி-யில் திரு. அபிஷேக்ராஜு வழங்கும், அருள் தரும் பாபாவின் அற்புத ஆலயங்கள் தொடர் 

ஷீரடி தரிசனம் Part 1 - By Gopuram Tv

ஷீரடி மாநகரில் நாம் தரிசிக்க வேண்டிய முக்கிய இடங்கள் பற்றி, கோபுரம் டிவி-யில் திருமதி. சௌமியா அபிஷேக்ராஜு விளக்குகிறார்.

Friday, October 4, 2019

Great Grandson of Baiza Maa, Shirdi Interview !! - By Studio Live Delhi

உயர் திரு. தாத்யா பாடீல் அவர்களின் பேரன் திரு. சர்ஜிராவ் கோட்டே பாடீல் அவர்கள்.
ஷீரடியின் திருமதி பைஜா பாய் அம்மையார் இவரின் கொள்ளு பாட்டி ஆவார். பெரும் புண்ணியம் செய்த பாக்யசாலிகளான இவரது குடும்பத்தினரைப் பற்றியும், இவர்கள் பாபா வாழும் காலத்திலேயே அவருக்குச் செய்த தொண்டு பற்றியும் அறிந்து கொள்ள ஸ்ரீ ஷீரடி சாயி சத்சரித்திரம் படியுங்கள். இவர்களைப் பார்ப்பதே சாயி பக்தர்களாகிய நாம் செய்த புண்ணியம் ஆகும்.

நல்லாரைக் காண்பதுவும் நன்றே, நலம் மிக்க
நல்லார் சொல் கேட்பதுவும் நன்றே - நல்லார்
குணங்கள் உரைப்பதுவும் நன்றே, அவரோடு
இணங்கி இருப்பதுவும் நன்று.

- ஸ்ரீ ஔவையார், மூதுரை.

Tuesday, October 1, 2019

நெஞ்சிலே நின்றுவிட்டாய் - Song By Vijay Musical

ஆல்பம் : எல்லாமே பாபா
பாடியவர் : ராமு
இசை : சிவபுராணம் D V ரமணி
பாடல் : செங்கதிர்வாணன்
வீடியோ : கதிரவன் கிருஷ்ணன்
விஜய் மியூஸிக்கல்ஸ்
பாடல்வரிகள் :
நெஞ்சிலே நின்று விட்டாய் நினைவிலே நிறைந்தாய் சாயி
தஞ்சமே உன் பாதம் என்று கூடினோமே உன் வாசல்

அன்பிலே நின்றதாலே வணங்கிடுவோம் உன்னை நாளும்
என்றுமே உன்னைத் தானே கதியென்று வணங்கி வாழ்வோம்

எங்களின் தெய்வம் ஸ்ரீ சாயி எல்லாம் நீயே ஸ்ரீ சாயி
பொங்கிடும் கருணை ஸ்ரீ சாயி புண்ணிய மூர்த்தி ஸ்ரீ சாயி
கண்ணில் கனிவைக் காட்டுகிறாய் கவலைகள் யாவும் மாற்றுகிறாய்
மண்ணில் நிம்மதி கூட்டுகிறாய் மனதில் தீபம் ஏற்றுகிறாய்

சிவனும் திருமாலும் உன் வடிவம் கோரிக்கைத் தவறாது நிறைவேறும்
ஆதரவளிக்கும் ஸ்ரீ சாயி அபயம் நீயே ஸ்ரீ சாயி
உன் கோவில் வந்தால் குறையில்லை ஊழ்வினையென்பது இனியில்லை
வந்தோரின் வாழ்வில் தடையில்லை வழங்கிடும் அருளுக்கு அளவில்லை

பாபா உன் புகழ் பாடுகிறோம் பக்தியில் நாங்கள் கூடுகிறோம்
நலமோடு நாங்கள் வாழுகின்றோம் நாளும் உன்பதம் போற்றுகிறோம்

கண்ணில் கனிவைக் காட்டுகிறாய் கவலைகள் யாவும் மாற்றுகிறாய்
மண்ணில் நிம்மதி கூட்டுகிறாய் மனதில் தீபம் ஏற்றுகிறாய்

பாபா பாபா உன் பெருமை பாட பாடத் தரும் இனிமை
குறைகளை நீக்கும் ஸ்ரீ சாயி கொடுப்பாய் அருளே ஸ்ரீ சாயி

கண்ணில் கனிவைக் காட்டுகிறாய் கவலைகள் யாவும் மாற்றுகிறாய்
மண்ணில் நிம்மதி கூட்டுகிறாய் மனதில் தீபம் ஏற்றுகிறாய்

அன்போடு எம்மை காப்பாயே ஆயிரம் நன்மைகள் சேர்ப்பாயே
ஆலயம் வந்தோம் ஸ்ரீ சாயி அமைதியின் உருவே ஸ்ரீ சாயி
உன் கோவில் வந்தால் குறையில்லை ஊழ்வினையென்பது இனியில்லை

வந்தோரின் வாழ்வில் தடையில்லை வழங்கிடும் அருளுக்கு அளவில்லை

நாடிய செல்வம் தருவாயே எப்போதும் துணையாய் வருவாயே
தேடிய தெய்வம் ஸ்ரீ சாயி திருவடி பணிந்தோம் ஸ்ரீ சாயி

கண்ணில் கனிவைக் காட்டுகிறாய் கவலைகள் யாவும் மாற்றுகிறாய்
மண்ணில் நிம்மதி கூட்டுகிறாய் மனதில் தீபம் ஏற்றுகிறாய்

காலம் நேரம் உன் வசமே காரியம் யாவிலும் இனி ஜெயமே
பாவங்கள் போக்கிட ஸ்ரீ சாயி பதமலர் தருவாய் ஸ்ரீ சாயி
கண்ணில் கனிவைக் காட்டுகிறாய் கவலைகள் யாவும் மாற்றுகிறாய்

மண்ணில் நிம்மதி கூட்டுகிறாய் மனதில் தீபம் ஏற்றுகிறாய்

நீ எங்களின் நெஞ்சினிலே இருந்திட வாழ்வில் தோல்வியில்லை
தாரக மந்திரம் ஸ்ரீ சாயி தனிப்பெரும் தெய்வம் ஸ்ரீ சாயி

உன்கோவில் வந்தால் குறையில்லை ஊழ்வினையென்பது இனியில்லை
வந்தோரின் வாழ்வில் தடையில்லை வழங்கிடும் அருளுக்கு அளவில்லை

சூரிய ஒளிதரும் உன்முகமே சோதனை விலக்கிடும் உன்பதமே
சஞ்சலம் நீக்கிடும் ஸ்ரீ சாயி சரணம் சரணம் ஸ்ரீ சாயி
கண்ணில் கனிவைக் காட்டுகிறாய் கவலைகள் யாவும் மாற்றுகிறாய்

மண்ணில் நிம்மதி கூட்டுகிறாய் மனதில் தீபம் ஏற்றுகிறாய்

பற்பல அதிசயம் நிகழ்த்துகிறாய் பலரும் வியக்க வைக்கிnறாய்
கற்பனைக்கெட்டா ஸ்ரீ சாயி கைதொழுதோமே ஸ்ரீ சாயி

நீயே உலகம் என்றிருப்போம் நெஞ்சினில் உன்னை சுமந்திருப்போம்
தவமுனி போலே ஸ்ரீ சாயி தரணியில் நடந்தாய் ஸ்ரீ சாயி

உன்கோவில் வந்தால் குறையில்லை ஊழ்வினையென்பது இனியில்லை

வந்தோரின் வாழ்வில் தடையில்லை வழங்கிடும் அருளுக்கு அளவில்லை

நீதான் எங்களின் குருவானாய் நீங்காத கருணை மழைதந்தாய்
வாழ்விக்க வந்த ஸ்ரீ சாயி வணங்கிடுவோம் உன்னை ஸ்ரீ சாயி

கண்ணில் கனிவைக் காட்டுகிறாய் கவலைகள் யாவும் மாற்றுகிறாய்
மண்ணில் நிம்மதி கூட்டுகிறாய் மனதில் தீபம் ஏற்றுகிறாய்

ஆவது எல்லாம் உனதருளே ஆனந்த வாழ்வும் உனதருளே
வியாழக்கிழமை ஸ்ரீ சாயி தரிசிக்க வருவோம் ஸ்ரீ சாயி
கண்ணில் கனிவைக் காட்டுகிறாய் கவலைகள் யாவும் மாற்றுகிறாய்

மண்ணில் நிம்மதி கூட்டுகிறாய் மனதில் தீபம் ஏற்றுகிறாய்

ஏழை செல்வந்தர் யாவருமே உன்னிடம் வந்தால் சரிசமமே
பேதமையில்லா ஸ்ரீ சாயி பேரருள் புரிவாய் ஸ்ரீ சாயி
உன்கோவில் வந்தால் குறையில்லை ஊழ்வினையென்பது இனியில்லை

வந்தோரின் வாழ்வில் தடையில்லை வழங்கிடும் அருளுக்கு அளவில்லை

நிஷ்டையில் அமர்ந்து நீ இருப்பாய் நிகழப்போவதை அறிந்திருப்பாய்
பார்த்திட வேண்டும் ஸ்ரீ சாயி பகவான் நீயே ஸ்ரீ சாயி
கண்ணில் கனிவைக் காட்டுகிறாய் கவலைகள் யாவும் மாற்றுகிறாய்

மண்ணில் நிம்மதி கூட்டுகிறாய் மனதில் தீபம் ஏற்றுகிறாய்

புவனம் முழுதும் போற்றிடுமே புண்ணியவாழ்வை வேண்டிடுமே
கருணாமூர்த்தி ஸ்ரீ சாயி கலியுக நாதா ஸ்ரீ சாயி

கண்ணில் கனிவைக் காட்டுகிறாய் கவலைகள் யாவும் மாற்றுகிறாய்
மண்ணில் நிம்மதி கூட்டுகிறாய் மனதில் தீபம் ஏற்றுகிறாய்

தஞ்சம் என்று வந்தோமே தாமரைப்பாதம் பணிந்தோமே
திக்குகள் எட்டும் ஸ்ரீ சாயி தினம் உனை வணங்கும் ஸ்ரீ சாயி
உன்கோவில் வந்தால் குறையில்லை ஊழ்வினையென்பது இனியில்லை
வந்தோரின் வாழ்வில் தடையில்லை வழங்கிடும் அருளுக்கு அளவில்லை

விரதம் இருப்போம் பகவானே வெற்றிகள் வழங்கும் பகவானே
சோதனை நீக்கிடும் ஸ்ரீ சாயி சொல்லிட இனிக்கும் ஸ்ரீ சாயிகண்ணில் கனிவைக் காட்டுகிறாய் கவலைகள் யாவும் மாற்றுகிறாய்
மண்ணில் நிம்மதி கூட்டுகிறாய் மனதில் தீபம் ஏற்றுகிறாய்

தீராப்பிணிகள் யாவினையும் ஊதியினாலே தீர்த்துவைத்தாய்
மாறாமனம் கொண்ட ஸ்ரீ சாயி மலரடி பணிந்தோம் ஸ்ரீ சாயி

கண்ணில் கனிவைக் காட்டுகிறாய் கவலைகள் யாவும் மாற்றுகிறாய்
மண்ணில் நிம்மதி கூட்டுகிறாய் மனதில் தீபம் ஏற்றுகிறாய்

ஓரிடம் நில்லா பேரொளியே உள்ளத்தில் வைத்தோம் உனதடியே
ஆதாரம் நீயே ஸ்ரீ சாயி அகிலம் போற்றும் ஸ்ரீ சாயி

உன்கோவில் வந்தால் குறையில்லை ஊழ்வினையென்பது இனியில்லை
வந்தோரின் வாழ்வில் தடையில்லை வழங்கிடும் அருளுக்கு அளவில்லை

பாதை மாறியே நடப்பவரை பரிவுடன் நேர்வழித் திருப்புகிறாய்
தாயும் தந்தையும் ஸ்ரீ சாயி நீயே ஆனாய் ஸ்ரீ சாயி
கண்ணில் கனிவைக் காட்டுகிறாய் கவலைகள் யாவும் மாற்றுகிறாய்

மண்ணில் நிம்மதி கூட்டுகிறாய் மனதில் தீபம் ஏற்றுகிறாய்

கீதம் நூறு பாடிடுவோம் கீர்த்தனை ஆயிரம் இசைத்திடுவோம்
மலர்களில் எத்தனை என்றாலும் மாலை ஒன்று அது நீயே
கண்ணில் கனிவைக் காட்டுகிறாய் கவலைகள் யாவும் மாற்றுகிறாய்
மண்ணில் நிம்மதி கூட்டுகிறாய் மனதில் தீபம் ஏற்றுகிறாய்

உதவி என்று வந்தவர்க்கு உள்ளம் உருகிட நின்றவர்க்கு
இதயம் குளிர்ந்திட ஸ்ரீசாயி இனிதாய் அருள்வாய் ஸ்ரீ சாயி

உன்கோவில் வந்தால் குறையில்லை ஊழ்வினையென்பது இனியில்லை

வந்தோரின் வாழ்வில் தடையில்லை வழங்கிடும் அருளுக்கு அளவில்லை

பாவம் தோஷம் தீருமிடம் பாபா நீயும் இருக்குமிடம்
நிறைந்த செல்வம் ஸ்ரீ சாயி நித்தம் தருவாய் ஸ்ரீ சாயி

கண்ணில் கனிவைக் காட்டுகிறாய் கவலைகள் யாவும் மாற்றுகிறாய்
மண்ணில் நிம்மதி கூட்டுகிறாய் மனதில் தீபம் ஏற்றுகிறாய்

அருவியைப் போலே அருள்கின்றாய் ஆன்மிகச் சுடராய் ஒளிர்கின்றாய்
நெஞ்சோடு வாழும் ஸ்ரீ சாயி நினைவுகள் நீயே ஸ்ரீ சாயி
கண்ணில் கனிவைக் காட்டுகிறாய் கவலைகள் யாவும் மாற்றுகிறாய்
மண்ணில் நிம்மதி கூட்டுகிறாய் மனதில் தீபம் ஏற்றுகிறாய்

முற்றும் துறந்த மாமுனியே முன்வினை போக்கிடும் இறைவடிவே
உத்தமர் நெஞ்சினில் ஸ்ரீ சாயி உறைவாய் என்றும் ஸ்ரீ சாயி
உன்கோவில் வந்தால் குறையில்லை ஊழ்வினையென்பது இனியில்லை
வந்தோரின் வாழ்வில் தடையில்லை வழங்கிடும் அருளுக்கு அளவில்லை

கவலை இல்லா வாழ்வளிக்கும் கருணை வடிவே பகவானே
நினைக்கும் யாவையும் ஸ்ரீ சாயி நிகழ்த்திட வேண்டும் ஸ்ரீ சாயி
கண்ணில் கனிவைக் காட்டுகிறாய் கவலைகள் யாவும் மாற்றுகிறாய்

மண்ணில் நிம்மதி கூட்டுகிறாய் மனதில் தீபம் ஏற்றுகிறாய்

துன்பம் துயரம் வந்தபோதிலே துணையாய் நிற்கும் சாயி நாதனே
அஞ்சாது வாழ்ந்திட ஸ்ரீ சாயி அருளும் பாபா ஸ்ரீ சாயி

கண்ணில் கனிவைக் காட்டுகிறாய் கவலைகள் யாவும் மாற்றுகிறாய்
மண்ணில் நிம்மதி கூட்டுகிறாய் மனதில் தீபம் ஏற்றுகிறாய்

இதயம் முழுதும் உன் வசமே எதுவும் எமக்கு சம்மதமே
பதமலர் தந்து ஸ்ரீ சாயி பக்தரைக் காப்பாய் ஸ்ரீ சாயி

உன்கோவில் வந்தால் குறையில்லை ஊழ்வினையென்பது இனியில்லை
வந்தோரின் வாழ்வில் தடையில்லை வழங்கிடும் அருளுக்கு அளவில்லை

நாளும் நடக்கும் உலகினிலே நல்லதை நாடும் வாழ்வினிலே
நீயே துணைவன் ஸ்ரீ சாயி சத்தியம் இதுவே ஸ்ரீ சாயிகண்ணில் கனிவைக் காட்டுகிறாய் கவலைகள் யாவும் மாற்றுகிறாய்
மண்ணில் நிம்மதி கூட்டுகிறாய் மனதில் தீபம் ஏற்றுகிறாய்

குருவடித் திருவடி சரணமய்யா குவலயம் செழித்திட அருளுமய்யா
எல்லையில்லாத ஸ்ரீ சாயி ஏழுலகாளும் ஸ்ரீ சாயி
கண்ணில் கனிவைக் காட்டுகிறாய் கவலைகள் யாவும் மாற்றுகிறாய்

மண்ணில் நிம்மதி கூட்டுகிறாய் மனதில் தீபம் ஏற்றுகிறாய்

உனக்கென்று நெஞ்சினில் இடம் தருவோம் ஒவ்வொரு நாளும் நினைத்திடுவோம்
சித்தம் நிறைந்தாய் ஸ்ரீ சாயி சீரடி பாபா ஸ்ரீ சாயி
உன்கோவில் வந்தால் குறையில்லை ஊழ்வினையென்பது இனியில்லை
வந்தோரின் வாழ்வில் தடையில்லை வழங்கிடும் அருளுக்கு அளவில்லை

போதும் உந்தன் புதிர் மெளனம் நீ புன்னகைப் பூக்கும் நந்தவனம்
வாடும் எங்களை ஸ்ரீ சாயி வாழ்விக்க வேண்டும் ஸ்ரீ சாயி
கண்ணில் கனிவைக் காட்டுகிறாய் கவலைகள் யாவும் மாற்றுகிறாய்

மண்ணில் நிம்மதி கூட்டுகிறாய் மனதில் தீபம் ஏற்றுகிறாய்

சாயிநாதனே பாரய்யா சஞ்சல நோயை தீரய்யா
தஞ்சம் உந்தன் திருவடியே தருணம் இதுதான் அருள்வாயே

கண்ணில் கனிவைக் காட்டுகிறாய் கவலைகள் யாவும் மாற்றுகிறாய்
மண்ணில் நிம்மதி கூட்டுகிறாய் மனதில் தீபம் ஏற்றுகிறாய்

மூன்று நதியும் உன்னிடமே நொடியில் ஆகிடும் சங்கமமே
வேண்டும் வரம் தரும் ஸ்ரீ சாயி விதியினை மாற்றும் ஸ்ரீ சாயி
உன்கோவில் வந்தால் குறையில்லை ஊழ்வினையென்பது இனியில்லை
வந்தோரின் வாழ்வில் தடையில்லை வழங்கிடும் அருளுக்கு அளவில்லை

அன்புக் கடலே ஸ்ரீ சாயி ஆனந்த மயமே ஸ்ரீ சாயி
உனைபணிந்தோமே ஸ்ரீ சாயி உள்ளம் நிறைந்தாய் ஸ்ரீ சாயி

கண்ணில் கனிவைக் காட்டுகிறாய் கவலைகள் யாவும் மாற்றுகிறாய்
மண்ணில் நிம்மதி கூட்டுகிறாய் மனதில் தீபம் ஏற்றுகிறாய்

கண்ணில் கனிவைக் காட்டுகிறாய் கவலைகள் யாவும் மாற்றுகிறாய்
மண்ணில் நிம்மதி கூட்டுகிறாய் மனதில் தீபம் ஏற்றுகிறாய்

மன நிம்மதியை தரும் ஷீரடி சாய் பாபா பாடல்கள் - By Arutperumjothi

பாடியவர் - சவிதா ஸ்ரீராம் பாடல் - P.செந்தில் குமார் இசை - சிவபுராணம் D.V.ரமணி தயாரிப்பு - அருட்பெரும்ஜோதி ஆடியோ

பாபா பாமாலை - By Arutperumjothi

இசைத் தொகுப்பு: பாபா பாமாலை
பாடியவர்: பாம்பே சாரதா மற்றும் சவிதா ஸ்ரீராம்
இசை: சிவபுராணம் டி.வி.ரமணி
தயாரிப்பு: அருட்பெரும்ஜோதி ஆடியோ

Sunday, September 1, 2019

மகான் சாயி - Jukebox By VIJAY MUSICAL

பாடியவர் : தீபிகா

இசை : பிரதீப்

பாடல்கள் : செங்கதிர்வாணன்

வீடியோ : கதிரவன் கிருஷ்ணன்

ஆசிர்வாத்- விஜய் மியூஸிக்கல்ஸ்

Wednesday, July 31, 2019

கருணை வடிவமே - By Vijay Musical

ஆல்பம் : எல்லாமே பாபா
பாடியவர் : பிரபாகர்
பாடல் : செங்கதிர்வாணன்
இசை : சிவபுராணம் D V ரமணி
வீடியோ : கதிரவன் கிருஷ்ணன்
ஷீர்டி சாய் பாபா பாடல்கள்-ஆசிர்வாத்- விஜய் மியூஸிக்கல்ஸ்
பாடல்வரிகள் :
கருணை வடிவமே சாயி நாதனே
கனிவு காட்டிடும் சாயி நாதனே
இருளை விளக்கிடும் சாயி நாதனே
இதய தெய்வமே சாயி நாதனே

உலகம் போற்றிடும் சாயி உனது லீலைகள் உயர்வு தந்திடும் சாயி உனது பாடல்கள்
மனித ரூபமாய் சாயி நாதனே
மண்ணில் தோன்றினாய் சாயி நாதனே

இனிய பாதைகள் சாயி நாதனே
என்றும் காட்டுவாய் சாயி நாதனே

(உலகம் போற்றிடும்) உதய வானிலே சாயி நாதனே
கதிரின் தோற்றமே சாயி நாதனே

புதிய வாழ்வினை சாயி நாதனே
புரிய வைத்திடும் சாயி நாதனே

(உலகம் போற்றிடும்) தொடரும் வினைகளை சாயி நாதனே
துரத்தும் நாயகன் சாயி நாதனே

படரும் கொடியன சாயி நாதனே
பாதம் பற்றினோம் சாயி நாதனே

(உலகம் போற்றிடும்) பார்க்கும் திசையெல்லாம் சாயி நாதனே
பழகும் உறவெல்லாம் சாயி நாதனே

பூக்கும் மலரெல்லாம் சாயி நாதனே
பூஜை செய்கிறோம் சாயி நாதனே

(உலகம் போற்றிடும்) வரங்கள் வேண்டினோம் சாயி நாதனே
வழங்க நாடினோம் சாயி நாதனே

கரங்கள் உயர்த்தியே சாயி நாதனே
காட்சி தருகிறாய் சாயி நாதனே

(உலகம் போற்றிடும்) மனதில் உன் முகம் சாயி நாதனே
மலரும் போதிலே சாயி நாதனே

கவலை தீருமே சாயி நாதனே
கனவு பலிக்குமே சாயி நாதனே

(உலகம் போற்றிடும்) மெழுகைப் போலவே சாயி நாதனே
உள்ளம் உருகுதே சாயி நாதனே

பெருகும் பக்தியில் சாயி நாதனே
பிணிகள் தீருதே சாயி நாதனே

(உலகம் போற்றிடும்) திரளும் மேகமாய் சாயி நாதனே
திரண்டு வருகவே சாயி நாதனே

வறண்ட பூமியில் சாயி நாதனே
வளமை பொழிகவே சாயி நாதனே
(உலகம் போற்றிடும்) சோகம் நீக்கிடும் சாயி நாதனே
சோர்வைப் போக்கிடும் சாயி நாதனே

தேக நலம் தரும் சாயி நாதனே
தினமும் பணிகிறோம் சாயி நாதனே

(உலகம் போற்றிடும்) தாயைப் போலவே சாயி நாதனே
தாங்கும் தெய்வமே சாயி நாதனே

மாயை நீக்கிடும் சாயி நாதனே
மனதை ஆள்கிறாய் சாயி நாதனே

(உலகம் போற்றிடும்) ஆய கலைகளும் சாயி நாதனே
உன்னை போற்றுமே சாயி நாதனே

நேயம் நிலைத்திட சாயி நாதனே
நித்தம் அருளுவாய் சாயி நாதனே

(உலகம் போற்றிடும்) உனது தோளிலே சாயி நாதனே
துளசி மாலைகள் சாயி நாதனே

தினமும் சாற்றுவோம் சாயி நாதனே
தெய்வம் நீயன்றோ சாயி நாதனே
(உலகம் போற்றிடும்) தீபம் ஏற்றுவோம் சாயி நாதனே
தூபம் காட்டுவோம் சாயி நாதனே

பாவம் போக்கிடும் சாயி நாதனே
பணிந்து போற்றுவோம் சாயி நாதனே

(உலகம் போற்றிடும்) விதியை மாற்றிடும் சாயி நாதனே
வினைகள் தீர்த்திடும் சாயி நாதனே

கதியென வந்தோம் சாயி நாதனே
கடவுள் நீயன்றோ சாயி நாதனே

(உலகம் போற்றிடும்) நதியைப் போலவே சாயி நாதனே
நன்மை புரிகிறாய் சாயி நாதனே

எதுவும் உன் செயல் சாயி நாதனே
எங்கும் உன் நிழல் சாயி நாதனே

(உலகம் போற்றிடும்) அமர்ந்த நிலையிலே சாயி நாதனே
அகிலம் ஆள்கிறாய் சாயி நாதனே

நின்ற நிலையிலே சாயி நாதனே
நினைவில் வாழ்கிறாய் சாயி நாதனே

(உலகம் போற்றிடும்) ராஜ யோகியே சாயி நாதனே
ஏழை தவசியே சாயி நாதனே

தெய்வ ஞானியே சாயி நாதனே
திசைகள் போற்றிடும் சாயி நாதனே

உலகம் போற்றிடும் சாயி உனது லீலைகள்
உயர்வு தந்திடும் சாயி உனது பாடல்கள்
உலகம் போற்றிடும் சாயி உனது லீலைகள்
உயர்வு தந்திடும் சாயி உனது பாடல்கள்

ஓம் ஸ்ரீ சாயிநாத் மஹராஜ்கி ஜெய்

Sunday, July 21, 2019

திருமதி வாணி ஜெயராம் பாடிய பாபா பாடல் - By Ramana Vision

இசை: K.S. ரகுநாதன்
கவிஞர்: P. செந்தில்குமார்

திரு.T.L.மகராஜன் பாடிய சத்குரு ஷீரடி சாயி பாடல் - By Smile Video

இசை: K.S.ரகுநாதன்
கவிஞர்: P. செந்தில் குமார்
Company:Good Luck Video

Wednesday, July 10, 2019

அன்புக் குரலில் அருமையான சாயி பஜன்! - By Spiritual Mantra

திரு. சுரேஷ் வாடேகரின் அன்புக் குரலில், வீட்டில் மாலை வேளைகளில் ஒலிக்க விட ஏற்ற மிக மிக அருமையான சாயி பஜன்!
-"ஓம் நமோ சாயி நாதாய நமஹா" மற்றும் ஆரத்தி 

பாடியவர்: சுரேஷ் வாடேகர்
கவிஞர்: கிரண் மிஷ்ரா
இணையத்தில் வழங்கியோர்: Spiritual Mantra

Tuesday, July 2, 2019

திரு.சச்சிதானந்த் அப்பா பாடிய "லேகே சலோ பாலக்கி" பாடல் - By Venus Devotional

திரு. சச்சிதானந்த் அப்பா பாடிய பிரபல சாயி பாபா பல்லக்கு உற்சவ துள்ளல் பாடல்   

மடிப்பாக்கத்தில் அதிசயம் புரியும் 2அடி பாபா- By RAJ WEB NEWS 8072013725

ஸ்ரீ சக்தி சீரடி சாய்பாபா திருக்கோவில்
பிளாட் நம்பர் 749 B ,5 மெயின் ரோடு ராம்நகர் தெற்கு மடிப்பாக்கம் சென்னை.

திருத்தணி அடுத்த சோளிங்கரில் மலையில் உருவான பாபா -By RAJ WEB NEWS 8072013725

சோளிங்கர் பாபா திருக்கோவிலில் 21/6/19ஒன்பதாம் ஆண்டு முடிந்து பத்தாம் ஆண்டு அடி எடுத்து வைக்கும் இத்திருக்கோவிலில் கும்பாபிஷேகமும் யாகங்களும் சிறப்பு அபிஷேகங்களும் நடைபெற்றது இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு பாபாவின் அருளைப் பெற்றனர் அவர்களுக்கு அன்னதானமும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. Sholinghur is a selection grade town panchayat under Walajapet taluk in Vellore district of Tamil Nadu, India. The town is famous in Tamil Nadu and other neighboring states for the Lakshmi Narasimha Swamy temple.

Thursday, June 20, 2019

திரு. உன்னிமேனன் பாடிய "வரவேண்டும் நீயே" பாடல் - By Vijay Musical

இசைத் தொகுப்பு : பகவான் பாபா
பாடியவர்: உன்னிமேனன்
கவிஞர்: செங்கதிர்வாணன்
இசை: பிரதீப்
ஒளிக்காட்சி: கதிரவன் கிருஷ்ணன்
விஜய் ம்யூசிக்கல்ஸ் தயாரிப்பு பாடல் வரிகள் : வரவேண்டும் நீயே சாயி பாபா வரம் வேண்டினோமே சாயி பாபா தரவேண்டும் நீயே சாயி பாபா கரம் குவித்தோமே சாயி பாபா ஹரே ராம ராமா சாயி ராமா ஹரே ராம ராமா சாயி ராமா ஹரே கிருஷ்ண கிருஷ்ணா சாயி கிருஷ்ணா ஹரே கிருஷ்ண கிருஷ்ணா சாயி கிருஷ்ணா குறையேதுமில்லா சாயி நாதா குழலூதும் கண்ணா சாயி நாதா பரந்தாமன் நீயே சாயி நாதா பணிந்தோமே உன்னை சாயி நாதா
ஹரே ராம ராமா சாயி ராமா ஹரே ராம ராமா சாயி ராமா ஹரே கிருஷ்ண கிருஷ்ணா சாயி கிருஷ்ணா ஹரே கிருஷ்ண கிருஷ்ணா சாயி கிருஷ்ணா

அறியாமை போக்கும் சாயி பாபா அடியாரை காக்கும் சாயி பாபா புரியாத புதிரே சாயி பாபா புலனாகும் அறிவே சாயி பாபா
ஹரே ராம ராமா சாயி ராமா ஹரே ராம ராமா சாயி ராமா ஹரே கிருஷ்ண கிருஷ்ணா சாயி கிருஷ்ணா ஹரே கிருஷ்ண கிருஷ்ணா சாயி கிருஷ்ணா
எளியோனாய் வந்த சாயி நாதா இருள் போக்கும் சுடரே சாயி நாதா தெளிவான நதியே சாயி நாதா தினம் போற்றினோமே சாயி நாதா
ஹரே ராம ராமா சாயி ராமா ஹரே ராம ராமா சாயி ராமா ஹரே கிருஷ்ண கிருஷ்ணா சாயி கிருஷ்ணா ஹரே கிருஷ்ண கிருஷ்ணா சாயி கிருஷ்ணா
பிணியாவும் தீர்க்கும் சாயி பாபா பிழையாவும் நீக்கும் சாயி பாபா கனிவோடு பார்க்கும் சாயி பாபா கருணாகரனே சாயி பாபா
ஹரே ராம ராமா சாயி ராமா ஹரே ராம ராமா சாயி ராமா ஹரே கிருஷ்ண கிருஷ்ணா சாயி கிருஷ்ணா ஹரே கிருஷ்ண கிருஷ்ணா சாயி கிருஷ்ணா
பரப்பிரம்மம் நீயே சாயி நாதா பரம் பொருளானாய் சாயி நாதா அருளாளன் நீயே சாயி நாதா அடையாத கதவே சாயி நாதா
ஹரே ராம ராமா சாயி ராமா ஹரே ராம ராமா சாயி ராமா ஹரே கிருஷ்ண கிருஷ்ணா சாயி கிருஷ்ணா ஹரே கிருஷ்ண கிருஷ்ணா சாயி கிருஷ்ணா
மழைமேகம் நீயே சாயி பாபா மலர்த்தோட்டம் நீயே சாயி பாபா அழைத்தோமே உன்னை சாயி பாபா அணையாத விளக்கே சாயி பாபா
ஹரே ராம ராமா சாயி ராமா ஹரே ராம ராமா சாயி ராமா ஹரே கிருஷ்ண கிருஷ்ணா சாயி கிருஷ்ணா ஹரே கிருஷ்ண கிருஷ்ணா சாயி கிருஷ்ணா
நிழலாகத் தொடரும் சாயி நாதா நிலையான நிதியே சாயி நாதா வழங்காயோ அருளே சாயி நாதா வணங்காதோர் உண்டோ சாயி நாதா

ஹரே ராம ராமா சாயி ராமா (சாயி பாபா .... சாயி நாதா...) ஹரே ராம ராமா சாயி ராமா ஹரே கிருஷ்ண கிருஷ்ணா சாயி கிருஷ்ணா ஹரே கிருஷ்ண கிருஷ்ணா சாயி கிருஷ்ணா .........

Sunday, June 9, 2019

சாயி பக்தர்களின் சேனல்கள்

     சமீப காலங்களாக இந்தியா மற்றும் உலகம் முழுவதும் சாயி கோயில்கள் புதிது புதிதாக தோன்றி வருகின்றன. அதைப்போல யூட்யூப் தளத்திலும் பல்வேறு சாயி பக்தர்களின் சேனல்கள் உருவாகி வருகின்றதைக் காண முடிகிறது.

அவர்கள் பதிவிடும் பல சிறப்பான பதிவுகள் எல்லாவற்றையும் இந்த வலைப்பூவில் உடனுக்குடன் தெரிவிப்பது சிரமம் என்பதால்,  கீழே உள்ள பட்டியலில் கொடுக்கப்பட்டுள்ள சேனல் பெயர்களை அப்படியே 'காப்பி' செய்து யூட்யூப் வலைத்தளம் சென்று தேடல் பொறியில் 'பேஸ்ட்' செய்து, பின் அந்தந்த சேனல்களை 'சப்ஸ்க்ரைப்' செய்து கொண்டால் அருமையான அவர்களின் ஒளிக்காட்சிகளை தொடர்ந்து கண்டு மகிழ முடியும்.

1.       சாய் பிராத்தனை சேனல்
2.       baba prayer பாபா பிரார்த்தனை
3.       SHIRDI SAI TV TAMIL
4.       Sai Baba - சாய் பாபா
5.       RR TAMIL LIVE

சென்னை கௌரிவாக்கம் பாபா கோயில் - By RAJ WEB NEWS 8072013725

 Shirdi Sai Baba Temple, No: 1, Sai Baba Temple Street, Gowrivakkam, Chennai - 600073, Opposite to Sivet College.

பாண்டிச்சேரி கிருமாம்பாக்கம் ராஜாசாயி பாபா ஆலயம் - By RAJ WEB NEWS 8072013725

Shirdi Babaji Trust, No.4, Near Mahatma Gandhi Hospital,Sindhamani Nagar, Pondy - Cuddalore ECR Main Road, Kirumampakkam, Pondicherry - 607 402,India

Sunday, May 12, 2019

Shirdi- Within & Beyond ! - By rOhiT BeHaL

டாக்டர் ரபீந்தர்நாத் கக்கார்யாவின் "Shirdi - within and beyond" என்ற நூல் பற்றிய ஒளிக்காட்சி மேலே உள்ளது. இந்த நூல் ஷீரடி மற்றும் பாபாவின் வரலாற்று பொக்கிஷ பெட்டகம் போல மிக அரிய புகைப்படங்கள் அடங்கியது. ஆராய்ந்து வெளியிடப்பட்டுள்ள நூல். விலை ரூ.750 இந்திய ரூபாய்கள். இன்னும் இது போன்ற மிகச் சிறந்த நூல்களை வெளியிடும் ஸ்டெர்லிங் பதிப்பகத்தாரின் வலைத்தளம் பார்வையிட : sterlingpublishers டாட் இன்.

தாஸ்கணு மஹராஜ், ஸ்ரீ B.V. நரசிம்ம ஸ்வாமிகள், K.K. தீக்ஷித், டாக்டர் C.B. சத்பதி,  ரங்கஸ்வாமி பார்த்தசாரதி, மரியான் வாரன், டாக்டர் துரை அருள்நேயம், ராகேஷ் ஜுனேஜா, S. சேஷாத்ரி, வின்னி சித்லூரி போன்ற பல சாயி பக்தி எழுத்தாளர்களின் நூல்களை இந்த பதிப்பகம் வெளியிட்டுள்ளது.

ஜெய் சாயிராம்  

சாயி மகாராஜாவுக்கு வெள்ளி சிம்மாசனம் - By rOhiT BeHaL

பாபாவுக்கு காணிக்கையாக ஷீரடியில் ஒரு பக்தர் சமர்ப்பித்த மிக அழகான வெள்ளி சிம்மாசனம். முப்பது கிலோ எடையுள்ள வெள்ளியால் செய்யப்பட்டது.  

Monday, April 15, 2019

புன்னகைப் பூக்கள் பூத்திடும் பாபா - By Vijay Musical

(Licensed to Youtube By: One Stop Music Bhd Malaysia (on behalf of KMI Audio); UMPG Publishing, and 2 Music Rights Societies)

பாடியவர் : பிரபாகர்
பாடல் : செங்கதிர்வாணன்
இசை : சிவபுராணம் D V ரமணி
வீடியோ : கதிரவன் கிருஷ்ணன்
விஜய் மியூசிக்கல்ஸ்

பாடல்வரிகள் :
புன்னகைப் பூக்கள் பூத்திடும் பாபா
பொன்மலர் பாதம் பணிந்தோம் பாபா
அன்னையைப் போலே காத்திடும் பாபா
சர்வேஸ்வரனே சாயி பாபா
மந்திரமானது உன் பெயர் பாபா
மனக்குறை நீக்கும் மகத்துவம் பாபா
ஜென்மங்கள் யாவிலும் துணை நீ பாபா
சர்வேஸ்வரனே சாயி பாபா

மெளனத்தின் மொழியாய் பேசிடும் பாபா
மண்ணுயிர்க்கெல்லாம் தலைவன் பாபா
பெளர்ணமி நிலவாய் ஒளிதரும் பாபா
சர்வேஸ்வரனே சாயி பாபா
திவ்யமூர்த்திகள் வடிவே பாபா
தீவினையகற்றும் திருவே பாபா
கவ்விய பாவம் நீக்கிடும் பாபா
சர்வேஸ்வரனே சாயி பாபா

சீரடி மண்ணில் தோன்றிய பாபா
செய்தாய் பற்பல அற்புதம் பாபா
பூவடி தந்து அருள்வாய் பாபா
சர்வேஸ்வரனே சாயி பாபா
தாய்மடித் தேடி தவித்தோம் பாபா
தாங்கிட வந்தாய் நீயே பாபா
ஆதரவான உறவே பாபா
சர்வேஸ்வரனே சாயி பாபா

பரம்பொருள் நீயென அறிந்தோம் பாபா
பக்தியில் உன்னை தொழுதோம் பாபா
கரங்களை நீட்டிக் காத்திடும் பாபா
சர்வேஸ்வரனே சாயி பாபா
தடைகளை நீக்கும் பேரருள் பாபா
தன்னிகரில்லா எங்களின் பாபா
இடர்களை களையும் பலம் தரும் பாபா
சர்வேஸ்வரனே சாயி பாபா

குழந்தையின் உள்ளம் கொண்டாய் பாபா
குறைகளை நீக்கும் குருவே பாபா
நிழல்தரும் மரமாய் நின்றாய் பாபா
சர்வேஸ்வரனே சாயி பாபா
விழுந்திடும் விதையாய் விளங்கிடும் பாபா
விளைந்திடும் பயிராய் பயன்தரும் பாபா
எழுந்திடும் கதிராய் சுடர்விடும் பாபா
சர்வேஸ்வரனே சாயி பாபா

நீரினில் தீபம் ஏற்றிய பாபா
நெஞ்சினில் உன்னை வைத்தோம் பாபா

நேரிடும் துன்பம் நீக்கிடும் பாபா
சர்வேஸ்வரனே சாயி பாபா
பூரணமான அருளே பாபா
பூமியைக் காத்திட பிறந்தாய் பாபா
யாருனைப் போற்றினும் பலன் தரும் பாபா
சர்வேஸ்வரனே சாயி பாபா

ஆயிரம் யுகங்கள் வாழ்ந்திடும் பாபா
அடியவர்க்கெல்லாம் நலம் தரும் பாபா
தாமரைப் பூவாய் சிரித்திடும் பாபா
சர்வேஸ்வரனே சாயி பாபா
வாழ்வினில் உன்னை வணங்கிட பாபா
வரும்வினை யாவும் போக்கிடும் பாபா
தாழ்வுகள் அகன்றிடச் செய்திடும் பாபா
சர்வேஸ்வரனே சாயி பாபா

காலையில் விழித்ததும் உன்முகம் பாபா
காண்போம் ஒவ்வொரு நாளும் பாபா
பாலெனும் உள்ளம் படைத்தவன் பாபா
சர்வேஸ்வரனே சாயி பாபா
நாளைய பொழுதை நலமாய் பாபா
நடத்திட அருளும் இறைவா பாபா
தாள் பணிந்தோமே அன்புடன் பாபா
சர்வேஸ்வரனே சாயி பாபா

உதியில் நோய்களை போக்கிடும் பாபா
உலகோர் போற்றும் பகவான் பாபா

நீதியை மண்ணில் காத்திடும் பாபா
சர்வேஸ்வரனே சாயி பாபா
சோதனை ஆயிரம் நீக்கிடும் பாபா
சுந்தர வடிவாய் தோன்றிடும் பாபா
சாதனை புரிந்திட துணை வரும் பாபா
சர்வேஸ்வரனே சாயி பாபா

எளியவர்க்கெல்லாம் எளியோன் பாபா
ஏற்றம் வாழ்வில் தந்திடும் பாபா

தலைமுறைக் காக்கும் தயாபரி பாபா
சர்வேஸ்வரனே சாயி பாபா
நிலைத்தரும் நிம்மதி நின் பதம் பாபா
நினைவுகள் எல்லாம் உன் வசம் பாபா
சலனத்தை வெல்லும் சக்தியே பாபா
சர்வேஸ்வரனே சாயி பாபா

சுடுமணல் பாதையில் நிழல் தரும் பாபா
சூழ்ந்திடும் இருளை விலக்கிடும் பாபா

கடலெனக் கருணை கொண்டாய் பாபா
சர்வேஸ்வரனே சாயி பாபா
விடைதெரியாத விளக்கம் பாபா
விண்ணும் மண்ணும் ஆள்வது பாபா
சடைமுடி சிவனாய் வந்தாய் பாபா
சர்வேஸ்வரனே சாயி பாபா
அடைமழை நாளில் குடையாய் பாபா
அன்பரைக் காத்திட வருவாய் பாபா
சரணடைந்தோமே உன்னிடம் பாபா
சர்வேஸ்வரனே சாயி பாபா
இமயத்தைப் போலே உயர்ந்தாய் பாபா
இதயத்தில் நீயே நிறைந்தாய் பாபா
சமயத்தில் வந்து உதவிடும் பாபா
சர்வேஸ்வரனே சாயி பாபா

"சாயி தீர்த்" ஆன்மீக தீம் பார்க், ஷீரடி - By rOhiT BeHaL

இந்தியாவிலேயே முதல் ஆன்மீக தீம் பார்க் - ஷீர்டியில் !!

Sun-N-Sand ஹோட்டல் அருகில், 
நிகோஜ் போஸ்ட், ரஹதா தாலுகா, 
அஹ்மத்நகர், ஷீர்டி, 
மஹாராஷ்ட்ரா, இந்தியா 

Tuesday, January 29, 2019

Book Review -5

பாபா காமிக்ஸ் !
அமர் சித்திர கதா வழங்கும் 
"டேல்ஸ் ஆஃப் சாயிபாபா - தி செயின்ட் ஆஃப் ஷீர்டி "

     1967 - ஆம் ஆண்டு முதல் வெளியிடப்படும் சித்திர கதை இதழ்களான 'அமர் சித்ர கதா' இந்தியாவில் மிகவும் புகழ் பெற்றது. இந்தியாவின் பெருமைமிகு ஆன்மீகப் பாரம்பரியத்தை சிறுவர் சிறுமியர் முதல் இளைஞர் முதியோர் வரை எளிமையாகப் புரிந்து கொள்ளும்படி மிக அருமையான ஓவியங்களுடன் வெளிவந்த படக் கதைகள் (Comics) மற்றும் 'அம்புலிமாமா, 'பூந்தளிர்', 'கோகுலம்' போன்ற சிறுவர் பத்திரிக்கைகள் வந்த பொற்காலமாக இருந்தது. தற்போது தொலைக்காட்சி - இணைய ஊடகங்களின் வருகையால் அப் பத்திரிக்கை வாசிக்கும் பழக்கம் குறைந்திருந்தாலும் எதிர்கால சமுதாயத்திற்கும் படிக்க வேண்டிய அற்புதமான நூல்கள் அவை.

அந்த படக்கதை உலகில் முன்னோடியான அமர் சித்ர கதா நிறுவனத்தில் இன்றும் 400-க்கும் மேற்பட்ட தலைப்புகளில் புத்தகங்கள் கிடைக்கின்றன. உலகம் முழுவதும் 100 மில்லியன் பிரதிகளுக்கு மேல் விற்பனையாகி உள்ளன. இந்தியா முழுவதும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடைகளில் அவை கிடைக்கின்றன. 

மும்பை மாநகரின் கிழக்கு அந்தேரி பகுதியில் இருந்து வெளியாகி வரும் இந்த நிறுவன வெளியீடுகளில் ஷீரடி சாயிபாபா பற்றிய  அருமையான பலவண்ண ஆங்கில சித்திரப் படக்கதை புத்தகமே "டேல்ஸ் ஆஃப் சாயிபாபா" என்ற நூல் ஆகும். அழகிய படங்கள் உள்ள இந்நூலினை திருமதி ஷோபா கங்குலி உருவாக்கி உள்ளார். இந்நூல் ஆங்கிலத்தில் இருந்தாலும் பல மொழிகளிலும் மொழிபெயர்த்தால் எல்லா மொழி பக்தர்களும் பயன் அடைவர். இருப்பினும் ஆங்கில மொழியை அன்றாட வாழ்வில் உபயோகிக்கும், உலகம் முழுவதும் இருக்கும் சாயி பக்தர்களின் குழந்தைகளுக்குப் பெரிதும் பயன்படும். ஒவ்வொரு சாயி பக்தரின் வீட்டிலும் இருக்க வேண்டிய நூல். பல பக்கங்கள் உடைய ஒரு பெரிய நூலைவிட, சிறிய வண்ணப் படக்கதை நூல் தரும் வாசிப்பு அனுபவம் மிகவும் சிறப்பானது. அனைத்து சாயி பக்தர்களும் அன்புப் பரிசாக வழங்க வேண்டிய நூல். அமேசான் வலைத்தளத்தில் இந்திய ருபாய்.37-க்கும் கிண்டில் பதிப்பு ரூ.35-க்கும் கிடைக்கிறது. வாங்கிப் படித்து மகிழுங்கள். 

மேலும் விபரங்களுக்கு ack-media டாட் காம், மற்றும் amarchitrakatha டாட் காம் வலைத்தளங்களைப் பார்வையிடுங்கள். 

சாயிராம் சாயிராம் சாயிராம்

அரக்கோணம் ஸ்ரீ ஸச்சிதானந்த சாய் பாபா part -1 -By RAJ WEB NEWS ON LINE TV

ஸ்ரீ ஸச்சிதானந்த சாய் பாபா கோவில் /கணேஷ் நகர் அருகில் அரக்கோணம்