Total Pageviews

Friday, October 25, 2013

Maharashtra

http://www.tutorialspoint.com/images/clipart/build/build17.gifஸ்ரீ சாயிபாபா அவதரித்த மாநிலம்  - மஹாராஷ்டிரா 





சாயிபக்தர்களே, ஷீரடி ஸ்ரீ சாயிபாபா அவதரித்த இந்தியாவின் மாநிலமான மஹாராஷ்டிரா பற்றிய சுவையான குறிப்புகளை இங்கு காண்போம்:

இந்த மகாராஷ்டிர மாநிலம், இந்தியாவின் மேற்குப் பகுதியில் உள்ளது. இந்தியாவின் செல்வச் செழிப்பான மாநிலமும், இரண்டாவது அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலமும், மூன்றாவது மிகப் பெரிய மாநிலமும் இதுவே. இந்தியாவின் நிதி மூலதனத் தலைநகரமான மும்பை- இங்குதான் உள்ளது. இம்மாநிலத்தின் தலைநகரமும் மும்பைதான். இம் மாநில மக்களின் மொழி மராத்தி ஆகும். கோதாவரி மற்றும் கிருஷ்ணா ஆகிய தென்னிந்திய புனித நதிகள் இங்குள்ள மேற்கு தொடர்ச்சி மலைகளிலிருந்துதான் உருவாகி ஓடி, வங்காள விரிகுடா வரை சென்று கலக்கின்றன. 

இம்மாநிலத்தின் முக்கிய நகரங்கள்:  மும்பை, புனே(கிழக்கின் ஆக்ஸ்போர்டு), நாக்பூர்(ஆரஞ்சுகளின் நகரம்), நாஷிக்(கும்பமேளா நகரம்), அவுரங்காபாத்(அஜந்தா-எல்லோரா குகைகளின் நகரம்), கோல்ஹாபூர்(கடைகள் மிகுந்த நகரம்), ஷீரடி, அமராவதி, தானே மற்றும் இன்னபிற.


View Larger Map
சென்னை முதல் ஷீரடி வரை தூரம்: ஆந்திர மாநிலம் வழியாக சற்றேறக் குறைய 1239 கிலோமீட்டர்கள்.

இம்மாநிலத்தின் முக்கிய பிரபலங்கள்: அரசர் சிவாஜி, பால கங்காதர திலகர், காந்தியின் அரசியல் ஆசான் கோபால கிருஷ்ண கோகலே, டாக்டர் அம்பேத்கர், ஞானிகளான ஞானதேவ், நாம்தேவ், ஏக்நாத், துகாராம், சமர்த்தர், கஜானன் மஹராஜ், நிவ்ருத்திநாத், சோபான், முக்தாபாய் மற்றும் பலர்.

இம்மாநிலத்தின் முக்கிய ஸ்தலங்கள்: மும்பை ஸ்ரீ சித்திவிநாயகர் கோவில், ஷீரடி சாயி பாபா மந்திர், எல்லோரா கைலாசநாதர் கோவில், பந்தர்பூர்(பண்டரிபுரம்) ஸ்ரீ விட்டல் கோவில், கோல்ஹாபூர் மஹாலக்ஷ்மி கோவில் மற்றும் பல.

இம்மாநிலத்தின் பிரபல உணவுகள்: வடாபாவ், பூரண போளி, கிச்சடி, பாஜி,போஹே, மிசால் பாவ், ஸ்ரீகந்த், மிட்டாய், மோதகம், ஆம்தி மற்றும் பல.

புகழ் பெற்ற கலைப்பொருட்கள்: பித்ரிவேர் நெசவுக் கலைத் துணிகள், கோல்ஹாபூர் செருப்பு மற்றும் நகைகள், நாராயண் பேத் புடவை மற்றும் பைதானி புடவை ரகங்கள்.

சுற்றுலா இடங்கள்: அஜந்தா மற்றும் எல்லோரா குகைகள், ஷீரடி, டாதோபா தேசிய பூங்கா மற்றும் புலிகள் சரணாலயம், கொங்கண் கடற்கரை, மாதேரன் மலை போன்றவை.
 

Wednesday, October 16, 2013

Bhajans

சாயி பஜன் மற்றும் பாடல்கள் 

பாடல் பெயர்: ஆதி சாயிராம்..
Uploaded by : priyasuriya1910



பாடல் பெயர்: சாயிராம்..சாயிஷ்யாம்...
Uploaded by : Anup Singh Choudhary 



இசைத் தொகுப்பு: சாயி தூன் (பாடல் மெட்டு)
வெளியிட்டோர்: venusdevotional 


Sunday, October 13, 2013

Saibakti News

சாயி பக்திச் செய்திகள் 
ரூபாய். ஒன்றரை இலட்சம் மதிப்புள்ள காசுகள் ஷீரடி கிணற்றிலிருந்து கிடைத்தது !

ஷீரடியில் சாயி பாபா வாழ்ந்திருந்த காலத்தில் அவர் வழக்கமாக நீர் இறைத்த கிணறு இன்றும் பராமரிக்கப்பட்டு வருகிறது. அந்த கிணற்றினை சமீபத்தில் தூர் வாரி சுத்தம் செய்தனர். லெண்டி பாக் பூங்கா பகுதியில் அமைந்துள்ள இக் கிணற்றினை ஷீரடி சாயி பாபா சன்ஸ்தான் அறக்கட்டளை சுத்தம் செய்ய ஏற்பாடு செய்திருந்தது. கோவிலுக்கு நீர் வழங்கும் குளம் வற்றிவிட்டதாலும், தண்ணீர் பிரச்சினையை சமாளிக்கவும் இக் கிணற்றினை தூர் வார நிர்வாகம் முடிவு செய்தது. மேலும் நாசிக் நகரின் தர்ணா அணைக்கட்டு நீரும் சரிவர வரத்து இல்லாததால், ஷீரடிக்கு தினந்தோறும் வருகை தரும் ஆயிரங்கணக்கான பக்தர்களுக்கு குடிநீர் அளிக்க ஏற்பாடு செய்ய வேண்டியுள்ளது.  இந்த கிணறை தோண்டி சுத்தம் செய்யும் பொழுது தொழிலாளர்கள் ரூபாய். ஒன்றரை இலட்சம் மதிப்புள்ள காசுகளை கண்டெடுத்தனர். இவை ரூபாய்.1, ரூ.2, ரூ.5 என பல வகைகளில் பக்தர்கள் போட்ட காசுகளாகும். இவை மட்டுமில்லாது சிறு சாயிபாபா சிலைகள், தேங்காய் போன்ற பொருட்களும் எடுக்கப் பட்டன. 

இந்த கிணறு, பூக்கள் சூழ்ந்த நுழைவாயிலுக்கு நேர் எதிரே, மேற்கு மதிற்சுவர் பக்கத்தில் லெண்டி பாக் பூங்காவில் அமைந்துள்ளது. பக்தர்கள் உதவியோடு பாபாவே அந்த காலத்தில் அகழ்ந்து, உருவாக்கிய கிணறு என்பது இதன் சிறப்பாகும். இந்த கிணற்று நீரை அருந்திய சாயிபாபா இதனை பட்கி என்ற பெயரில் அழைத்தார். சுற்று வட்டாரத்தில் சுரம் மற்றும் பிற வியாதிகளிலிருந்து நிவாரணம் அளிப்பதாக இந்த கிணறு பிரபலம் ஆகிவிட்டது. அந்த காலங்களில் மக்கள் இக் கிணற்றிலிருந்து நீர் இறைத்த வண்ணம் இருந்தபோது தண்ணீர் சிறிது சிறிதாக வற்றிவிட்டது. ஆனால் 1983-ஆம் ஆண்டு திரு. ஏ.ஆர்.ஷிண்டே அவர்கள் இந்த கிணறை ஆழப்படுத்திய பிறகு தாராளமாக தண்ணீர் கிடைக்கத் துவங்கியது. அந்த காலத்தில் அங்கு இரண்டு கிணறுகள் இருந்தன. இந்த லெண்டி பாக் பூங்கா கிணறும், சமாதி மந்திரில் இப்போது உள்ள படிக்கட்டு அருகில் இடது புறத்தில் ஒரு கிணறும் இருந்தன. ஆனால் இன்று அந்த இன்னொரு கிணறு இல்லை.

(Courtesy: Rohit behal)

ஓம் ஜலஹிநஸ்தலே க்ஹின்னபக்தர்தாம் ஜலஸ்ரிஸ்திக்ருதே நமஹ:
குடிக்க நீரின்றி பக்தர் (திரு. நானா சாந்தோர்கர்), நீரில்லா இடத்தில் (ஹரிச்சந்திர மலைப் பகுதி) தாகத்தில் தவித்தபோது தண்ணீரை உருவாக்கி தாகம் தணித்தவரே போற்றி 

Sunday, October 6, 2013

Pathways in Hindu Culture

Karma yoga, Gnana yoga, Raja yoga and Bhakti yoga

உலகத்தின் பழமையான கலாச்சாரமும், இடைவெளி இன்றி தொடர்ந்து செழித்து விளங்கும் கலாச்சார வாழ்வியல் முறைதான் ஹிந்துக் கலாச்சாரம். இக் கலாச்சாரம் கடவுளை அறிய, உணர, தொடர்பு கொள்ள, நெருங்க, கடவுளுடன் மனித குலத்தின் உறவை உணர்ந்து கொள்ள உருவாக்கிய பாதைகள்தான் பக்தியோகம், ராஜயோகம், ஞானயோகம், மற்றும் கர்மயோகம் ஆகும். ஏன் இவ்வளவு விதமான மார்க்கங்கள் (அதாவது பாதைகள், வழிகள்) மக்களுக்கு? ஏன் என்றால் இறைவனின் படைப்பில் ஒருவர் கூட இன்னொருவர் போல நூறு சதவிகிதம் படைக்கப் படவில்லை. அதுதான் அந்த மஹா சக்தியின் திறமை. அவ்வாறு உலகின் எந்த ஒரு இனத்திலும் தனி மனிதர்களின் பிறப்பு, வளர்ப்பு, வயது, படிப்பு, அறிவு நிலை, முயற்சி, ஒழுக்கம், பயிற்சி, புரிந்துகொள்ளும் திறன், விருப்பம், மனோபாவம், வாழ்க்கை லட்சியம் இவை மாறுபட்டு, வேறுபட்டு, தனித்தன்மையோடு இருப்பதால், இருக்க அவர்கள் விரும்புவதால்- மனித இனத்தை வழி நடத்த பல விதமான பாதைகள் தேவைப்படுகின்றன. 

எனவே நமது பாரத நாட்டின் யோகிகள், சித்தர்கள், ஞானிகள், ரிஷிகள், தவச்சீலர்கள், முனிவர் பெருமக்கள் பல்லாயிரம் ஆண்டுகள் பாடுபட்டு உருவாக்கிய அற்புத வழிகள் தான் இந்த யோகப் பாதைகள் ஆகும். ஒவ்வொருவரின் வயது, விருப்பம் மற்றும் ஆராய்ச்சித் திறனுக்கேற்ப பக்தியின் மூலமோ, அன்றாட ஒழுக்க வழக்கப் பயிற்சிகளான யோகா, தியானம் மற்றும் மந்திர உச்சரிப்பு என ராஜ யோக முறையின் மூலமோ, புனித நூல்கள் மூலம் ஆன்மீக அறிவைப் பெருக்கி, அறிவைப் பரப்பி ஞானயோகம் பயின்றோ, மக்களுக்கும் வழிபாட்டு இடங்களுக்கும் எல்லாவிதத்திலும் உதவி, தொண்டு புரிவதன் மூலம் கர்ம யோகப் பாதையில் வீறுநடை போட்டுச்  செல்வதன் மூலமோ எல்லாம் வல்ல தெய்வத்தின் பேரருளைப் பெறலாம், கடவுளைக் காணலாம், ஆண்டவருடன் பேசலாம். இறை சக்தி மர்மமான முறையில், நுணுக்கமாக செயல்படுவதை அறிவுக்கூர்மை மேம்பட்டு அனுபவத்தால் உணர்ந்து கொள்ளலாம்.


படிநிலைகள்
பக்தி யோகம் (Devotional service), ராஜ யோகம் (Exercises & Meditation), ஞான யோகம் (Philosophical Research), மற்றும் கர்ம யோகம் (Selfless service & Action) என்ற நான்கு வித வழிகள் இக் கட்டுரையில் உள்ள வலைப்பூ அமைப்பாளரின் விளக்கப் படத்தில் படிகள் போன்று உருவகப்படுத்தப் பட்டுள்ளன. இது ஏனெனில், துவக்கத்தில் வெவ்வேறு பாதைகளாய் தோன்றினாலும் நெடிய வாழ்க்கையில் - ஆன்மீகத்தில் முன்னேறிச் செல்லும் ஒருவர் இவை நான்கும் ஒன்றுக்கொன்று உதவியாய் அமைந்துள்ளதைக் கண்டு கொள்வார். ஒன்றுக்கொன்று நெருங்கிய தொடர்போடு உள்ளதைப் புரிந்து கொள்வார். இந்த நான்கில் எந்த ஒரு வழியினாலும் இறை அன்பைப் பெற முடியும் என்றாலும், இவற்றில் மேன்மை அதிகம் உடைய வழி கர்ம யோகமே. இதை நமது ஷீரடி சாயிபாபா பூவுலக வாழ்வில் தெளிவாக, செயல்முறை வடிவில் வாழ்ந்து காட்டியுள்ளார். அதாவது மக்களிடம் பக்திவழியினை (பஜன்கள், ஆடல்-பாடல், ஆரத்தி, இசை, பூஜை, கொண்டாட்டங்கள்) அனுமதித்தபோதும், பிரம்மச்சரிய ராஜயோகியாய் கடுந்தவத்தில் இருந்தபோதும், அனைத்து மதங்களின் ஆழ்ந்த தத்துவங்களை கரைத்துக் குடித்திருந்த பேரறிவு ஞான நிலையில் இருந்தபோதும், தமது தனிப்பட்ட வாழ்க்கையில் மக்களுடன் கலந்து பழகி - நோயுற்றவர்கள், ஆதரவு அற்றோர்களுக்கு, ஆபத்தில் அவசரத்தில் உள்ளோருக்கு, உதவி தேவைப்படுவோருக்கு அற்புத முறையில் கர்ம யோகியாய் தினந்தோறும், இறுதி மூச்சு அடங்கி மகா சமாதி அடையும்வரை தொண்டாற்றினார். ஊர் உலகிற்காக கடுமையாக உழைத்தார். உதவியை வேண்டும் பக்தர்களை கைவிட்டு விடாது தொடர்ந்தும் உழைத்து வருகிறார்.

சாதாரண மனிதர்களில் ஒருவர் இறையுணர்வில் திளைத்து இருப்பவராக, பல யோகப் பயிற்சி வித்தைகளில் கை தேர்ந்தவராக, பற்பல புனித நூல்களைக் கற்றவராக இருக்கலாம். இவரால் - தனக்கும், தன் குடும்பத்துக்கும், ஒரு சில பேர்களுக்குமே பயன் இருக்கும். ஆனால் ஒரு தலைசிறந்த கர்ம யோகியால் இவ்வுலக மக்களுக்கே லாபம் கிட்டுகிறது. அத்தகைய கர்ம யோகி எவ்வித பிரதிபலனும் எதிர்பார்ப்பவராக இருக்க மாட்டார். அதாவது பிறரிடமிருந்து செய்நன்றி, பணம், புகழ், பதிலுதவி, செல்வம், செல்வாக்கு போன்றவற்றை எதிர்பார்த்து ஏங்கிக் கொண்டு இல்லாமல் சேவை செய்வதிலேயே அதிகம் மகிழ்ச்சியடைபவராய் இருப்பார். அந்த மனத் திருப்தியே அவருக்கு ஊக்கமளிக்கும் ஒன்றாக இருக்கும். அந்த பொதுநலத் தொண்டில் மிகுந்த மன நிறைவு, இறைவனிடம் அதிகமான நெருக்கம், நிம்மதி, வாழும் வாழ்க்கைக்கு ஒரு அர்த்தம், பயன்பாடு, ஒரு தெளிவு - இவையெல்லாம் கிடைப்பதை உணர்ந்து கொள்வார். இத்தகைய கர்ம யோகம் பயில்பவர்- பால், நிறம், உயரம், தோற்றம், இனம், ஜாதி, ஜாதிப் பிரிவு, மொழி, மொழிப் பிரிவு, மதம், மதப் பிரிவு, மாவட்டம், மாநிலம், நாடு என எவ்வித வேற்றுமை உணர்வும் கொள்ளாது "இவ்வுலகமே ஒரே குடும்பம்" ('உதார சரிதானாம் து வசுதெய்வ குடும்பகம்' - உபநிஷத்) என்ற மனோபாவத்துடன் தொண்டாற்றுவார்.

இந்த மேன்மை மிகுந்த வழிகள், உத்திகள், கருவிகள், கலைகள், விளக்கங்கள், விஞ்ஞானபூர்வ அணுகுமுறைகள், ஆன்ம ரகசியங்கள் போன்றவற்றை உலகத்திற்கு அளித்ததுதான் இந்துக் கலாச்சாரத்தின் சாதனை. பெரும் அதிர்ஷ்டசாலிகளான இந்துக்கள் யாவரும் - இத்தகு யோகம் பயிலும் சாதாரண மனிதர்களின் தினசரி வாழ்வில் அன்றாட பிழைகள், தவறுகள், ஏற்ற இறக்கங்கள், வெற்றி தோல்விகள் ஏற்பட்டால் - இவற்றைப் பார்த்து மூல மெய்ஞானத்தை எடை போடக் கூடாது. சிறிதும் சந்தேகமின்றி நிரூபிக்கப்பட்ட இந்த வெற்றி வழிகளைத் தமிழ் மற்றும் சம்ஸ்கிருத மூல நூல்களைப் படித்துப் பார்க்க வேண்டும். நமது பாரம்பரியத்தின் பெருமையை உணர்ந்து, அதைக் காத்திட தொண்டுகள் செய்து, உடல்-மன-ஆன்மீகப் பயிற்சிகள் செய்து, பக்திநெறியும் தழைக்கச் செய்ய வேண்டும். இந்த எடுத்துக்காட்டான வாழ்க்கையே ஷீரடி சாயிபாபாவின் வரலாற்றில் நாம் உணர்ந்துகொள்ள வேண்டிய விஷயமாகும்.
வாழ்க வளமுடன்...
 

ஓம் சஹஸ்ரநாம லக்ஷிதாய நமஹ:
ஆயிரங்கணக்கான பெயர்களால் அழைக்கப்படுபவரே போற்றி 

Tuesday, October 1, 2013

Malaysia Vasudevan Songs

'Dasganu of Tamil Nadu' Thiru. Malaysia Vasudevan Songs
(Youtube upload by: INRHIND)