Total Pageviews

Saturday, September 29, 2012

TV Serial

செய்திகள் : டாக்டர் ராமானந்த சாகரின் தொலைக்காட்சித் தொடர் இப்போது டி வி டி வடிவில் !


   * டாக்டர் ராமானந்த சாகர் பற்றி ஏற்கனவே இந்த வலைப்பூவில் ஒரு கட்டுரையில் பார்த்துள்ளோம். கடந்த செப்டம்பர் 27, 2012 வியாழன் அன்று சென்னையில் உள்ள ராஜ் வீடியோ விஷன் நிறுவனம் ஷீரடி சாயி பாபா தொலைக்காட்சித் தொடரின் 12 பாகங்களை டிவிடி குறுந்தட்டு வடிவில் விற்பனைக்கு வெளியிட்டுள்ளது. இந்த புகழ் பெற்ற தொடர் மக்களையும், பாபா பக்தர்களையும் வெகுவாகக் கவர்ந்த அற்புதத் தொடராகும். இது ஒவ்வொரு வீட்டிலும் இருக்க வேண்டிய அருமையான தயாரிப்பு.
விலை: ரூ. 599
மேலும் தகவல்களுக்கு:
இணைய தளம்: ராஜ்வீடியோவிஷன்.நெட்
முகவரி:
703, அண்ணா சாலை, ஆயிரம் விளக்கு,சென்னை,தமிழ்நாடு, இந்தியா.

(* இது ஒரு தகவல் குறிப்பு மட்டுமே. இத்தகவலுக்கு எவ்வகையிலும் வலைப்பூ ஆசிரியர் பொறுப்பல்ல. பக்தர்கள் நிறுவனங்களை நேரில் அணுகி பயனடையுமாறு வேண்டப்படுகிறது)

Friday, September 28, 2012

Silicon Valley Dwarakamayi

சிலிகான் வேலியில்  துவாரகாமாயி !


அமெரிக்காவின் சிலிகான் வேலியில் சன்னிவேல் பகுதியில் அமைந்துள்ள ஷீரடி  சாயி ஆலயம் இதுதான் :


                                          சாயி ஓம்.

Sunday, September 23, 2012

The History of Baba Statue - 6

சாயி மூர்த்தியின் வரலாறு - 6

      பாபா மூர்த்தியினை செதுக்கும் பணியில் ஈடுபட்டிருந்த திரு. தலிம் அவர்கள் தனது உதவியாளர்கள் மறுத்துவிட்ட நிலையில் தானே உளியினை கையில் கொண்டு அந்த முக்கியமான பகுதியினை செதுக்க ஆரம்பித்தார். படபடக்கும் நெஞ்சுடன் "பாபா எனக்கு உதவி செய்யுங்கள்" என்று வேண்டிக் கொண்டே சுத்தியலால் லேசாக தட்ட ஆரம்பித்தார். காற்றின் வெற்றிடம் ஒரு சிலையில் ஏற்பட்டால் அதை நீக்குவதோ, முழுமையாக உடைத்து எடுப்பதோ அவ்வளவு சுலபமான விஷயம் அல்ல. சிற்பியின் பல நாள் இரவு பகல் பாராத கடும் உழைப்பினை பணயம் வைக்கும் செயலாக அது ஆகிவிடக் கூடும். இந்த சூழ்நிலையில், வெற்றிடம் ஏற்பட்டிருந்த பகுதிக்கருகில், அந்த மார்பள் கல்லில் இடது முழங்கால் பகுதியில் ஒரு தட்டு தட்டியதும் வியக்கத்தக்க விதத்தில் சிறு துண்டு மட்டும் தனியாக விழுந்தது. 

சிற்ப மகரிஷி தலிம் அவர்களின் பெயரை காலமெல்லாம் சொல்லப் போகும் அந்த அற்புத மூர்த்தி எவ்வித குறையும் இல்லாமல், முழுமையாக, சிறப்பாக அமைந்தது. எது தேவையற்ற பகுதியோ அது மட்டும் செதுக்கப்பட்டு இருந்தது.  இதைக் கண்டு சிற்பி தலிம் அவர்கள் கண்களில் ஆனந்தக் கண்ணீருடன் பாபாவை வணங்கினார். மகிழ்ச்சிப் பெருக்குடன் நடனமாடியபடியே அனைவருக்கும் இனிப்புகளை வழங்கினார். இந்த அதிசய நிகழ்ச்சியினைப் பார்த்த அனைவரும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர். 


http://i53.tinypic.com/2h540gn.jpg
திருமதி லக்ஷ்மிபாய் ஷிண்டே அம்மையார் 
பிறகு இந்த ஐந்து அடி ஐந்து அங்குலம் அளவுள்ள முழுமையான மூர்த்தி அந்த கிராமத்தைச் சுற்றிலும் பெரும் ஆரவாரத்துடன் ஒரு விழாவாக எடுத்துச் செல்லப்பட்டு மக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டது. மிகுந்த உயிரோட்டத்துடன், ஷீரடி சாயி பாபாவின் தோற்றத்தை அப்படியே வெளிப்படுத்தும் விதமாக அம்மூர்த்தியை உருவாக்கியிருந்ததை பார்த்து அனைவரும் பரவசமடைந்தனர். 

பாபாவின் காலத்தில் அவரோடு வாழ்ந்து அவரை நேரில் கண்டிருந்த சுவாமி ஸ்ரீ சாயி சரணானந்தரும், திருமதி லக்ஷ்மிபாய் ஷிண்டே அம்மையாரும் பெருவியப்பு அடைந்தனர். பாபா உயிருடன் மீண்டும் அந்த மூர்த்தி வடிவில் அமர்ந்திருப்பதைப் போல உணர்ந்து ஆச்சரியமடைந்தனர்.
http://i55.tinypic.com/23h6075.jpg
சுவாமி ஸ்ரீ சாயி சரணானந்தர் 

இந்த சாயி மூர்த்தி பிரதிஷ்டை செய்யப்பட்ட நிகழ்வும், மேலும் பல சுவாரசியமான  தகவல்களும் அடுத்த பகுதியில் தொடர்ந்து காண்போம்.


ஓம் சாயி சிவ சிவ  சாயி  ஓம் சாயி சிவ சிவ  சாயி  ஓம் சாயி சிவ சிவ  சாயி  ஓம் சாயி சிவ சிவ  சாயி 

(வரலாற்றுப் பயணம் தொடரும்)

Monday, September 3, 2012

Shirdi Sai Bhajan

திரு. சுரேஷ் வாட்கர் அவர்கள் பாடிய சாயி பஜனைப் பாடல்- மனதை லேசாக்கி, இனிமையான நிலைக்கு கொண்டு வரும் சக்தி உடையது இந்த பஜனை :

இணையத்தில் வெளியிட்டோர்: spiritualmantra


இணையத்தில் வெளியிட்டோர்: saravanscm

சாயி ஓம்.

The History of Baba Statue -5

சாயி மூர்த்தியின் வரலாறு - 5              
      
    சிற்ப மகரிஷி தலிம் அவர்கள் மும்பையில் தொழில் செய்து கொண்டிருந்தபோது அவர்தம் சிற்பக் கலைத் திறமை கண்டு வியந்த அரசாங்கம் மும்பை மாநகரை அழகுபடுத்த அழைத்தது. மும்பை மாநகரின் ப்ளோரா பவுன்டைன் பகுதி முதல் ஹைகோர்ட் பகுதி வரை இவர் உருவாக்கிய சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன. இத்தகைய திறன் படைத்த தலிம் அவர்கள் உருவாக்கிய உலகப் புகழ் பெற்ற சாயி மூர்த்தி இன்றும் ஷீரடியில் லட்சோபலட்சம் பக்தர்களை ஈர்த்து வருகிறது. சாதி,சமய,ஏழை-
திரு. தலிம் அவர்கள் தம் உதவியாளருடன்
(Courtesy: Sai devotees Rohit Behal, Raghav Subramanian)

பணக்காரர், இன,மொழி,பால் வேறுபாடுகள் இன்றி எல்லோராலும் வழிபடப்பட்டு வருகிறது. அனைத்து மக்களுக்கும் பொதுவாக சமாதி மந்திரின் கதவு திறந்து வைக்கப்பட்டு பக்தர்கள் அதிகாலை முதலே வரிசையில் தினமும் நின்று தரிசனம் செய்துகொண்டே இருக்கின்றனர். உலகிலேயே  அதிகம் புகைப்படம் எடுக்கப்பட்ட மூர்த்தியாக இது உள்ளது. ஐந்தடி ஐந்து அங்குல உயரத்தில் 1952 - இல் ஆரம்பிக்கப்பட்ட இம்மூர்த்தி உருவாக்கம் 1954 - இல் முடிவடைந்து பிரதிஷ்டை செய்யப்பட்டது.

1954- ஆம் வருடம் அக்டோபர் மாதம் 7-ஆம் தேதி விஜயதசமி நாளில் நிறுவப்பட்டது இம்மூர்த்தி. பாபா மகா சமாதி அடைந்து 36 வருடங்கள் கழித்தே இம்மூர்த்தி அமைக்கப்பட்டுள்ளது.

பணி முடிவடையும் வேளையில்

1954 - ஆம் வருடம் அன்று திரு. தலிம் அவர்கள் தமது மூர்த்தியை செதுக்கி  உருவாக்கும் பணியை முடிக்கும் நேரம் நெருங்கியது. சாயிபாபாவின் மார்பள் சிற்பம் கிட்டத்தட்ட தயாராகிவிட்ட நிலையில் தலிமுக்கு ஒரு சவாலான தருணம் வந்தது.

அப்போது சாயி மூர்த்தியின் இடது முழங்கால் பகுதியில் காற்று வெற்றிடம் உருவாகி இருப்பதைக் கவனித்தார். இது எவ்வளவு கடும் விளைவை ஏற்படுத்தும் என்பது திரு. பாலாஜி தலிமுக்கு பதட்டத்தை உண்டாக்கியது. ஏன் என்றால் அரும்பாடுபட்டு உருவாக்கும் சிற்பத்தில் ஏதோ ஓர் பகுதியில் வெற்றிடம் ஏற்பட்டால் அது முழு சிற்பத்தையே பாதிக்கக் கூடும். மூர்த்தியில் குறை இருப்பின் அது வழிபட ஏற்றதாக இருக்காது. எனவே மேற்கொண்டு செதுக்குவதை தலிம் நிறுத்தி வைத்தார்.

இனிமேல் செதுக்கினால் முழு சிற்பமும் உடைந்துபோக நேரிடுமே என அஞ்சி வருந்தினார், இவ்வளவு ஆண்டு நேரமும், கடும் உழைப்பும் வீணாய்ப் போவதா என்று பதறினார். பாபாவிடம் அவர் " பாபா எனக்குக் கருணை காட்டுங்கள்.. உங்கள் மூர்த்தி தயாராகிவிட்டது. எனக்குக் கருணை காட்டுங்கள்.." என வேண்டினார். உடனே அதிசயத்தக்க விதத்தில் "பாலாஜி,
தொடர்ந்து செய் " என்று ஒரு குரல் கேட்டது. தனது உதவியாளர்களை கூப்பிட்ட திரு. தலிம் அவர்களையே செதுக்குமாறு கூறினார். இதற்கு அந்த தொழிலாளர்கள் சிற்பம்  உடைந்து விடுமே என பயந்து மறுத்து விட்டனர்.


(வரலாற்றுப் பயணம் தொடரும்)