Wednesday, February 22, 2012

Lyrics - 4

                                                பாபா பாட்டு புஸ்ம் 


                                                                                     
                                                                           ஜெய் சாயி

இசைத்தொகுப்பின் பெயர்: சாய்தேவா 
இசை வெளியீட்டு வருடம் : 2008                                                  
பாடியவர் : பத்ம பூஷன் எஸ். பி.பாலசுப்ரமணியம் 
கவிஞர்: மருதபரணி 
இசை அமைப்பாளர்: ஆதித்யா போட்வால் 
பாடலின் தலைப்பு: சாயி பாபா....
இணையத்தில் வெளியிட்டோர் : www.raaga.com 


சாயி பாபா........சாயி பாபா..... சாயி பாபா............... சாயி பாபா..............
சாயினடி சரணமடி என்று வந்த வேளை
அன்பு தன்னைப் பொழிந்தாரே பாபா
பேரன்பு தன்னைப் பொழிந்தாரே பாபா

தேவன் அடி தாங்கும் முடி
ஜோதி ஏற்றும் வேளை
தெய்வம் என ஓடி வரும் நாதா...
தெய்வம் என ஓடி வரும் நாதா...

ராமன் என்ன?, ரஹீம் என்ன?,
நானக் என்ன?, ஏசு என்ன?..
பரமாத்ம பிரதிநிதி என்றாயோ..
மதம் என்று, குலம் என்று, வேறுபாடு எதற்கென்று -
மானிடர்க்கு உணர்த்த வந்தாயோ..

ராமன் என்ன?, ரஹீம் என்ன?,  
நானக் என்ன?, ஏசு என்ன?..
பரமாத்ம பிரதிநிதி என்றாயோ..
மதம் என்று, குலம் என்று, வேறுபாடு எதற்கென்று - 
மானிடர்க்கு உணர்த்த வந்தாயோ..                                    (குழுவினர்)

கொடிய விஷம் விழுங்கி பாரில் அருள் புரிந்த தாயோ...
இருட்டில் ஒளிவிளக்கு போல் நின்றாயோ..
இருட்டில் ஒளிவிளக்கு போல் நின்றாயோ..                   (குழுவினர்)

இருட்டில் ஒளிவிளக்கு போல் நின்றாயோ..
இருட்டில் ஒளிவிளக்கு போல் நின்றாயோ..                  (குழுவினர்)

வியாதிகளின் வேர் அழித்து வேதனையைத்தான் ஒழித்து
அருளை அள்ளித் தந்ததென்ன நீயோ..
சரணாகதி என்றவர்க்கு சத்குருவாய் நீ நின்று
அன்பே உன் உலகம் என்றாயோ...

வியாதிகளின் வேர் அழித்து வேதனையைத்தான் ஒழித்து 
அருளை அள்ளித் தந்ததென்ன நீயோ..
சரணாகதி என்றவர்க்கு சத்குருவாய் நீ நின்று 
அன்பே உன் உலகம் என்றாயோ...                                       (குழுவினர்)

பிக்ஷை ஏற்றுக்கொண்டு உயிர் பிச்சை போட்ட தாயோ..
நடந்தால் நடை அழகு என்ன சேயோ...
நடந்தால் நடை அழகு என்ன சேயோ... (குழுவினர்)

அ...... ஆ........

நடந்தால் நடை அழகு என்ன சேயோ...
நடந்தால் நடை அழகு என்ன சேயோ... (குழுவினர்)


ஹோய்...சாயினடி சரணமடி என்று வந்த வேளை
அன்பு தன்னை பொழிந்தாரே பாபா
பேரன்பு தன்னை பொழிந்தாரே பாபா

அன்பு தன்னை பொழிந்தாரே பாபா 
பேரன்பு தன்னை பொழிந்தாரே பாபா 
அன்பு தன்னை பொழிந்தாரே பாபா 
பேரன்பு தன்னை பொழிந்தாரே பாபா 
அன்பு தன்னை பொழிந்தாரே பாபா 
பேரன்பு தன்னை பொழிந்தாரே பாபா (குழுவினர்)
ஆ...........சாயி பாபா............சாயி நாதா..........ஆ....

(குறிப்பு: கீழே தரப்பட்டுள்ள கருவியின் ஒலி அளவை [volume] உங்கள் விருப்பம் போல் குறைத்து வைத்த பின்பே பாடலைக் கேட்கத் தொடங்கவும்)



Monday, February 20, 2012

108 mantras & Suprabhatham

ஷீரடி சாயிபாபா 108 மந்திரங்களும் சுப்ரபாதமும் 


இணையத்தில் வெளியிட்டோர்: varun29




இணையத்தில் வெளியிட்டோர்: LilaSakura 






இணையத்தில் வெளியிட்டோர்: UnitedWayOfBaroda



ஓம் சாயி. 



Success Quotes

வெற்றி மொழிகள்  

     நண்பரே, நல்ல எண்ணங்களுடன் உங்களது உயரிய குறிக்கோளில் விடாது முயன்றால் வெற்றி கிடைக்கும். ஒரு சாதனையாளருக்கும், சாதாரணமானவருக்கும் உள்ள வித்தியாசம் அவர்களது தினசரி பழக்கங்களில்தான் இருக்கிறது. இது ஒரு முக்கியமான வெற்றி ரகசியம். இன்னும் சற்று முயற்சி செய்திருந்தால், இன்னும் கொஞ்சம் தாக்குப் பிடித்து முயற்சியை கைவிடாமல் தொடர்ந்திருந்தால், ஜெயித்திருக்கலாம் -என்கின்ற நிலைமையில் அவசரப்பட்டு தனது உழைப்பைக் கைவிட்டவர்களே தோல்வியாளர்கள் ஆவர்.

இனி சில அறிஞர்களின் வெற்றிச் சிந்தனைகள் :

1. "மேலே செல்லுங்கள். விடாமுயற்சிக்கு ஈடாக இவ்வுலகில் எதுவுமில்லை. திறமை அதற்கு ஈடாகாது. திறமை இருந்தும் தோற்றவர்கள் ஏராளம். கல்வி மட்டும் ஈடாவதில்லை. படித்தும் பாதை தவறியவர்கள் இவ்வுலகில் பலர். மேதைத்தனமும் ஈடாகாது. பலன் காணாத மேதைகள் என்பது பழமொழி. சளைக்காத மன உறுதியும், விடாமுயற்சியுமே சர்வ வல்லமை படைத்தவை".

(முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி திரு.கால்வின் கூலிஜ் கூறிய அற்புத உரை டாக்டர் எம்.எஸ்.உதயமூர்த்தி அவர்கள் தமிழில் உருவாக்கியது)

2. "சாதனைகள் புரிவது என்பதை மனக்கட்டுப்பாட்டின் மூலம் ஒரு பழக்கமாக்கிவிட முடியும். இதைத்தான் நாம் புரிந்து கொள்ள வேண்டும். எண்ணம் - செயலாக -செயல் -பழக்கமாக -பழக்கம் - பண்பாக -பண்பு -நமது தலைவிதியாக மாறுகிறது".
                                                                                                   - டாக்டர் எம்.எஸ்.உதயமூர்த்தி.

3. உனக்கும் பிறருக்கும் பயன் தரக் கூடிய, எந்த ஒரு வெற்றி தரும் பழக்கத்தைப் பழகுவதற்கும் குறைந்த பட்சம் 66 நாட்கள் தேவை. அந்த 66 நாட்களில் ஒரு நாள் கூட இடை விடாது முயற்சி செய்தால் வெற்றி உனக்கே. அந்த செயல்கள் உனது ஆழ்மனத்தில் பதிவாகி விடுவதால் பிறகு தொடர்ந்து அதே நல்ல பழக்கத்தை கடைபிடிப்பது எளிதாகி விடுகின்றது. இதை உலகின் சிறந்த சுய முன்னேற்ற சிந்தனையாளர்கள் கண்டுபிடித்துக் கூறியுள்ளனர்.

4 . "உனக்கும் நல்லதாய், ஊருக்கும் நல்லதாய் நினைப்பதும், செய்வதும் நித்திய கடன். உனக்கும்- உனது பெற்றோர், குரு, உன் குடும்பத்தினர் முதலானவர்களுக்கும் - உன் உறவினர்கள், ஊர் மக்கள் சமுதாயத்திற்கும் - நீ பிறந்த நாட்டிற்கும் - இறுதியாக இந்த உலக மக்களுக்கே தொண்டு ஆற்றுவதே ஐவகை கடமைகளாகும் (five duties)"
                                                      -அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி அவர்கள் கூறியது

5 . நம்பிக்கையை விட சிறந்த மருந்து இவ்வுலகில் எதுவுமில்லை.
                                                                                                       -ஆரிசன் ஸ்வெட் மார்டன்  

6 . ஒருவரது புறச் சூழ்நிலைகள் அவரது அக எண்ணங்களின் அடிப்படையில்தான் அமைகின்றன. ஒருவரது எண்ணம் போல் அவரது வாழ்வு அமைகிறது.                                                                                  
                                                                                                           - ஜேம்ஸ் ஆலன்.



நம்பிக்கை - பொறுமை - விடாமுயற்சி 

சாயி ஓம்.

Sunday, February 12, 2012

Hindi Movie with English Subtitle

ஷீரடி கே சாயி பாபா - ஹிந்தித் திரைப் படம் ஆங்கில துணை உரையுடன் !

 ஷீரடி சாயி பகவானைப் பற்றிய திரைப் படங்கள் பல மொழிகளில் பல்லாண்டுகளாக வெளிவந்த வண்ணம் உள்ளன. அவற்றில் ஒன்றுதான் 'ஷீரடி கே சாயி பாபா' என்கின்ற திரைப் படம். 1977 ஆம் ஆண்டு வெளிவந்த இந்த படத்தில் திரு.சுதீர் தாலவி சாயிபாபாவாக நடித்துள்ளார். சத்ருகன் சின்ஹா, ஹேமமாலினி போன்ற பிரபலங்கள் நடித்து வெளி வந்த படம். ஆங்கில துணை உரையுடன் சாயி பக்தர்களுக்காக :

இசை: பாண்டுரங்க தீட்சித் 
வெளியீடு: DevotionalAlbum,Youtube

(இத் திரைப்படத்தைப் பெரிய திரையில் பார்க்க விரும்புபவர்கள் திரையின் கீழே உள்ள யூ டியூப் (YouTube) என்ற வார்த்தையின் மேல் சொடுக்கி, அந்த இணையத் தளத்திற்குச் சென்று, மீண்டும் அங்கு தெரியும் திரையின் அடிப்பகுதியில் காணப்படும் [     ] இது போன்ற சின்னத்தின் மேல் சொடுக்கினால் உங்கள் கணிப் பொறியில் திரை அகலமாகி திரைப்படத்தினைப் பெரிதாக்கிக் காட்டும்)
                                                                                                                             




























சாயி ஓம்.





Sunday, February 5, 2012

Sai mantra videos

ஓம் சாயி நமோ நம 

பாடியவர்: சுரேஷ் வாட்கர்
இணையத்தில் பதிவேற்றியவர்: rppanigrahi (பானிக்ரஹி)


இசை : இளையராஜா 
இணையத்தில் பதிவேற்றியவர்: buxboy4 
பாடியவர் : ஸ்ரீராம் பார்த்தசாரதி 
கவிஞர்: வாலி 






Sai Brindhavanam

 சாயி பிருந்தாவனம் 

         இந்தியாவின் ஆந்திரப் பிரதேச மாநிலத்தில், நல்கொண்டா மாவட்டத்தில் அமைந்துள்ள தேஷ்முகி கிராமம் இப்போது உலகம் முழுவதுமுள்ள சாயி பக்தர்களை ஈர்த்து வருகின்றது. கின்னஸ் சாதனை படைத்த இந்த சாயி பிருந்தாவனம் பக்தர்களின் புனித ஸ்தலமாக, ஆன்மீக சுற்றுலா இடமாக, சாயி பாபாவின் வாழ்க்கையைப் பற்றி அறிந்து கொள்ளும் கலைக் கூடமாக விளங்கி வருகின்றது. 

இந்த அற்புத பிருந்தாவனத்தின் நிறுவனர்- திரு. கண்ட நாராயண சுவாமிஜி அவர்கள். இங்கு ஷீரடி சாயி பாபாவின் 108 அடி உயர சிலையை அமைப்பதற்கு பணிகள் தொடர்ந்து வருகின்றன.









ஓம் சாயி ஸ்ரீ சாயி ஜெய ஜெய சாயி