Total Pageviews

Saturday, May 25, 2013

Sai Paaduka

சாயி பாதுகை


அன்பார்ந்த சாயி பக்தர்களே, நீங்கள் இந்தியா முழுவதும் உள்ள பெரும்பாலான சாயி மந்திர் (கோவில்)களுக்குச் செல்லும்பொழுது அங்கு சாயி பாதுகைகள் வைக்கப்பட்டிருப்பதையும், கோவிலுக்கு வரும் பக்தர்கள் அதன் மேல் தலை வைத்து வணங்குவதையும் காணலாம். இந்த வழக்கத்தைப் பற்றி இந்த கட்டுரையில் சிந்திப்போம்.

பாதுகை பூஜை வரலாறு 


வால்மீகி ராமாயணத்தில் ராமரை பதினான்கு வருடங்கள் வனவாசம் அனுப்பியபின் பரதர் ரகுவம்ச ராஜ்யத்தின் மன்னராக பதவி ஏற்கும் சூழ்நிலையில், முனிவர் வசிஷ்டரின் அறிவுரைப்படி பரதர், ராமரது பாதுகைகளை (மரத்தில் செய்யப்பட்ட காலணிகள்) தன் தலைமேல் ஏந்தி வந்து அரசவை அரியாசனத்தில் வைத்து வணங்கி வந்தார். ராமர் காட்டில் இருக்கும் நிலையில், ராமரது ஆளுகை போல, ஓர் நிகரான உருவகமாக பாவித்து அந்த பாதுகைகள் பரதரால் நிறுவப்பட்டு மக்களின் மரியாதைக்கும், பேரன்பிற்கும், மதிப்பிற்கும் உரியதாயின (கூடுதல் தகவல்களை ராமாயண நூலில் காண்க). அன்றைய நாளிலிருந்து பாதுகை பூஜை அல்லது மரியாதை வழக்கம் ஏற்பட்டது.
பக்தி யோக வழிமுறையில் சரண பாதுகைகளின் முக்கியத்துவம் 

பாதுகைகளில், பாதத்தில் தலை வைத்து வணங்குவது என்பது பரிபூரண சரணாகதியைக் குறிக்கிறது. இது அகங்காரம் அல்லது 'தான்' என்னும் முனைப்பு ஒருவருக்கு நீங்கிய நிலையைக் காட்டும் அறிகுறி. ஹிந்துக் கலாச்சாரத்தில் மஹா விஷ்ணுவின் வாமன அவதாரம், விஷ்ணுவின் பாதக் குறியீட்டினை தலையில் கொண்டுள்ள ஆதிசேஷன், தத்தாத்ரேயர் அவதாரம் என பல நிலைகளில் பாதுகை வழிபாடு முக்கியத்துவம் பெற்றுள்ளது (குறிப்பாக வட இந்தியாவில்). சேர மண்டலத்தில் தோன்றிய நம் ஆதி சங்கரர் தமது குரு பாதுகா ஸ்தோத்திரத்தில் பின்வருமாறு கூறுகிறார்:

'கவித்வ வராஷி நிஷாகராப்யாம் தௌர்பாக்ய தாவாம் புதமாலிகாப்யாம் 
தூரி க்ருதானம்ர விபத்திதாப்யாம் நமோ நமஹ ஸ்ரீகுரு பாதுகாப்யாம்'

பொருள்: அறிவுக்கடலாகவும், ஒளி மிகுந்த முழு நிலவாகவும், தீ போன்று சுட்டெரிக்கும் துரதிர்ஷ்டங்களை அணைத்துவிடும் குளிர்ச்சியான நீரைப்போலவும், தம்மிடம் சரணடைந்தோரின் வருத்தங்களைப் போக்கும் தன்மையோடு விளங்கும் குருவின் புனித பாதுகைகளைப் போற்றுகிறேன். 

ஸ்ரீ வைஷ்ணவத்தின் முனிவரான ஸ்ரீ வேதாந்த தேசிகர் 1008 பாமாலையாக ஸ்ரீ ரெங்கநாத பாதுகா சஹஸ்ரம் இயற்றியுள்ளார். இந்தியாவின் கயா நகரில் விஷ்ணு பாதத்திற்கென தனி கோவில் உள்ளது. புத்த கயாவின் போதி மரத்தடியில் புத்தரின் பாதச்சுவடுகள் வழிபடப் படுகின்றன. தீபாவளிப் பண்டிகையன்று மஹாலக்ஷ்மியின் பாதங்கள் மற்றும் கோகுலாஷ்டமியன்று குழந்தை கண்ணனின் பாதச்சுவடுகள் போன்ற அடையாளக் குறிப்புகளை மாவுக் கோலத்தால் வரைவது பாரம்பரிய வழக்கம். வீட்டின் வாசற்படியிலிருந்து பூஜையறைவரை தரையில் வரைவர். தெய்வ சக்தி வீட்டினுள்ளே வரும் உணர்வை நமக்கு ஏற்படுத்தும் உருவகங்களாக இவை விளங்குகின்றன. 

அன்றாட உபயோகத்திற்கான பாதுகை - தேக்கு மரம், சந்தன மரம், கருங்காலி மரம், அல்லது இயற்கையாக இறந்துபோன யானையின் தந்தம் போன்றவற்றில் செய்யப்படும். வழிபாட்டிற்காக பயன்படுத்தப் படும் பாதுகைகள் வெள்ளி, வெண்கலம், அல்லது பித்தளையில் செய்யப் படுகின்றன. 


சாயிசத்சரித்திரத்தில் பாதுகைகள் 

சாயிசத்சரித்திரம் அத்தியாயம்-5, பக்கம் 43 இல் பாதுகைகள் தொடர்பான விஷயங்கள் கீழ்க்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளன:
" சக வருடம் 1834இல் (1912) பம்பாயைச் சேர்ந்த டாக்டர் ராமராவ் கோத்தாரி, ஒருமுறை ஷீரடிக்கு பாபாவின் தரிசனத்துக்காக வந்தார். அவரது கம்பவுண்டரும், அவரது நண்பர் பாயி கிருஷ்ணாஜி அலிபாகரும் அவருடன் வந்தார்கள். கம்பவுண்டரும், பாயியும், சகுண் மேரு நாயக் உடனும் கோவிந்த் கமலாகர் தீட்சித் உடனும் நெருங்கிய நண்பர்களானார்கள்.

சில விஷயங்களைப் பற்றி இவர்கள் பேசிக்கொண்டிருக்கையில்.....

{தொடரும்)




பாபாவுடன் ஷீரடியில் பக்தர்கள் நிற்கும் அரிய புகைப்படம்
(Source: Sai devotees Umeshji and Rohit behal)
















Wednesday, May 15, 2013

As a Man Thinketh

உயர்ந்த எண்ணங்களே உயர்ந்த வாழ்க்கைக்கு அடிப்படை 

அன்பர்களே,  நமது மனமும் அதில் எழும் எண்ணங்களின் சக்தியும், அவற்றின் விளைவுகளும் பற்றி டாக்டர் எம். எஸ். உதயமூர்த்தி அவர்களின் உரை இங்கே தரப்பட்டுள்ளது. எண்ணம் போல் வாழ்வு - என்பதை உணர்ந்து, தெய்வ நம்பிக்கையையும் தன்னம்பிக்கையையும் வளர்த்துக் கொண்டீர்களானால் வெற்றி மேல் வெற்றி உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் கிடைக்கும். வாழ்க வளமுடன்.



இணையத்தில் பதிவேற்றியவர் : திரு. செந்தில் ஆறுமுகம் 

Thursday, May 9, 2013

Sai baba Centres Malaysia -2

மலைசியாவில் சாயிபாபா - பகுதி 2

4.  ஷீரடி சாயி பாபா சொசைடி ஆப் மலைசியா 
     Lot 2574, ஜலான் செருலிங் 59
     தமான் கிளாங் ஜயா,
     41200 கிளாங், செலங்கொர் 
     மலைசியா 

கிளாங் பாபா 


5. இபோ ஷீரடி சாயி சென்டர் 
    22 & 24, ஜலான் சுல்தான் இஸ்கந்தர்,
    இபோ, மலைசியா.

இபோ சாயிபாபா 

 6.  பினாங் ஷீரடி சாயி சென்டர்,
      40, 42 & 44 குயீன் ஸ்ட்ரீட், 
      ஜார்ஜ் டவுன், பினாங்,
      மலைசியா.
        

7. செரெம்பன் ஷீரடி சாயி சென்டர்,
    1424 & 1425, புகித் ராசா பிசினஸ் சென்டர்,
    ஜலான் ராசா செரெம்பன், நெகெரி செம்பிலான்,
    மலைசியா.
செரெம்பன் பாபா 
  Photo Courtesy: Rohit behal

 ஹரே ராம ஹரே ராம சாயிராம ஹரே ஹரே 
ஹரே க்ரிஷ்ண ஹரே க்ரிஷ்ண சாயிக்ரிஷ்ண ஹரே ஹரே

Thursday, May 2, 2013

Red Cross


சர்வதேச செஞ்சிலுவை சங்கம் 

International Red Cross & Red Crescent Movement

உலகின் மிகப் பெரிய சுதந்திரமான, இலாபநோக்கற்ற மனிதாபிமான அமைப்பு- சர்வதேச செஞ்சிலுவை சங்கம் மற்றும் செம்பிறை இயக்கம். சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் நோக்கம்- இவ்வுலகத்தின் மனித சமுதாயம் படும் துன்பங்களைக் குறைக்கவும், துன்பங்களை தடுக்கவும் உதவுவதே ஆகும். தனது பல்லாயிரங்கணக்கான தொண்டர்களின் மூலம் உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் சேவை செய்தலும், தொண்டுகளை ஊக்குவித்தலும் இச் சங்கத்தின் செயல்பாடுகளாம். இத்தகைய மக்கள் தொண்டின் மூலம் உலக சமாதானத்திற்கு உகந்த சூழலை உருவாக்கும் பணியில் தன்னை அர்ப்பணித்து உள்ளது.



இந்திய செஞ்சிலுவை சங்கம், ஓர் தன்னார்வ மனிதாபிமான தொண்டு நிறுவனமாகும். இது பேரியக்கமான சர்வதேச செஞ்சிலுவை சங்கம் மற்றும் செம்பிறை இயக்கத்தின் உறுப்பினராக உள்ளது. இந்தியா முழுவதும் சுமார் 700 கிளைகளைக் கொண்டுள்ள இந்திய செஞ்சிலுவை சங்கமானது இயற்கைப் பேரழிவுகள், அவசர காலங்களில் பாதிக்கப்படும் மக்களுக்கு நிவாரண உதவிகள் செய்து அவர்களின் பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்தை பேணிக் காக்கும் அரும்பணிகளையும் செய்து வருகிறது. இந்திய செஞ்சிலுவை சங்கமானது (IRCS) இந்திய செஞ்சிலுவைச் சங்க சட்டத்தின் கீழ் 1920 ஆம் ஆண்டு நிறுவப்பட்டு 1920-பாராளுமன்ற சட்டம்  XV-இன் கீழ் இணைக்கப்பட்டது ஆகும். 


அதிமேதகு இந்திய ஜனாதிபதி அவர்களே இச் சங்கத்தின் தலைவராகவும், மாண்புமிகு மத்திய சுகாதார அமைச்சர் சங்கத்தின் அவைத் தலைவராகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது. இச் சங்கத்தின் தொண்டுகளாவன :
  • மனிதாபிமான விழுமியங்களை மக்களிடையே ஊக்குவிப்பது 
  • இயற்கை அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தக்க சமயத்தில் உதவுவது 
  • பேரழிவு தயார்நிலை நடவடிக்கைகள் - இயற்கைச் சீற்றங்கள் வந்தால் அவற்றின் மூலம் வரும் அபாயங்கள் பற்றிய விழிப்புணர்வும், அந்த பாதிப்புகளைக் குறைத்தலும், சமாளிப்பதும் 
  • சுகாதாரம் மற்றும் சமூக பாதுகாப்புப் பணிகள் 
  • திறன் மேம்பாட்டு நடவடிக்கைகள் 
  • மருத்துவமனைச் சேவைகள், இரத்த வங்கி, எச்.ஐ. வி / எய்ட்ஸ் பற்றிய திட்டங்கள், தொழில் பயிற்சி மையங்கள், மகப்பேறு-குழந்தை-மற்றும் குடும்ப நலத்திட்டங்கள், 
  • தொற்று நோய்கள், தீ, ரயில் மற்றும் பிற விபத்துக்கள் மற்றும் நிகழ்வுகளில் நிவாரண நடவடிக்கைகள்.


Youtube videos Courtesy: Toni Valls Pou, GoodGamesNL, Matteo Natalucci