Total Pageviews

Sunday, May 29, 2011

Biggest Statues

ஷீரடி சாயிபாபாவின் பிரம்மாண்ட சிலைகள் 
            ந்தியா முழுவதிலும், ஏன் - உலகம் முழுவதிலும் சாயி கோயில்கள் பெருகி வருகின்றன. விஷ்வ என்றால் சமஸ்கிருதத்தில் அகண்ட, பிரம்மாண்டமான, பிரபஞ்சம் எனப் பொருள்படும். ரூபம் என்றால் வடிவம்/தோற்றம்/உருவம். மகாபாரதக் காலத்தில் அர்ஜுனன் போன்றோருக்கு தமது விஷ்வரூபத்தைக் காண்பித்தார் கிருஷ்ணர். ராம, கிருஷ்ண அவதாரமாகவும் விளங்கும் நமது பாபாவின் மிகப்பெரிய உருவச்சிலைகளை பேரன்பு கொண்ட பக்தர்கள் பல ஊர்களில் நிறுவி வருகின்றனர். இந்தியாவின் ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் சாயி பக்தர்கள் லட்சக்கணக்கானோர் உள்ளனர். அவர்களில் ஒருவரான எல். விட்டல் ராவ் என்பவர் கிருஷ்ணா மாவட்டத்தில் 54 அடி உயர சிலையை நிறுவி உள்ளார்.

           அவர் அமைத்த சாயி மஹராஜ் தேவாலயம் மசூலிபட்டினம் அல்லது மச்சிலிபட்னம்  என்ற நகரில் உள்ளது. இந்த நகரம் ஹைதராபாத்திலிருந்து 347 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது. இந்த ஆலயம் பற்றிய சிறப்புக் காட்சி இதோ..



இந்தியாவின் மகாராஷ்டிர மாநிலத்தின்  மிகப்பெரிய பாபா சிலை 


மேலும் விவரங்களுக்கு : http://www.saimaharaj.org/

ஓம் சாயி ஸ்ரீ சாயி ஜெய ஜெய சாயி. 

Saturday, May 21, 2011

Baba in London

லண்டனில் ஷீரடி சாயி பாபா 


      வெளிநாடுகளில் ஒரு இந்து முறைப்படியான வழிபாட்டு ஸ்தலம் கட்டுவது ஒன்றும் சாதாரணமான விஷயம் அல்ல. எவ்வளவு பணம் திரட்ட முடிந்தாலும் வேறு பட்ட கலாச்சார சூழ்நிலையில் விதிமுறைகள் பற்றிய அறிவு,  பல்லின சமூகத்துடன் ஒற்றுமை உணர்வு, பொறுமை, விடாமுயற்சி, பேரார்வம், அறிவாற்றல், திறமை, கடும் உழைப்பு, கூட்டு முயற்சி, கடவுளின் பரிபூரண ஆசிகள்  ஆகியவை கூடுதலாக தேவைப்படும். யு கே என்று அழைக்கப்படும் பிரிட்டிஷ் நாட்டில் உள்ள லண்டன் மாநகரின் வெம்ப்ளி பகுதியில் ஷீரடி சாயி டெம்பிள் அசோசியேஷன் என்கிற அமைப்பினால் சாயி ஆலயம் அமைக்கப்பட்டு வெகு சிறப்பாக நிர்வகிக்கப்பட்டு வருகிறது. 

ஓம் ஓம் ஓம் சாயி




Baba in USA - Florida

அமெரிக்காவில் ஷீரடி சாயிபாபா - புளோரிடா மாநிலம் 

       காலஞ்சென்ற ராவ்ஜி என்கிற டாக்டர் கே. வி. ராகவராவ் குரு அவர்களின் தெய்வீக அகத் தூண்டுதலால் அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் ஒரு சாயி ஆலயம் அமைக்க வேண்டுமென்ற கருத்து உருப் பெற்றது. இந்த ஷீரடி சாயி புளோரிடா சென்டர் 1997 இல் அவரது சீடர்களான லூசியானாவைச் சேர்ந்த டாக்டர் ரத்னா தேவி மற்றும் டாக்டர் பூர்ண சந்திர எர்நேனி ஆகியோரால் அமைக்கப்பட்டது. இன்வர்நெஸ் (Inverness) என்ற எழில் வாய்ந்த சிறிய நகரத்தில் ஒரு பண்டக சாலையை வாடகைக்கு எடுத்து இம்மையத்தைத் துவங்கினர். இப் பகுதியில் மிகச் சில இந்தியக் குடும்பங்களே இருந்த போதிலும் பாபாவின் வழிகாட்டுதலால் திருமதி டாக்டர் ரத்னா தேவிக்கு மனதில் முன்னுணர்வு (premonition) ஏற்படவே இந்த இடத்தைத் தேர்வு செய்தார்.

பிறகு பல சாயி பக்தர்களின் பேராதரவோடு நிரந்தர இடத்தில் கோயில் கட்ட முடிவு செய்து நிலத்தையும் நன்கொடையாக வழங்கினார்கள். 2002  இல் சாயி மையம் இப்போதுள்ள இடத்திற்கு மாற்றப்பட்டது. புளோரிடாவின் பல பகுதிகளிலிருந்தும் பக்தர்கள் வரத் தொடங்கியதால் 2004 இல் கட்டுமானப் பணிகள் தொடங்கி மார்ச் 25 , 2005 அன்று மூர்த்தி பிரதிஷ்டை (நிறுவுதல்) செய்யப் பட்டது. இந்த திறப்பு விழாவில் இரண்டாயிரத்துக்கும் மேலான பக்தர்கள் கலந்து கொண்டு பகவானின் பேரருள் பெற்றனர். இப்போது இந்த ஆலயம் பல பக்தர்களை ஈர்க்கும் புனித ஸ்தலமாக சிறப்புடன் விளங்கி வருகிறது.



 

ஓம் சாயி ஸ்ரீ சாயி ஜெய ஜெய சாயி 

Friday, May 20, 2011

Sai Subramaniam - My Experience

 சாயிநாதரே சுப்ரமணியம் 

முருகனை எனக்கு சிறுவயதிலிருந்தே மிகவும் பிடிக்கும். பழனி முருகன் பல சமயங்களில் அருள் புரிந்துள்ளார். ஆனால் நன்கு மன விசாலமடைந்து, சாயி பக்தியை வளர்த்துக்கொண்டு இருக்கும்போது ஒரு குழப்பம் வந்தது. யாமிருக்க பயமேன்? என்ற புகழ் மிக்க வாசகம் முருகனுடையது. அதே வாசகத்தை தமது அவதார வாழ்வில் ஷீரடி பாபாவும் கூறியுள்ளார். கோடானு கோடி பக்தர்களின் துயர் துடைக்கும் தெய்வமான பாபாவும் முருகனும் ஒன்றா? சிவசக்தியின் குழந்தையே சுப்பிரமணியம். அவ்வாறே பாபாவும் விளங்குவதால், அசுர சக்திகளிடமிருந்து நம்மைக் காப்பதால் முருக அவதாரமாக இருப்பாரோ பாபா? என்றெல்லாம் யோசித்துக் கொண்டே இருந்த போது சில வியப்புக்குரிய விஷயங்கள் நடந்தன. 

நடு இரவில், ஒரு நாள். ஒரு கடினமான தேர்வுக்குப் படித்துக் கொண்டு இருந்தபோது எனது பற்களின் ஈற்று பகுதி பலூன் போல வீங்கி வலி தாங்க முடியவில்லை. ஏதோ பாக்டீரியாக்களின் தொற்றுதலால் அது போல வருமாம். அந்த கொடுமையான தருணத்தில் என்னிடம் ஷீரடி உதி அதாவது பாபாவின் திருநீறு இல்லை. ஆனால் புகழ் பெற்ற பழனி சித்தனாதன் ஜவ்வாது விபூதி இருந்தது. பாபாவும் முருகனும் ஒன்றே என்று நினைத்துக்கொண்டு ஷீரடி உதியே இந்த பழனி விபூதி என்று மனதில் சொல்லிக்கொண்டேன். சிறிது விபூதியை எடுத்து பல் ஈறுகளில் வாயின் உள்ளே தடவினேன். ஜில்லென்று ஒரு உணர்வு இருந்தது. அதிசயத்தக்க விதத்தில் வலி குறைந்து படித்து விட்டு நிம்மதியாக படுத்தேன். மறுநாள் டாக்டரிடம் செல்ல வசதியாக இருந்தது. இந்த நிகழ்ச்சியின் மூலம் சாயி நாதரே சுப்பிரமணியம் என நம்பிக்கை ஏற்பட்டது. 

இன்னொரு நாள், இணையத்தில் ஆராய்ந்து கொண்டு இருந்தபோது, ஒரு வியப்பான செய்தியைப் பார்த்தேன். சென்னையைச் சேர்ந்த சந்திர மோகன் என்ற ஷீரடி சாயி பக்தர் தமது உடம்பில் 108 அலகு குத்தி வேல் காவடியுடன் முப்பது நாட்கள் நடந்தே ஷீரடி சென்று தரிசித்துள்ளார். முப்பத்தைந்து கிலோ எடையுள்ள வேல் காவடியுடன் சென்னை முதல் ஷீரடி வரை  நடந்தே சென்று  தமது பக்தி சிரத்தையை வெளிப்படுத்தி உள்ளார். அவர் ஷீரடி சமாதி அரங்கில் உள்ளே நுழையும்போது இவரைக் கண்ட மக்கள் பக்தி சிலிர்ப்புடன் "ஸ்ரீ சாய்நாத் மகாராஜ்கி ஜெய்" என்று முழக்கமிட்டனர். சாயிநாதரும் முருகப்பெருமானும் நம்பிக்கை உள்ளவர்களுக்கு ஒன்றே !

எனவேதான் பாடகர் வீரமணி அவர்களும் சுப்ரமண்யம் சுப்ரமண்யம் சாயிநாதனே சுப்ரமண்யம் என்று பாடுவார்.

<"https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh_mJ7vvkaLO3cVfdPAr4jp8u_ulOgE4xOmLABSNEQ3iUG9ByrrO4Tr8iSCo4NTuIAaxOtqFYWbOATR1DmWh8aWx-EL6jQzJR_8Z8jME0BaRxOrW_DnLTcfWSPjmaWORv8-RjLsx60uVZ4/s1600/mmmmmmmmmmmm.JPG" href="https://www.blogger.com/null" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;">


ஓம் சாயிமுருகா போற்றி.


Saturday, May 14, 2011

VIPs Visit to Shirdi


பிரபல  ஹிந்தி  திரைப்படப் பாடகர்  குமார் சானு ஷீரடி சமாதியில் தரிசனம்  செய்கிறார்